தலைவர் & தளபதியின் சக்சஸ் சீக்ரெட் சொல்லும் மக்கள் செல்வன்

தலைவர் & தளபதியின் சக்சஸ் சீக்ரெட் சொல்லும் மக்கள் செல்வன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay sethupathi rajini vijayமுன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் போதே தன் இமேஜ் பற்றி கவலைப்படாமல் வில்லனாக நடித்து வருபவர் விஜய்சேதுபதி.

ரஜினியின் ‘பேட்ட’ படத்திலும் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.

இருவருடன் நடித்த அனுபவம் பற்றி அவரது அண்மை பேட்டியில் கூறியுள்ளதாவது…

இருவரிடமும் எந்தவித பந்தா இல்லை. சூட்டிங்குக்கு வந்து விட்டால் கேரக்டர் தவிர, வேறு எதைப் பற்றியும் அவர்கள் சிந்திப்பதே இல்லை.

அவர்கள் வெற்றியின் ரகசியம் இதுதான்.

அவர்களுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆசை உள்ளது” என கூறியுள்ளார்.

Vijay Sethupathi talks about Rajini and Vijay

அர்ஜீன் தாஸ் நடித்து ஆன்லைனில் வெளியான ‘அந்தகாரம்’ அசத்தல்..; அட்லி ஆனந்தம்

அர்ஜீன் தாஸ் நடித்து ஆன்லைனில் வெளியான ‘அந்தகாரம்’ அசத்தல்..; அட்லி ஆனந்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உங்கள் அன்புக்குரியவர்கள் தங்கள் தனித்திறமையால் பெருவெற்றியை பெறும்போது உங்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவில்லை.

அந்த வகையில் இயக்குநர் அட்லியும் ஒளிப்பதிவாளர் ஷாகேயும் “அந்தகாரம்” படம் பெற்றிருக்கும் பிரமாண்ட வரவேற்பில் உணர்வுகள் பொங்கி வழியும் பூரிப்பான மனநிலையில் உள்ளனர்.

அர்ஜீன் தாஸ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் “அந்தகாரம்” திரைப்படம் நவம்பர் 24, 2020 அன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் பாராட்டு பெற்றுள்ளது.

இயக்குநர் அட்லி தமிழின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் “எந்திரன்” படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தபோது, அதே படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் எட்வின் ஷாகே. “அந்தகாரம்” படத்தை அட்லி தயாரித்திருக்க, எட்வின் ஒளிப்பதிவு செய்ததில் இருவருமே பெரு மகிழ்ச்சியில் உள்ளனர்.

இயக்குநர், தயாரிப்பாளர் அட்லி இது குறித்து கூறியதாவது…

எட்வின் ஷாகே உடன் இணைந்தது எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. சமீபத்தில் தமிழில் மிகச்சிறந்த ஒளிப்பதிவை “அந்தகாரம்” படத்தின் மூலம் அவர் தந்துள்ளார்.

மேலும் மேலும் ஒளிப்பதிவில் அவரது அரிய சாதனைகளை காண ஆவலுடன் உள்ளேன். அவரின் வாழ்வு செழிக்க இன்னும் பல சாதனைகள் புரிய என் மனம்கனிந்த வாழ்த்துகள்.

ஒளிப்பதிவாளர் எட்வின் ஷாகே கூறியதாவது…

இயக்குநர் அட்லியுடன் இணைந்து பணிபுரிந்தது பெரு மகிழ்ச்சி. “அந்தகாரம்” படத்தை தயாரித்து வழங்கியதற்கு அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

எங்களுக்குள் சகோதரத்துவமான நட்புணர்வு எப்போதும் உண்டு. தற்போது எங்கள் பணிகள் கவனிக்கப்படுவதும் பாராட்டப்படுவதையும் காண மிகவும் சந்தோஷமாக உள்ளது.

Producer Atlee is happy with Andhaghaaram result

கள்ள காதலியாக மாறிய அர்ஜுமன்(ள்)..; பொங்கலன்று PUBG விருந்தளிக்கும் விஜய்ஸ்ரீ

கள்ள காதலியாக மாறிய அர்ஜுமன்(ள்)..; பொங்கலன்று PUBG விருந்தளிக்கும் விஜய்ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PUBG Arjuman“தாதா 87” வெற்றிப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ‘விஜய் ஸ்ரீ ஜி’, ஜிமீடியா தயாரிப்பில் “பொல்லாத உலகில் பயங்கர கேம்” (பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன்
பெண் வேடத்திற்கான புதிய லுக் கார்த்திகை மாத தீபம் ஏற்ற வந்தாள் (ன்)

‘பிக் பாஸ்’ புகழ் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் அனித்ராநாயர், ஆராத்யா,சாண்ட்ரியா, நடோடிகள் சாந்தினி, மொட்டை ராஜேந்திரன்,மைம் கோபி,பிக்பாஸ் ஜூலி, கதிர் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி எழுதி லீ யாண்டர் லீமார்டி இசையில்
‘கள்ள காதலா’

பாடல் வெளியாகி
ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளது பாலாஜி பாஸ்கரன் ஒளிப்பதிவில்

ஜி மீடியா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (பப்ஜி) படமானது 2021ம் ஆண்டு பொங்கலன்று ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது என்று படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Director Vijay Sri’s PUBG release date announced

இன்று மாநில நிர்வாகி சுதாகருடன் ரஜினி ஆலோசனை..; நாளை 50 செயலாளர்கள் முன்னிலையில் அரசியல் அறிவிப்பு..?

இன்று மாநில நிர்வாகி சுதாகருடன் ரஜினி ஆலோசனை..; நாளை 50 செயலாளர்கள் முன்னிலையில் அரசியல் அறிவிப்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் திங்கட்கிழமை நாளை ஆலோசனை நடத்துகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதற்காக 50க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் இருந்து நாளை சென்னைக்கு வருகின்றனர்.

எனவே போலீஸ் பாதுகாப்பு கேட்டு காவல்துறைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

அதில் கொரோனா காலம் என்பதால் சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட அரசு வழிமுறைகளை கடைப்பிடிப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகருடன் தன் போயஸ் கார்டன் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார் ரஜினி.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

இது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தன்னுடைய அரசியல் இறுதி முடிவு தொடர்பான அறிவிப்பை தன்னுடைய மாவட்ட நிர்வாகிகளுடன் நாளை பகிர்ந்து கொள்வார் ரஜினி என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் கட்சி பற்றி நாளை அறிவிப்பாரா? என்பதை பார்ப்போம்.

Rajinikanth to hold discussions with district secreatries tomorrow

கொரோனா தடுப்பு மருந்து உட்கொண்டவருக்கு பக்கவிளைவு.. மருத்துவமனைக்கு வக்கீல் நோட்டீஸ்..; அதிர்ச்சியில் மக்கள்

கொரோனா தடுப்பு மருந்து உட்கொண்டவருக்கு பக்கவிளைவு.. மருத்துவமனைக்கு வக்கீல் நோட்டீஸ்..; அதிர்ச்சியில் மக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

corona vaccineஉலகையே அச்சுறுத்தும் நோயாக கொரோனா வைரஸ் உருவெடுத்துள்ளது.

இதனால் மருத்துவதுறை வல்லுனர்கள் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி & ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் இணைந்து, கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது.

இந்தியாவில் புனேவின் சீரம் நிறுவனம், மத்திய அரசின் மேற்பார்வையில் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்கிறது.

தமிழகத்திலும் இது தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் ராமச்சந்திரா மருத்துவ பல்கலைகழகத்தில், கோவிஷீல்டு தடுப்பு மருந்து, எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறதா என கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை அண்ணா நகரை சேர்ந்த 40 வயது ஆண் ஒருவருக்கு கோவிஷீல்டு தடுப்பு மருத்து செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டார்

அவருக்கு, அடுத்த 10 நாட்களில் உடல் நலக்குறைவு, தலைவலி, உடல் அயற்சி உள்ளிட்ட பக்கவிளைவு ஏற்பட்டது.

இதனால் சிகிச்சையில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

இதனால், உரிய இழப்பீடு கோரி பாதிக்கப்பட்டவரின் சார்பில், ராமச்சந்திர மருத்துவமனைக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் இந்த விவகாரம் குறித்து கூறியதாவது…

“அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மருத்து எடுத்துக்கொண்டவர்களுக்கு, பக்கவிளைவு ஏதும் ஏற்படவில்லை.

ஆனால் இராமச்சந்திர மருத்துவமனை விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்” என தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Alleging side-effects from Covishield vaccine trials, Chennai volunteer seeks Rs 5 crore compensation

‘ரஜினி நல்லவர்..; தெளிவான முடிவு எடுப்பார்.. அவரின் முடிவை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’..- தமிழக அமைச்சர்கள் கருத்து

‘ரஜினி நல்லவர்..; தெளிவான முடிவு எடுப்பார்.. அவரின் முடிவை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’..- தமிழக அமைச்சர்கள் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthகொரோனா ஊரடங்காலும் பிரச்னையாலும் தன் உடல் நிலையாலும் தன் அரசியல் கட்சி அறிவிப்பை தாமதப்படுத்தி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

எனவே அவர் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என சிலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நாளை நவம்பர் 30ந் தேதி ஆலோசனை செய்யவுள்ளார் ரஜினிகாந்த்.

நவம்பர் 30 ஆம் தேதி மஹா அவதார் பாபாஜியின் ஜென்ம நட்சத்திரம் ரோகிணி நட்சத்திர நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.

இதில் அரசியல் நிலைப்பாடு குறித்து, ரஜினிகாந்த் இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா ஊரடங்கால் 6 மாதங்களாக எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத ரஜினி தற்போது இதில் கலந்து கொள்ள வருவதால் ஒட்டு மொத்த தமிழகத்தின் கவனமும் நாளைய ஆலோசனை கூட்டம் பக்கம் திரும்பியுள்ளது.

இந்த நிலையில் ரஜினியின் முடிவு என்னவாக இருக்கும் என தமிழக அமைச்சர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினி நல்ல மனிதர். ரஜினியின் அரசியல் முடிவை மக்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். மக்களில் ஒருவனாக நானும் எதிர்ப்பார்க்கிறேன் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் தெளிவான முடிவை எடுப்பார். அவர் நல்ல மனிதர். அவர் கட்சி ஆரம்பித்த பின்னர்தான் அவரின் கொள்கைகள் தெரிய வரும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

TN ministers about Rajini’s political entry

More Articles
Follows