50CENT Final Lap Tour : விஜயகாந்த் மகன் செய்யப் போகும் ஹிப்-ஹாப் புரட்சி

50CENT Final Lap Tour : விஜயகாந்த் மகன் செய்யப் போகும் ஹிப்-ஹாப் புரட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், அனைவராலும் கேப்டன் என்று அறியப்படும் விஜயகாந்த்-இன் மகன் விஜய பிரபாகரன் இந்தியாவில் பொழுதுபோக்கு துறையின் எல்லைகளை மாற்றியமைக்க டராக்டிகல் கான்சர்ட்ஸ் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறார்.

இந்த கூட்டணியின் மூலம் மும்பையில் நடைபெற இருக்கும் முதல் கான்சர்ட்-இல் பிரபல ஹிப்-ஹாப் கலைஞரான 50-சென்ட் கலந்து கொள்கிறார். இவரது நிகழ்ச்சிகளுக்கு உலகளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான கிராமி மற்றும் எம்மி விருதுகளை வென்ற புகழ்பெற்ற கலைஞர் கர்டிஸ் 50 சென்ட் ஜாக்சன் தனது உலகளாவிய இசைக்கச்சேரி “The Final Lap Tour 2023” இந்தியாவில் நவம்பர் 25 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்த வரலாற்று நிகழ்வு இசைக் கச்சேரியானது 50 சென்ட்-இன் “Get Rich or Die Tryin” ஆல்பத்தின் 20-ஆவது ஆண்டு விழாவை குறிக்கிறது. இந்த நிகழ்ச்சி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் அரங்கில் நடைபெற உள்ளது.

நேரடி பொழுதுபோக்கு, திரைப்பட தயாரிப்பு மற்றும் கலைஞர்கள் ஒருங்கிணைப்பு துறையில் புகழ் பெற்று விளங்கும் விஜய பிரபாகரனின் வி.ஜெ.பி. (VJP) மற்றும் டராக்டிகல் (Tracktical) கான்சர்ட்ஸ் என்ற இரு முன்னணி பொழுதுபோக்கு நிறுவனங்கள் இணைந்து 50 சென்ட்-இன் வரலாறு, பிரபல பாடல்கள் மற்றும் அதிகம் எதிர்பார்க்கப்படும் பாடல்கள் உள்ளிட்டவைகளை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞர்களும் கலந்து கொண்டு பாட உள்ளனர்.

தன்னிகரற்ற பாடல் வரிகளை எழுதுவதில் புகழ்பெற்ற 50 சென்ட், முதன் முதலில் வெளியிட்ட “Get Rich or Die Tryin” பட்டித்தொட்டி எங்கும் சென்றடைந்து, இசை உலகில் நீங்கா இடம் பிடித்தது.

இந்த ஆல்பம் இவரது புகழை சர்வதேச அளவில் கொண்டு சேர்த்தது. இந்த ஆல்பத்தில் உள்ள “In da club,” “p.i.m.p,” மற்றும் “candy shop” போன்ற பாடல்கள் இன்றும் கலாச்சார புரிதல், ஆழமான கதையம்சம் மூலம் ரசிகர்களை இன்றும் கவர்ந்து வருகிறது.

இந்தியாவில் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குறித்து பேசிய 50 சென்ட்…

” நான் இந்தியாவுக்கு வந்து 16 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2007 ஆம் ஆண்டு இந்தியா வந்திருந்தேன். எப்போதும் போல் கடந்த முறையும் எனது இந்திய பயணம் அன்பால் நிறைந்திருந்தது. Final Lap Tour நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நவம்பர் மாதம் இந்தியாவுக்கு வர இருக்கிறேன், என்று தெரிவித்தார்.

டராக்டிகல் கான்சர்ட் யின் சிஇஓ ஆன வம்சிதரன் கௌதம ராஜன் இதற்கு முன்பாக சர்வதேச ஹிப் ஹாப் ஆர்டிஸ்ட் ஆகிய ப்ளாரிடாவை முதன் முறையாக சென்னைக்கு அழைத்து வந்து கான்சர்ட் செய்தவர். அதுமட்டுமில்லாமல் சர்வதேச புகழ்பெற்ற கிராமி மற்றும் எமி விருந்தினரான ஏகான் அவர்களை நம் தமிழில் லவ்வந்தம் பாடலுக்காக இணைந்து பணியாற்ற வைத்த புகழ் இவரை வந்து சேரும்.

இது இல்லாமல் பல சர்வதேசிய கலைஞர்களுடன் ஷோஸ் செய்த பெருமையும் வம்சிதரன் கௌதமராஜனுக்கு கொண்டு சேரும்.

விஜயகாந்த்-இன் மகன் விஜய பிரபாகரன் கூறும்போது…

திரை மற்றும் கலை உலகில் எனது தந்தை கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு ஒரு தனி அடையாளம் உள்ளது. அதை முன் எடுத்துச் செல்லும் வழியில் எனது இந்த முயற்சி புதிதாகவும் மற்றும் கலை துறையில் ஒரு மாறுபட்ட தொடக்கமாக இருக்கும் என்று கூறினார்.

விஜய பிரபாகரன்

Vijaya Prabhakarans VJP & Tracktical Concerts Announce Arrival of 50 Cent To India

மொய்தீன் பாய் பேக் அப்.; ரஜினியுடன் முதன்முறையாக இணைந்த 1980 டபுள் ஹீரோயின்ஸ்.; காரைக்காலில் ‘லால் சலாம்’

மொய்தீன் பாய் பேக் அப்.; ரஜினியுடன் முதன்முறையாக இணைந்த 1980 டபுள் ஹீரோயின்ஸ்.; காரைக்காலில் ‘லால் சலாம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பக்கம் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து கொண்டிருந்தபோதே மற்றொரு பக்கம் ‘லால் சலாம்’ என்ற படத்திலும் நடித்து வந்தார் ரஜினிகாந்த்.

இதில் ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் இன்று ஜூலை 12ஆம் தேதி ‘லால் சலாம்’ படத்தில் தனக்கான பட காட்சிகளை ரஜினிகாந்த் முடித்து விட்டதாக பட குழுவினர் அறிவித்து புதிய போடடோவை வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தில் ரஜினியின் மூத்த மகளும் லால்சலாம் படத்தின் இயக்குனருமான ஐஸ்வர்யா அருகில் உள்ளார். மேலும் இந்த படத்தில் முதன்முறையாக ரஜினிகாந்துடன் இணைந்துள்ள நடிகை ஜீவிதா ராஜசேகரும் அருகில் இருக்கிறார். இதில் ரஜினியின் தங்கையாக நடிகை ஜீவிதா நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமிய கேரக்டரில ரஜினி நடித்து வருவது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ரஜினிக்கு ஜோடியாக நடிகை நிரோஷா நடித்து வருகிறார் என்பதும் கூடுதல் தகவல்.

ஜீவிதா மற்றும் நிரோஷா ஆகிய இருவரும் 1980-90களில் முன்னணி நாயகிகளாக விளங்கினர். இவர்கள் தற்போது தான் முதன்முறையாக ரஜினியுடன் இணைந்து நடித்து வருகின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ரகுமான் இசையமைத்து வருகிறார். மும்பை, புதுச்சேரி, செஞ்சி & திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் லால் சலாம் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் ஐஸ்வர்யா.

கதையின் நாயகர்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்த வருகின்றனர்.

இத்துடன் ரஜினிகாந்த் இல்லாத காட்சிகளை நாளை ஜூலை 13 முதல் காரைக்காலில் படமாக்க உள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

Moideen Bhai portion wrapped Laal Salaam shoot at Karaikal

மதப்பிரச்சினையை தூண்டிய ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது.; பா.கோட்டை சிறைக்கு மாற்றம்

மதப்பிரச்சினையை தூண்டிய ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது.; பா.கோட்டை சிறைக்கு மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளருமானவர் கனல் கண்ணன்.

இவர் இந்து மதத்திற்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்ற பெயரில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

கனல் கண்ணன் சமீபத்தில் ட்விட்டர் பதிவில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார்.

அதில், மத போதகர் அணியும் உடையுடன் வெளிநாட்டை சேர்ந்த நபர் ஒருவர், இளம் பெண்ணுடன் நடனமாடும் வீடியோவும், அதன் பின்னணியில் தமிழ் திரைப்பட பாடலும் இணைக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் அதில் வெளிநாட்டு மத கலாசாரம் இது தான் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனை பார்த்த குமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஆஸ்டின் பெனட் (54) என்பவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

இந்நிலையில், திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதன்பின்னர் மதப் பிரச்சனையை தூண்டும் வகையில் பதிவிட்டதற்காக, கைது செய்யப்பட்டார் சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன். இதனையடுத்து நீதிமன்ற காவலில் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். பாதுகாப்பு கருதி அவர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டதாக, காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Stunt choreographer Kanal Kannan arrested remanded to jail custody

நீங்கள் கொடுக்கும் விலைக்கு ‘கொலை’ மதிப்பானது.. – ஜான்விஜய்

நீங்கள் கொடுக்கும் விலைக்கு ‘கொலை’ மதிப்பானது.. – ஜான்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி செளத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘கொலை’.

இந்த படம் ஜூலை 21ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்

நடிகர் ஜான் விஜய் பேசியதாவது…

“மிஷ்கின் சொன்னது போல, படத்திற்காக படக்குழு எவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளார்கள் என்பது தெரிகிறது. இந்தப் படத்தில் நான் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நீங்கள் கொடுக்கும் விலைக்கு ‘கொலை’ மதிப்பானது”.

நடிகை மீனாட்சி செளத்ரி பேசியதாவது…

“தமிழில் இது எனக்கு முதல் படம் என்பதில் மகிழ்ச்சி. இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் என அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பு எனக்கு கொடுத்தனர்.

இந்தப் படம் பாசிட்டிவான கற்றுக் கொள்ளும் அனுபவமாக அமைந்தது. தியேட்டரில் வந்து அனைவரும் படம் பாருங்கள்”. என்றார்.

Kolai movie will be worth for your paisa says John Vijay

தமிழைத் தாண்டி தெலுங்கிலும் பிசினஸ் பாருங்க..; சக்திக்கு விஜய்ஆண்டனி அட்வைஸ்

தமிழைத் தாண்டி தெலுங்கிலும் பிசினஸ் பாருங்க..; சக்திக்கு விஜய்ஆண்டனி அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி செளத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘கொலை’.

இந்த படம் ஜூலை 21ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்

சக்தி ஃபிலிம் பேக்டரி சக்தி பேசியதாவது…

“போர் தொழில்’ படத்திற்கு பிறகு இந்தப் படம் எனக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும் என பலரும் நம்பிக்கைக் கொடுத்தனர்.

இந்தப் படத்திற்காக கடின உழைப்பை விஜய் ஆண்டனி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டைத் தாண்டி ஆந்திர பிரதேசத்தில் பிசினஸ் பாருங்கள் என்று என்மீது நம்பிக்கையாக கொடுத்தர் விஜய் ஆண்டனி. அவருக்கு நன்றி” என்றார்.

Spread your business in Telugu states too Vijay advise to Sakthi

‘கொலை’ செய்யப்பட்ட ஒருவனின் வலியை எப்படி புரிந்து கொள்வோம்.? – மிஷ்கின்

‘கொலை’ செய்யப்பட்ட ஒருவனின் வலியை எப்படி புரிந்து கொள்வோம்.? – மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி செளத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘கொலை’.

இந்த படம் ஜூலை 21ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்..

இயக்குநர் விஜய் பேசியதாவது…

“கொலை’ படம் மிக நன்றாக வந்துள்ளது. படத்திற்கு நானும் ரசிகர்கள் போல காத்திருக்கிறேன். வாழ்த்துகள்”

இயக்குநர் லிங்குசாமி பேசியதாவது…

“விஜய் ஆண்டனியுடன் எனக்கு நேரடியாக பழக்கமில்லை. ஆனால், விஜய் மில்டனும், சசியும் அவர் மீது எனக்கு மிகப் பெரிய மரியாதையை ஏற்படுத்தியுள்ளனர்.

இசையமைப்பாளராக ஆரம்பித்து இப்போது இயக்குநராக நம்பிக்கையோடு வளர்ந்துள்ளார். அவரது நம்பிக்கைக்கு படம் நிச்சயம் வெற்றிப் பெறும்”. என்றார்.

இதில் நடிகர் மிஷ்கின் பேசியதாவது…

“’கொலை’ படத்தின் டிரெய்லர் அருமையாக இருந்தது. சினிமா என்பது கூத்து என்ற கலையில் இருந்துதான் வந்தது.

சினிமா எனும் கலையை புரிந்து இயங்குபவர்கள் இங்கு குறைவு. என்னைப் பார்ப்பவர்களே அடுத்து என்ன சார் கொலை படமா என்று கேட்பார்கள். அப்படி என் படங்களை சுருக்கி விட்டார்கள்.

‘கொலை’ என்ற இந்தப் படத்தின் டைட்டில் எழுத்துக்காக (Font) இயக்குநர் அவ்வளவு மெனக்கெட்டுள்ளார். ஒரு நல்ல இயக்குநர் படத்தலைப்பின் ஃபாண்ட் மூலமாக பார்வையாளர்களுக்கு கதை சொல்ல முடியுமா என்று யோசிப்பான்.

ஒரு மனிதன் ஏன் கொலை செய்கிறான்? உடல் முழுவதும் கத்தியால் குத்தப்பட்டு இருக்கும் ஒருவனின் வலியை நாம் எப்படி புரிந்து கொள்வோம்?

அப்படி ஒரு இடத்திற்கு ஒரு மனிதன் உந்தப்படுவான் என்றால் அவன் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளான் என்று அர்த்தம்.

மகாபாரதம், ராமாயணம் என இதிகாசங்களில் கொலை. ஷேக்ஸ்பியரின் நாவல்களில் நான்கு கொலை பற்றிதான் சொல்கிறது. அது ஏன் என்று யோசிப்பவர்களால்தான் இதுபோன்ற படங்களை உருவாக்க முடியும். அந்த வகையில், இயக்குநர் பாலாஜிக்கு நன்றி.

தொடர்ந்து அவர் கொலை படங்கள் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். என்னிடம் ஜாலியான ரெமாண்டிக் காமெடி படங்கள் எடுக்க மாட்டீர்களா எனக் கேட்கிறார்கள். அப்படி செய்வதற்கு நான் தற்கொலை செய்து கொள்வேன். அது எனக்கு போர்.

ஒவ்வொரு கொலை படத்திலும் ஒரு கொலைகாரனுக்குப் பின்னால் ஒரு மர்மமுடிச்சு அவிழ்க்கப்படாமல் இறுக்கமாக உள்ளது. அதை விசாரித்து இயக்குநர் ஒரு சிறந்த படமாக தரும்போது அது வெற்றிப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை”.

Director mysskin explains about variety of murder

More Articles
Follows