விக்ராந்த் நடிக்கும் புதிய படத்திற்கு திரைக்கதை- வசனம் எழுதும் விஜய் சேதுபதி

விக்ராந்த் நடிக்கும் புதிய படத்திற்கு திரைக்கதை- வசனம் எழுதும் விஜய் சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi and sanjeevவிக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பெறுவதற்காக ஏராளமான திறமையுடன் கடுமையாக உழைத்து வருபவர் நடிகர் விக்ராந்த்.

இவர் தற்போது வெண்ணிலா கபாடி குழு=2, சுட்டு பிடிக்க உத்தரவு, பக்ரீத் என பல படங்களில் நடித்து வருகிறார்.இதைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்குகிறார் இயக்குநர் சஞ்ஜீவ்.

இது குறித்து படத்தை இயக்கவிருக்கும் இயக்குநரும், விக்ராந்தின் சகோதரருமான சஞ்ஜீவ் பேசுகையில்,‘ 2015 ஆம் ஆண்டில் விக்ராந்த் நாயகனாக நடித்த ‘தாக்க தாக்க’ என்ற படத்தை இயக்கினேன்.

இதைத் தொடர்ந்து சில ஆண்டுகள் கழித்து, நடிகர் விஜய் சேதுபதி சார் அவர்களைச் சந்தித்தேன். அவரிடம் ஒரு கதையின் சுருக்கமான வடிவத்தைச் சொன்னேன். அதைக் கேட்டதும், மிக நன்றாக இருக்கிறது. இது விக்ராந்திற்கு பொருத்தமாக இருக்கும் என்று சொல்லியதுடன், இதற்கு நான் வசனம் எழுதவா…?என கேட்டார்.

அவர் இருக்கும் பிசியான ஷெட்யூலில் அது எப்படி சாத்தியம்? என்று எண்ணிக் கொண்டிருந்த போது, அவரே கிடைக்கும் நேரங்களில் பணியாற்றலாம் என்று கூறினார். சொன்னபடி அவர் நடிக்கும் படங்களின் படபிடிப்பு முடிந்த பிறகு, இரவு நேரங்களில் என்னுடன் கதை விவாதத்தில் பங்கு கொண்டு, திரைக்கதையை மெருகேற்றியதுடன், வசனத்தையும் அவரே எழுதினார்.

ஏற்கனவே அவர் தயாரித்து, நடித்த ‘ஆரஞ்சு மிட்டாய் ’ என்ற படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார் என்று தெரியும்.. அதற்கு பிறகு அவர் நடிக்காத படத்திற்கு, மற்றொரு நாயகனுக்காக அவர் வசனம் எழுதுவது என்பது இது தான் முதன் முறை.

விக்ராந்தின் முன்னேற்றத்திற்காக அவர் செய்திருக்கும் இந்த உதவிக்கு நாங்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் நன்றி மறவாமல் இருப்போம். ’ என்றார் இயக்குநர் சஞ்ஜீவ்

வடசென்னை-யில் முதலிரவு காட்சியை நீக்கி விட்டு 2 புதிய காட்சிகள் இணைப்பு..!

வடசென்னை-யில் முதலிரவு காட்சியை நீக்கி விட்டு 2 புதிய காட்சிகள் இணைப்பு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

andrea and ameerஇயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அக்டோபர் 17ஆம் தேதி வெளியான வடசென்னை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 10 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் படத்தில் அமீர் ,ஆண்ட்ரியா நடிப்பில் இடம்பெற்றிருந்த முதலிரவு காட்சி மீனவ சமுதாய சகோதர சகோதரிகளின் மனம் புண்படும்படி இருந்ததாகவும் அக்காட்சியை படத்தில் இருந்து நீக்கும்படியும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தற்போது படக்குழு அந்த காட்சியை நீக்கி விட்டு அதற்கு பதிலாக அமீர்,ஆண்ட்ரியா நடித்துள்ள வேறு இரு காட்சிகளை இணைத்துள்ளனர்.

மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் வசனங்கள் சிலவும் நீக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கார்த்தியின் *தேவ்* பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சூர்யா

கார்த்தியின் *தேவ்* பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthis Dev first look poster launched by Suriyaஅறிமுக இயக்குனர் ரஜத் இயக்கும் தேவ் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.

கிரைம் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்.

இவர் கார்த்தியுடன் ஏற்கெனவே தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்திருந்தார்.

மேலும் நவரச நாயகன் கார்த்திக், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா, ரேணுகா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கார்த்தியின் அண்ணன் நடிகர் சூர்யா சற்றுமுன் ட்விட்டரில் வெளியிட்டார்.

Karthis Dev first look poster launched by Suriya

dev karthi stills

யுவன் தயாரிக்கும் 2 படங்களிலும் ஹீரோவாக விஜய் சேதுபதி

யுவன் தயாரிக்கும் 2 படங்களிலும் ஹீரோவாக விஜய் சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi and yuvan shankar rajaஇசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, இசையமைப்பதுடன் பாடல்களை பாடுவதும் உண்டு.

இவர் அண்மையில் ஒரு படத்தையும் தயாரித்திருந்தார்.

ஹரிஸ் கல்யாண் மற்றும் ரைசா நடித்திருந்த ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தையும் தயாரித்திருந்தார்.

இந்த படத்தை அடுத்து இரண்டு படங்களையும் தயாரிக்கவுள்ளார்.

இரண்டு படங்களிலும் விஜய் சேதுபதி தான் கதாநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி’ படங்களை இயக்கிய அருண்குமார் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இதில் அஞ்சலி நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் ஆரம்பமாகியுள்ளது.

மற்றொரு படத்தை சீனு ராமசாமி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முதல் ஆரம்பமாகிறது.

நவ-3ல் 2.0 டிரைலர் ரிலீஸ்.; இம்முறையும் ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றமே!

நவ-3ல் 2.0 டிரைலர் ரிலீஸ்.; இம்முறையும் ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றமே!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth fans disappointment with 2point0 Teamஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்சய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 2.0.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ரூ. 550 கோடியில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

நவம்பர் மாதம் 29-ந்தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நவம்பர் 3-ம் தேதி டிரைலர் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை மும்பையில் வெளியிட்டனர். பாடல்களை துபாய் நாட்டில் வெளியிட்டனர்.

இரண்டு முறையும் தென்னிந்தியாவில் உள்ள ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.

ஐதராபாத்தில் டீசர் வெளியீட்டு விழாவை நடத்துவார்கள் என முன்பு கூறியிருந்தனர். ஆனால் யுடிப் மற்றும் தியேட்டர்களில் நேரிடையாக வெளியிட்டனர்.

தற்போது டிரைலரை வெளியிட உள்ளனர். அதற்கும் விழா நடத்துவதாக தெரியவில்லை. எனவே இந்த முறையும் ரஜினி ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக இருக்கும் என தெரிகிறது.

ஒரு வேளை விழா அறிவிப்பு ஓரிரு நாட்களில் வருகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Rajinikanth fans disappointment with 2point0 Team

தடையை உடைத்து தீபாவளி தினத்தன்று *சர்கார்* ரிலீஸ்

தடையை உடைத்து தீபாவளி தினத்தன்று *சர்கார்* ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarkar Release poster and Court Case news updatesசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள படம் சர்கார்.

ஏஆர். முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தின் கதை என்னுடையது என வருண் என்கிற ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், நான் எழுதிய செங்கோல் படக்கதையை தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து வைத்துள்ளேன்.

அந்தக்கதையை திருடி தான் முருகதாஸ் சர்கார் படத்தை இயக்கி உள்ளார். இதுதொடர்பாக எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் செய்துள்ளேன். அவர்களும் இது என்னுடைய கதை தான் என உறுதி செய்திருக்கிறார்கள்.

ஆகவே எனக்கு இழப்பீடாக ரூ.30 லட்சம் வழங்க வேண்டும். படத்தின் தலைப்பில் என்னுடைய கதை என இடம் பெற செய்ய வேண்டும், அதுவரை படத்தை திரையிட கூடாது, இதை அவசர வழக்காக எடுத்து கொள்ள வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, இயக்குநர் முருகதாஸ், படத்தை தயாரிக்கும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் எழுத்தாளர்கள் சங்கம் ஆகியோர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி, வழக்கை அக்., 30-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

அதுவரை சர்கார் படத்திற்கு தடை விதிக்க முடியாது என கூறினார்.

இதனிடையே சர்கார் படத்திற்கு தணிக்கையில் யு/ஏ சான்று கிடைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டது.

அதனையடுத்து நவ., 6-ம் தேதி, தீபாவளி தினத்தில் படத்தை வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அடுத்த போஸ்டரை வெளியிட்டனர்.

Sarkar Release poster and Court Case news updates

More Articles
Follows