தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடித்த புலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை அவ்வளவு எளிதாக யாரும் மறக்க முடியாது.
இதில் கலந்துக் கொண்ட டி.ராஜேந்தர், விஜய்யே போதும் என்று சொல்லும் அளவுக்கு புகழ்ந்து தள்ளினார்.
அதன்பின்னர் தெறி படத்திற்கும் ஆடியோ வெளியிட்டு விழா நடைபெற்றது.
எனவே விரைவில் வெளியாகவுள்ள பைரவா படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் விழா எதுவும் வேண்டாம்.
இணையத்தில் வெளியிட்டு விடலாம் என விஜய் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் என்ன செய்யலாம்? என தயாரிப்பு தரப்பில் யோசித்து வருகிறார்களாம்.