தன் படத் தலைப்பை வைத்தே மெர்சல் மேடையில் விஜய் பன்ச்

தன் படத் தலைப்பை வைத்தே மெர்சல் மேடையில் விஜய் பன்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal vijayஏஆர். ரஹ்மான் இசையில் அட்லி இயக்கியுள்ள மெர்சல் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் இப்பட நாயகன் நடிகர் விஜய் கலந்துக் கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது….

ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் 25வது ஆண்டில் அவருடன் பணியாற்றியதை விசேஷமாக உணர்கிறேன்.

உலகத்துக்கே மெட்டு போட்டு ஆஸ்கர் வாங்கி மெர்சல் ஆக்குனாரு. இப்போ ‘மெர்சல்’க்கு மெட்டு போட்டிருக்காரு.

நான் அட்லீயின் தன்னம்பிக்கைக்கு மிகப்பெரிய விசறி. அது வேற லெவல். தெறிக்கு முதலில் அவருக்கு நன்றி.

ரசிகர்களுக்கு நான் அட்வைஸ் சொல்கிறேன் என்று நினைக்கவேண்டாம். நான் அவ்வளவு பெரிய ஆள் கிடையாது.

எதிர்மறையாக யாராவது பேசுவதைப் பற்றிச் சொன்னால் அவர்களை புறக்கணித்துவிடு நண்பா என்றுதான் சொல்வேன்.

ஹிட்-ஃப்ளாப் எல்லாம் கொடுத்திட்டீங்க. ஆனா அதை விட அதிகமாக சம்பாதித்தது ரசிகர்களான உங்களைத்தான்.

எதுவும் இல்லாத போது உங்கள் தன்னம்பிக்கையும், எல்லாம் இருக்கும்போது உங்கள் அணுகுமுறையும் தான் முக்கியம்.

எல்லோரும் நம்மை சீண்டுவார்கள். அதெல்லாம் நடக்கும். ஆனால் அதை புறக்கணியுங்கள்.

என் மகன் கூட நான் சொல்வதை எல்லாம் கேட்கமாட்டார். எனவே நீங்கள் முடிந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் விடுங்கள்.

துப்பாக்கின்னா தோட்டா இருக்கனும்; கத்தினா ஷார்ப்பா இருக்கனும்.

தெறின்னா தெனாவட்டா இருக்கனும். மெர்சல்ன்னா மிரட்டலா இருக்கனும் என்று பேசினார் தளபதி விஜய்.

Vijay emotional and advice speech at Mersal audio launch

mersal audio launched

ரஜினியை தவறவிட்டால் தமிழகம் வாழ வழியில்லை… தமிழருவி மணியன்

ரஜினியை தவறவிட்டால் தமிழகம் வாழ வழியில்லை… தமிழருவி மணியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini flagsரஜினியின் நண்பரும் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவருமான தமிழருவி மணியன் தலைமையில் திருச்சியில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது.

இது ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை முன்னிருத்தி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதில் நடிகர் ஜீவா கலந்துக் கொண்டார்.

இந்த மாநாட்டில் தமிழருவி மணியன் பேசியதாவது…

‘கடந்த ஐம்பது ஆண்டுகளாக இரு திராவிடக் கட்சிகளும் தமிழகத்தை சீரழித்து விட்டன.

தமிழகத்தில் தற்போதைய ஆட்சி முடிவதற்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது.

ஆட்சி கலைந்து தேர்தல் வந்தால் அமைச்சர்களால் டெபாசிட் கூட வாங்க முடியாது.

தமிழகத்தில் திறமையான ஐஏஸ் அதிகாரிகளை கொண்டு பொற்கால ஆட்சி வழங்க முடியும்.

கோடிகளை கொள்ளையடித்து சேகர் ரெட்டியிடம் கொடுத்தவர் தான் ஓபிஎஸ்.

வைகோ முதல்வராக வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், அவருக்கு வாக்கு வங்கியில்லை.
தற்போது தமிழகத்தில் ரஜினிக்கு 25 சதவிகித வாக்குகள் உள்ளன.

அவர் அரசியல் வியூகம் அமைத்தால் 45 சதவீத வாக்கு வங்கி அமையும்.

நிச்சயம் அவர் தேர்தலில் வெற்றிபெற்று கோட்டையில் முதலமைச்சராக அமரும் நாள் வரும்.
ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பயணம் தொடங்கிவிட்டது.

தூய்மையான அரசியல் செய்யப் புறப்பட்டுவிட்டார்.

ஊழல் இல்லாத ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதே அவரின் கனவு.

நதிகள் இணைப்பை 10 ஆண்டுகளில் செய்து முடிக்க முடியும் எனவும் ரஜினி கூறியுள்ளார்.

தமிழகம் ரஜினிகாந்தை தவறவிட்டால் வாழ்வதற்கும் வழியில்லாமல் போகும்” என்று கூறினார்.

If Tamilnadu leave Rajini it wont be good says Tamilaruvi Manian

tamilaruvi maninan actor jeeva at trichy rajini

ரசிகர்களுக்காக விஜய் எடுக்கும் ரிஸ்க் கண் கலங்கவைக்கும்.. அட்லி

ரசிகர்களுக்காக விஜய் எடுக்கும் ரிஸ்க் கண் கலங்கவைக்கும்.. அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Atlee speech about Vijay risk in Mersal movieவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அட்லி கலந்துக் கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது….

இந்தப் படம் உருவாக இருவர் தான் காரணம். என் அண்னன், என் தளபதி விஜய்,

தெறி படத்தில் 4 சண்டைக் காட்சிகள் இருக்கும் மெர்சல் படத்தில் 13 சண்டைக் காட்சிகள் உள்ளன.

விஜய் அண்ணா அதிகபட்ச உழைப்பைத் தந்துள்ளார். ஒரு காட்சியில் 3000 மக்களுடன் படம்பிடித்தேன்.

அவரது ரசிகர்களை திருப்திபடுத்த அவர் போடும் முயற்சியைக் கண்டு கண் கலங்கியிருக்கிறேன்,

படத்தின் வசனங்கள் நன்றாக இருந்தால் அதற்கு காரணம் வசனகர்த்தா ரமணகிரி வாசன் தான்.

விஜய் சாருக்கு 3 வேடங்களா என கேட்காதீர்கள். ஆனால் 3 கதாநாயகிகள் இருக்கின்றனர்.

வடிவேலுவின் கதாபாத்திரம் உணர்ச்சிகரமானதாக இருக்கும். மணிவண்ணன் சாரைப் போல அட்டகாசமாக நடித்திருக்கிறார்.

தமிழர்களின் அடையாளம், பாரமரியம், கலாச்சாரம் ஆகியவற்றை சுற்றியே படத்தின் கதை இருக்கும்.

படத்தின் 100வது நாள் விழாவில் படத்தைப் பற்றி இன்னும் பேசுவேன்.” இவ்வாறு அட்லி பேசினார்.

Director Atlee speech about Vijay risk in Mersal movie

உலகிலேயே மிகச்சிறந்த CM விஜய்தான்… பார்த்திபன் பரபரப்பு பேச்சு

உலகிலேயே மிகச்சிறந்த CM விஜய்தான்… பார்த்திபன் பரபரப்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay at mersal audioவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட பார்த்திபன் பேசியதாவது…

”பொடி மாஸ் பண்ண முட்டை வேனும். அதுபோல் மாஸ் படம் பண்ண விஜய் வேனும்.

பன்ச டயலாக் எல்லாருக்கும் எழுதாலாம். விஜய்க்கு பொருத்தமாக இருக்கும்.

விஜய் எந்த மொழி படத்தில் நடித்தாலும் அவரின் பிரம்மாண்டம் ரசிகர்கள்தான்.

விஜய் மற்றும் ரசிகர்கள்தான் இணைந்தால் அது 100 கோடி வசூலிக்கும். விஜய் ஏஆர். ரஹ்மான் இணைந்தால் 200 கோடியும், அத்துடன் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இணைந்தால் 300 கோடியும் வசூலிக்கும்.

ராமநாராயணன் சின்ன பட்ஜெட் படங்களை எடுப்பவர். ஆனால் அவரது மகன் முரளி மிகப்பிரம்மாண்டமாக மெர்சல் படத்தை எடுத்துள்ளார்.

பொதுவாக 25 + 25 சேர்ந்தால் 50தான் வரும். ஆனால் விஜய் 25 + ஏஆர்.ரஹ்மான் 25 சேர்ந்துவிட்டதால் இது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 ஆகிவிட்டது.

ட்விட்டரில் எந்த தமிழ் படத்திற்கும் எமோஜி உருவாக்கப்படவில்லை. அது மெர்சலுக்கு கிடைத்துள்ளது.

விஜய்யின் அடுத்த படத்திற்கு அமெரிக்க அதிபர் வாழ்த்துவார். அவர் உலகின் மிகச்சிறந்த CM விஜய்தான் சொல்லுவார்.

CM என்றால் Collection Mannan என்று பொருள்.

தமிழ்நாட்டை நல்லவர்கள் ஆளட்டும். விவசாயிகளை வாழ வைக்கட்டும் என்று பேசினார் பார்த்திபன்.

Even America President will day Vijay is Best CM says Parthiban

விஜய்யின் அரசியல் ஆசையை ஓபன் செய்த சுந்தர் சி.?

விஜய்யின் அரசியல் ஆசையை ஓபன் செய்த சுந்தர் சி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Sundar C open talk about Vijays Political desireவிஜய், அட்லி, ஏஆர். ரஹ்மான் இணைந்துள்ள மெர்சல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் சுந்தர் சி கலந்துக் கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசும்போது…

தளபதி ரசிகர்களுக்கு வணக்கம். இங்க வந்துருங்க ரசிகர்கள்ல எத்தனை எம்எல்ஏ மற்றும் எம்பிக்கள் இருக்கீங்க தெரியல என்றார்.

இதன் மூலம் விஜய் அரசியல் கட்சியை ஆரம்பிப்பார் என்ற தகவலை மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார்.

நான் இயக்கவுள்ள சங்கமித்ரா படத்தின் கதையை விஜய்யிடம் சொன்னேன். அவருக்கு அது ரொம்ப பிடித்திருந்தது” என்று பேசினார் சுந்தர். சி.

Director Sundar C open talk about Vijays Political desire

அமைதியின் சக்தியை விஜய்யிடம் தெரிந்துக் கொண்டேன்…. தனுஷ்

அமைதியின் சக்தியை விஜய்யிடம் தெரிந்துக் கொண்டேன்…. தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay dhanush mersalவிஜய் 3 வேடங்களில் நடித்துள்ள மெர்சல் படத்தை அட்லி இயக்கியுள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் நடிகர் தனுஷ் கலந்துக் கொண்டு பேசினார்.

நான் இங்கு விஜய் சாரின் நண்பனாக வந்துள்ளேன். விஜய் சாரின் அன்பினால் ஈர்க்கப்பட்டேன்.

அவர் கத்தியாக இருந்தாலும் ரொம்ப அமைதியாக இருப்பார்.

அமைதியின் சக்தியை அவரிடம் இருந்து தெரிந்துக் கொண்டேன். அவர் எனக்கொரு முன் மாதிரி.

மெர்சல் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன்.” என்றார் தனுஷ்.

I learned power of Silence from Vijay says Dhanush at Mersal audio launch

More Articles
Follows