‘வலிமை’ அப்டேட் கேட்டு அப்செட்டான அஜித் ரசிகர்களுக்கு விஜய் பட நடிகை தந்த செம தகவல்

அஜித் நடிப்பில் வினோத் இயக்கி வரும் படம் ‘வலிமை’.

போனிகபூர் தயாரிக்க இதில் அஜித்துடன் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு, சுமித்ரா என பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் அப்டேட்களை கேட்டு கேட்டு அஜித் ரசிகர்கள் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டனர்.

இறுதியாக அவர்களே அப்செட் ஆகிவிட்டனர்.

இந்த நிலையில் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் மருத்துவராக நடித்த நடிகை சங்கீதா அப்டேட் கொடுத்துள்ளார்.

இவர் , வலிமை படத்திலும் நடித்து வருகிறாராம்.

அவரின் சமீபத்திய பேட்டியில்… ‘வலிமை’ படம் 90% முடிவடைந்து விட்டது.

அஜித்துடன் நடிக்கும் காட்சிகள் எனக்கு இல்லை.

ஆனால் வினோத் உடன் பணியாற்றியது சிறந்த அனுபவம்.

விரைவில் நிறைய அப்டேட் அடுத்தடுத்து வெளிவரும்.”

என தெரிவித்துள்ளார்.

Vijay film actress about Valimai update

Overall Rating : Not available

Latest Post