என்னை விட சின்ன பெண் த்ரிஷாவை பார்த்தால் பயம்.. : விஜய்சேதுபதி

vijay sethupathi trisha 96மெட்ராஸ் எண்டெர்பிரைசஸ் சார்பாக நந்தகோபால் தயாரித்திருக்கும் 96 படத்தை ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் என்பவர் இயக்கியுள்ளார்.

இவர் ஏற்கெனவே ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.

இப்படத்தில் ராம் கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்க, ஜானு கேரக்டரில் த்ரிஷா நடித்துளார்.முக்கிய கேரக்டரில் ஜனகராஜ் நடித்துள்ளார்.

இப்படம் வருகிற அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்கள் சந்தித்து பேசினர்.

அப்போது விஜய்சேதுபதி பேசியதாவது:

’செக்கச்சிவந்த வானம்’ படத்துக்குக் கூட எதையும் எதிர்பார்க்காமல் வாருங்கள் என்று நான் சொல்லியிருந்தேன்.

ஆனால், 96 படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டது. அதை பூர்த்தி செய்யும் என்று முழுமையாக நம்புகிறேன். ஆனாலும் அதையும் தாண்டி ஒரு பயம் ஏற்பட்டுள்ளது.

எப்படியாவது நன்றாக இருந்துவிடணும் என்ற பயம் அதிகம் ஏற்பட்டுள்ளது. அந்த நாளுக்காக தான் காத்திருக்கிறேன்.

இப்படத்தில் எல்லாரும் ரசித்து ரசித்து வேலை செய்தோம்.
சினிமாவில் எங்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது. நன்றாக இருக்கோம். ஆனால், அனைவருமே நல்ல சம்பளம் வாங்குவதில்லை.

அதையும் தாண்டி, நாம் பார்க்கும் நல்ல வேலையில் ஒரு மனநிம்மதி இருக்கிறது பாருங்கள். அது ஒரு சில படத்தில் தான் கிடைக்கும். இப்படத்தில் அனைவருக்குமே அந்த மனநிம்மதி கிடைத்தது.

எனக்கு த்ரிஷாவைப் பார்த்தால் சின்ன வயதிலிருந்தே பயம். ஹோம் வொர்க் பண்ணவில்லை என்றால் அவருடைய படத்தைக் காட்டித் தான் அம்மா பயமுறுத்துவார்.

நாயகிகள் இளம் வயதிலேயே நடிக்க வந்துவிடுகிறார்கள். நிஜத்தில் கண்டிப்பாக என்னைவிட சுமார் 6/7 வருடங்களாவது சின்ன பெண்ணாக இருப்பார் த்ரிஷா.” என்றார் விஜய்சேதுபதி.

Vijay Sethupathi shares his working experience with Trisha

Overall Rating : Not available

Latest Post