தவறான தகவலை ரசிகர்களுக்கு விஜய் தரக்கூடாது..- பாஜக பி.டி.அரசகுமார்

தவறான தகவலை ரசிகர்களுக்கு விஜய் தரக்கூடாது..- பாஜக பி.டி.அரசகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay should not give wrong information to his fans says BT Arasakumar from BJPவெற்றி மகாலிங்கம் இயக்கியுள்ள “விசிறி” படத்தின் இசை மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் இனிதே நடைபெற்றது.

இப்படத்தில் அறிமுக நாயகர்களாக ராஜ் சூர்யா, ராம் சரவணா நடிக்க, இவர்களோடு தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இசையமைப்பாளர்களாக தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத், நவீன் ஷங்கர் ஆகிய மூவர் பணியாற்றியிருக்கிறார்கள்.

இதன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமாகிய எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர் தனஞ்செயன், நடிகர் ஆரி, பாடலாசிரியர் மதன் கார்க்கி, மற்றும் தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பி.டி.அரசகுமார் பேசியதாவது…

“மோடி அரசும், தமிழக பாஜகவும் சினிமாவில் கருத்து சுதந்திரத்தில் கை வைப்பதாக சொன்னதற்கு முதலில் பதில் சொல்லி விடுகிறேன்.

தம்பி விஜய் எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர். அவருக்குத் தமிழகமெங்கும் பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் ஒரு விசயத்தைப் பேசுகிறார் என்றால் அது வெகு சீக்கிரமாக மக்களை சென்றடைகிறது.

இப்படி இருக்கும் சூழலில் தம்பி விஜய்யால் ஒரு தவறான கருத்து வெளியில் சென்றுவிடக் கூடாது என்பதால்தான் நாங்கள் மெர்சல் படத்தில் அவர் பேசிய வசனங்களை எதிர்த்தோம்” என்றார்.

Vijay should not give wrong information to his fans says BT Arasakumar from BJP

தயாரிப்பாளரின் தற்கொலையால் தீரன்-ரிச்சி எடுத்த திடீர் முடிவு

தயாரிப்பாளரின் தற்கொலையால் தீரன்-ரிச்சி எடுத்த திடீர் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

theeran richieநடிகர் சசிகுமாரின் உறவினரும் கம்பெனி புரொடக்சனின் தயாரிப்பாளருமான அசோக்குமார் தற்கொலை செய்துக் கொண்டார்.

இதனால் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரையுலகினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி விழாவை ரத்து செய்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விழா மற்றொரு நாள் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோல் இன்று நடைபெற விருந்த ரிச்சி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ரத்து செய்துள்ளனர்.

இந்த படக்குழுவினர் நாளை இசை வெளியீட்டு விழாவை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

அசோக் தற்கொலைக்கு காரணமான அன்பு தண்டிக்கப்பட வேண்டும்… சுசீந்திரன்

அசோக் தற்கொலைக்கு காரணமான அன்பு தண்டிக்கப்பட வேண்டும்… சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director suseenthiranதிரைப்பட இணை தயாரிப்பாளராகவும், நடிகர் சசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்த அசோக் குமார் நேற்று (செவ்வாய்க்கிழமை) தற்கொலை செய்து கொண்டார்.

கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் ஒருவர் மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். அசோக்குமார் தற்கொலை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அசோக்குமார் தற்கொலை குறித்து இயக்குநர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அசோக் அண்ணனின் மரணம் என்னை பெரிதும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதற்கு காரணமான ‘மதுரை அன்பு’ தண்டிக்கப்பட வேண்டும். மதுரை அன்பு வால் நடந்து கொண்டிருக்கும் தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும். சசிகுமார் அண்ணனுக்கு கதிர் சாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

தயாரிப்பாளர்களை மிரட்டும் கந்துவட்டி நபர்களை எச்சரிக்கும் விஷால்

தயாரிப்பாளர்களை மிரட்டும் கந்துவட்டி நபர்களை எச்சரிக்கும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vishalகந்துவட்டி கொடுமையால் நடிகர் சசிகுமாரின் உறவினர் தற்கொலை செய்துக் கொண்டார்.

இதுகுறித்து நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் கூறியுள்ளதாவது…

கந்துவட்டி அடாவடி கும்பலின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் தயாரிப்பாளர் அசோக் குமார் பலியானார் என்பதை அறிந்ததும் கடும் வேதனை அடைந்தேன்.

இதுவரை பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது கந்துவட்டி இன்று திரைத்துறையிலும் ஒரு உயிரை பலி வாங்கியிருக்கிறது.

எந்த ஒரு பிரச்னைக்குமே தற்கொலை தீர்வாகாது.

கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்கள் உடனடியாக சங்கத்தை அணுகினால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி காப்பாற்ற தயாராக இருக்கிறோம்.

விரைவில் இந்த கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம். தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

சக தயாரிப்பாளர்கள் பிரச்னை இல்லாமல் தொழில் புரிய கூடிய சூழ்நிலை உருவாகத் தான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.

எந்தவித அச்சுறுத்தலோ மிரட்டலோ இருந்தால் உடனடியாக எங்களை அணுகவும்.
பொறுத்தது போதும்.

கூட்டமைப்பு என்ற பெயரில் தயாரிப்பாளர்களை மிரட்டும் கந்துவட்டி கும்பலுக்கும் கட்டப்பஞ்சாயத்து நபர்களுக்கும் நேரடி எச்சரிக்கை விடுகிறேன். இனியாவது திருந்தி தமிழ் சினிமாவில் இருந்து ஓடி விடுங்கள்.

இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.இது நேர்மையாக தொழில் செய்யும் அனைத்து தயாரிப்பாளர்களின் முடிவு.
காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்.

இது தற்கொலைஅல்ல.கொலை. இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவரையும் உடனடியாக காவல்துறை கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்களோ அல்லது தயாரிப்பாளர்களோ, நேர்மையான அசோக் குமார் போல இன்னொரு அப்பாவி பலியாகாத அளவுக்கு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.

– விஷால்
தலைவர்,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

சசிகுமாரின் உறவினர் தற்கொலைக்கு காரணமான அன்பு செழியன் யார்?

சசிகுமாரின் உறவினர் தற்கொலைக்கு காரணமான அன்பு செழியன் யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer GN AnbuChezhiyan background news updatesதற்கொலை செய்து கொண்ட அசோக்குமார் குறிப்பிட்டுள்ள மதுரை அன்பு செழியன் யார்? என்பது பற்றிய ஒரு பார்வை இதோ…

பைனான்சியர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் மதுரை அன்பு செழியன்.

இன்றைய ஆட்சிப் பொறுப்பில் அதிமுகவின் ஒரு சில முக்கிய அமைச்சர்களுக்கு மிக நெருக்கமானவர். ஒன்றுபட்ட அதிமுகவில் மதுரை நகர் மாவட்டத்தில் பொறுப்பில் இருந்தவர்.

கடந்த தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் மதுரை கிழக்கு, வடக்கு சட்டமன்ற தொகுதியில் சீட் வாங்க கடும் முயற்சி செய்தார். உளவுத் துறை குற்றப் பின்ணனி உள்ளளவர் அன்பு செழியன் என்று இவர் பற்றி கொடுத்த தகவலை ஆய்வு செய்த அன்றைய அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா அன்பு செழியனுக்கு சீட் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை செய்துக் கொண்ட அசோக்குமார் அவர்களும் அன்பு செழியனின் அரசியல் பலம் குறித்து தன் வாக்குமூல கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

Producer GN AnbuChezhiyan background news updates

கந்துவட்டி கொடுமையால் நடிகர் சசிகுமார் உறவினர் அசோக் தற்கொலை

கந்துவட்டி கொடுமையால் நடிகர் சசிகுமார் உறவினர் அசோக் தற்கொலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sasikumarசசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு நிர்வாகியான அசோக் குமார், கடன் பிரச்னை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பைனான்சியர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர் மதுரை ஜிஎன் அன்புச் செழியனிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததாலேயே தற்கொலை செய்து கொள்வதாக அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தை இங்கே அப்படியே பதிவிட்டுள்ளோம்.

‘என்னை கோழை, சுயநலக்காரன் என்று எதுவேனும் சொல்வீர்கள். எனக்கு இரண்டு வழிதான் இருந்தது. 1. கொலை, 2. தற்கொலை. கொலைகாரன் ஆகும் தைரியம் இருந்தாலும், கொலை செய்யப்படுபவர் குடும்பம் பாவம். நல்ல பெற்றோர், நல்ல உடன்பிறந்தோர், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள் இருந்தும், நான் அவர்களுக்கு நல்ல மகனாகவோ, சகோதரனாகவோ, கணவனாகவோ, தகப்பனாகவோ இல்லை.

எனக்கு, சசிகுமார் கடவுளைவிட நல்ல முதலாளியாக இருந்தான். எனக்கு எல்லா சுதந்திரமும், அதிகாரமும் கொடுத்தான். நான் கம்பெனியை கடனில் நிறுத்தியுள்ளேன். சசிக்கு நல்லது மட்டுமே செய்யத் தெரியும். ஆனால், அவனுக்கு யாரும் நல்லது செய்யவில்லை.

இதுவரை பத்து ஆண்டுகளில் எங்கள் எல்லா தயாரிப்பு படத்தையும் சரியான தேதியில் வெளியிட்டோம். நாங்கள் செய்த பெரிய பாவம், ஜி.என்.அன்புச்செழியனிடம் கடன் வாங்கியது.

வட்டி, வட்டிக்கு மேல் வட்டி என்று கடந்த ஏழு வருடங்கள் வாங்கியவர். கடந்த ஆறு மாதமாக மிகவும் கீழ்த்தரமாக நடத்த ஆரம்பித்தார். வேற்று ஆட்களை வைத்துக்கொண்டு என் வீட்டுப் பெண்கள், பெரியவர்களைத் தூக்கி வருவேன் என்றார்.

யாரிடம் உதவி கேட்பது? அதிகார வர்க்கம் (காவல்துறை), அரசாங்கம் ஆள்வோரின் பெரும்புள்ளிகள், சினிமா பெடரேஷன் தலைவர் செல்வின் ராஜ் என சகலமும் அவர் கையில். அவரை ஒன்றும் செய்ய முடியாது. கடவுளுக்கு, அவரைத் தண்டிப்பது மட்டும் வேலை இல்லையே…

எனது உயிரினும் மேலான சசிகுமாரா… என்னால், உன்னை இவர்கள் எல்லாம் சித்ரவதை பண்ணுவதை என்னால் சகிக்க முடியவில்லை. உன்னை அவர்களிடம் இருந்து மீட்பதற்குத் திராணி இல்லாததால்தான் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்.

என்னை மன்னித்துவிடு. நீ ரொம்ப நல்லவன், நீ நல்லா இருக்கணும். என் சாவை வைராக்கியமாக எடுத்துக்கொள். என்னைப்போல் நீ கோழை ஆகிவிடாதே.

எத்தனையோ பேரை வாழவைத்த நீ, கண்டிப்பாக நல்லபடியாக வாழவேண்டும். இந்த சூழ்ச்சிக்காரர்களிடம் உன்னை விட்டுப் போகிறேன். மன்னித்துவிடு சசி, என்னை நினைத்துப் பார்க்காதே.

நீ நிறைய உழைத்திருக்கிறாய். நீ சுயம்பு. என்னைக் காப்பாத்தாத கடவுள், உன்னையும், நமது குடும்பத்தையும் காப்பாற்றுவான். என்னால் அன்புச்செழியன் போன்ற சூழ்ச்சிக்காரர்களையும், ஈவு இரக்கமற்றவர்களையும் எதிர்கொள்ள முடியவில்லை.

எனக்கு வாழத் தகுதி இல்லையா? வாழ வழி இல்லையா? என்று தெரியவில்லை. அதனால், எனது சாவை நானே தற்கொலை மூலம் தேடிக்கொள்கிறேன்.

அப்பா, அம்மா, சின்னத்தாயி, ராஜப்பா, வனிதா, அர்ச்சனா, சக்தி, ப்ரார்த்தனா, சித்து, சாத்விக் நீங்கள் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டாம். சட்டென்று மறந்துவிடுங்கள், இதுவரை உங்களுக்கு எதுவும் செய்யாத என்னை, உங்கள் நினைப்பில் இருந்து தூக்கி எறியுங்கள். 43 வருஷம் யாருக்கும் பயன் இல்லாத ஒரு ஜந்து போவதைப் பற்றி கவலைப்படாதீர்கள். சசியை பார்த்துக் கொள்ளுங்கள். அவன் பாவம், அவன் குழந்தை.

எதிலும் ஜெயிக்காத நான், எனது தற்கொலையில் தோற்க மாட்டேன் என்று நம்புகிறேன்’ இப்படிக்கு பா. அசோக் குமார் என்று கையெழுத்திட்டு, அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் முழுப்பெயரையும் எழுதியுள்ளார்.

பின்னர், முக்கியக்குறி போட்டு பின்வருபனவற்றை எழுதியிருக்கிறார் அசோக் குமார். ‘யாரேனும் ஜி.என்.அன்புச்செழியனுக்கு சொல்லுங்கள். அதிகாரம், அரசு எல்லாவற்றையும் அவர் சமாளிக்கலாம். தனியே இருக்கையில் என்றேனும் தனது மனசாட்சியுடன் பேசச் சொல்லுங்கள். (இந்தக் கடிதம் கூட வெளியே தெரியாமல் அழிக்கும் வித்தை அவருக்குத் தெரியும். நீடூழி வாழ்ந்துவிட்டு அவர் மட்டும் இருக்கட்டும்)’ என்று எழுதி, மறுபடியும் கையெழுத்திட்டுள்ளார்.

அதற்கு கீழே, (என் உடம்பில் உள்ள தழும்புகள் கடந்த சில காலமாய் எனக்கு நானே ஏற்படுத்திக் கொண்டது) என்று குறிப்பிட்டு, அதன் கீழும் தமிழில் கையெழுத்திட்டுள்ளார் அசோக் குமார்.

இந்தக் கடிதம், படிப்பவர்கள் மனதை கலங்கடிக்க வைக்கிறது.

தற்போது அன்பு செழியன் மீது நடிகர் சசிகுமார் வழக்கு பதிவு செய்துள்ளார். எனவே அன்பு செழியன் தலைமறைவு ஆகிவிட்டதாக கூறப்டுகிறது.

இதனையடுத்து சென்னை போலீஸ் மதுரைக்கு சென்று அவரை தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Actor Sasikumars Cousin Commits Suicide Blames Loanshark

ashok kumar anbu cheziyan

More Articles
Follows