தனுஷ் படத்தில் விஜய்சேதுபதி நடிப்பது உறுதியானது

தனுஷ் படத்தில் விஜய்சேதுபதி நடிப்பது உறுதியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Vijaysethupathiவெற்றிமாறன் இயக்கி, தனுஷ் நடிப்பில் மூன்று பாகங்களாக உருவாகும் வரும் படம் வடசென்னை.

இதில் தனுஷ் உடன் அமலாபால், விஜய்சேதுபதி, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

இதனிடையில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக விஜய்சேதுபதி இப்படத்தில் இருந்து விலகிவிட்டார் என செய்திகள் வந்தன.

ஆனால், விஜய்சேதுபதி விலகவில்லை. இப்படத்தில் இருக்கிறார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Vijay Sethupathi continues to work in Dhanush’s Vada Chennai

சமுத்திரக்கனி படத்தில் இருந்து வரலட்சுமி விலக யார் காரணம்..?

சமுத்திரக்கனி படத்தில் இருந்து வரலட்சுமி விலக யார் காரணம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Samuthirakkani going to direct Jayaram and Varalaxmi for Appa Malayalam remakeசமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகிய அப்பா படம் தமிழில் வெற்றிப் பெற்றது.

தற்போது இப்படத்தை ‘ஆகாச மிட்டாய்’ என்ற பெயரில் மலையாளத்தில் ரீமேக் செய்து இயக்கி வருகிறார்.

இதில் ஜெயராம்-வரலட்சுமி நடிக்க, ஓரிரு தினங்களுக்கு முன், இதன் சூட்டிங் தொடங்கியதை பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் வரலட்சுமி.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

ஆணாதிக்கம் மற்றும் நற்பண்பு இல்லாத தயாரிப்பாளருடன் தன்னால் பணியாற்ற முடியாது.

தன்னுடைய இந்த முடிவுக்கு ஆதரவாக இருந்த சமுத்திரக்கனி மற்றும் ஜெயராம் ஆகியோர்களுக்கு நன்றி என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

varu sarathkumar‏Verified account @varusarath
Thnk u to Samuthirakani sir n Jayaram sir for hvng supported my decision.. can’t work wid male chauvinists n mannerless prods..#respectwomen

Varalaxmi get out of Samuthirakanis Appa malayalam remake project

ரஜினி படத்தை கொண்டாடிய ‘வேலைக்காரன்’ சிவகார்த்திகேயன்

ரஜினி படத்தை கொண்டாடிய ‘வேலைக்காரன்’ சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini siva velaikaranதான் ரஜினி ரசிகன் அல்ல. ஒரு தீவிர ரஜினி வெறியன் என்று பொது நிகழ்ச்சிலேயே கூறியவர் சிவகார்த்திகேயன்.

தற்போதும் இவர் நடிக்கும் படத்திற்கு ரஜினியின் சூப்பர் ஹிட் படமான வேலைக்காரன் என்ற டைட்டிலே வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் சூட்டிங்கில் ரஜினியின் வேலைக்காரன் படம் வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கேக் ஒட்டி கொண்டாடியுள்ளார்.

மோகன்ராஜா இயக்கி வரும் இப்படத்தில் சிவாகார்த்திகேயனுடன் நயன்தாரா, சிநேகா, பஹத்பாசில், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இசை அனிருத்.

Sivakarthikeyan celebrated Rajinis Velaikkaran 30th year anniversary

இந்தியளவில் ஹிந்தி பெயரில் கட்சி ஆரம்பித்தார் உதயநிதி

இந்தியளவில் ஹிந்தி பெயரில் கட்சி ஆரம்பித்தார் உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Udhayanidhi Stalins Saravanan Irukka Bayamaen movieதமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் வாரிசு உதயநிதி ஸ்டாலின்.

அதனால் இந்த டைட்டில் வச்சோம் தவிர. நிஜ அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

உதயநிதி நடித்துள்ள சரவணன் இருக்க பயமேன் படத்தில் இடம் பெறும் ஒரு காட்சிதான் இது.

எழில் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் உதயநிதியுடன் சூரி, ரெஜினா, ஸ்ரூஷ்டி டாங்கே, சாம்ஸ், மன்சூர் அலிகான், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

உதயநிதி இப்படத்தை தயாரிக்க இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் சற்றுமுன் வெளியானது. அதில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியில் இந்த கட்சியின் பேனர் இடம்பெற்றுள்ளது.

அந்த கட்சிக்கு அகில இந்திய தோ ஜிந்தகி கட்சி என்று பெயரிட்டுள்ளனர்.

Udhayanidhi Stalins Saravanan Irukka Bayamaen movie updates

அனிருத்தை அரெஸ்ட் செய்யப் போகும் அதிர்ஷ்டலஷ்மி பெண்.?

அனிருத்தை அரெஸ்ட் செய்யப் போகும் அதிர்ஷ்டலஷ்மி பெண்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anirudhசினிமா உலகில் கிசுகிசுக்கள் வருவதும் பின்னர் அடங்கி போவதும் நாம் பலமுறை பார்த்த ஒன்றுதான்.

அண்மையில் இணையத்தை கலக்கிய சுசீத்ராவின் ட்வீட்களை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறோம்.

அதில் பல நடிகர், நடிகைகள் இருந்தனர். அதில் அனிருத்தும் முக்கியமானவர்.

இதுபோன்ற சர்ச்சைகள் அடிக்கடி அனிருத் விஷயத்தில் வருவதால், விரைவில் அவருக்கு கால்கட்டு… (அதாங்க) மேரேஜ் செய்ய முடிவெடுத்திருக்கிறார்களாம் அவரது குடும்பத்தினர்.

அந்த பெண் அனிருத்தின் லட்சணக்கான ரசிகர்களில் அவரும் ஒருவராம்.

அவர் அனிருத்துக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும் ஒரு கூடுதல் தகவல் என்னவென்றால், சென்னையில் பிரபலமான ஒரு ஜீவல்லரி ஷாப் ஓனரின் வாரிசுதான் அந்த பெண் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

அப்போ அனிருத்தை அரெஸ்ட் செய்ய ஒரு அதிர்ஷ்ட லஷ்மி வர்றாங்க சொல்லுங்க…

Music Composer Anirudh marriage alliance

இஸ்லாமியராக மாறிவிட்டாரா சூர்யா..? வைரலாகும் வீடியோ

இஸ்லாமியராக மாறிவிட்டாரா சூர்யா..? வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya muslimசிவகுமாரின் மகனும் பிரபல நடிகருமான சூர்யா இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டதாக ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் பள்ளிவாசலில் சூர்யா இருக்கிறார்.

மேலும் அவருக்கு இஸ்லாமிய முறைப்படி சடங்குகள் செய்யப்படும் காட்சிகள் உள்ளது.

இதுகுறித்து சூர்யா தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

சிங்கம் 2 படத்தின் சூட்டிங் சமயத்தில் சூர்யா கடப்பா பகுதிக்கு சென்றிருந்தார்.

அப்போது அவர் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்தார். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அருகேயுள்ள பள்ளி வாசலுக்கு சூர்யா சென்றார்.

அப்போது அங்கு சூர்யாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வீடியோ காட்சிகள்தான் இணையத்தில் வெளியாகியுள்ளது.

எனவே சூர்யா மதம் மாறிவிட்டதாக வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Whether Actor Suriya converted to Muslim religion viral video

More Articles
Follows