‘இறைவி’க்காக இணைந்த விஜய்-அஜித்-சூர்யா-சிம்பு-தனுஷ்..!

Vijay Ajith Suriya Simbu Dhanush Joins for Iraiviகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, ராதாரவி, அஞ்சலி, கமாலினி முகர்ஜி, பூஜா தேவ்ரியா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் இறைவி.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் நாளை மறுநாள் (ஜீன் 3) ரிலீஸ் ஆகிறது.

பொதுவாக தமிழில் சில வார்த்தைகள் ஆண் பாலை மட்டும்தான் குறிக்கும். அதற்கு பெண்பால் சொற்கள் கிடையாது.

உதாரணத்திற்கு… மனிதன், வாலிபன், இளைஞன், இறைவன்

அதுபோல் சில பெண்பால் சொற்களுக்கு ஆண்பால் சொற்கள் கிடையாது.

உதாரணத்திற்கு… விதவை, மலடி உள்ளிட்டவை.

எனவே, பெண்களுக்கான சில வார்த்தைகளை உருவாக்கி கார்த்திக் சுப்புராஜ் படக்குழுவினர் புதிதாக சில வார்த்தைகளை அறிமுகம் செய்துள்ளனர்.

அதில் மனிதன் சொல்லுக்கு நிகராக மனிதி என்றும், இறைவன் என்ற சொல்லுக்கு இறைவி என்றும் தெரிவித்துள்ளனர்.

தற்போது இறைவி படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக என் இறைவி என் பெயரில் அஜித்-ஷாலினி, விஜய்-சங்கீதா, சூர்யா-ஜோதிகா, தனுஷ்-அவரது அம்மா, சிம்பு-அவரது அம்மா ஆகியோரது படங்களை டிசைன் செய்து உலாவ விட்டுள்ளனர்.

ரசிகர்களும் தங்கள் இறைவி படத்துடன் இதை ஆர்வமுடன் பகிர்ந்து வருகின்றனர்.

எனவே இணையங்களில் என் இறைவி ட்ரெண்ட்ங்கில் உள்ளது.

Overall Rating : Not available

Related News

தான் இயக்கிய அட்டக்கத்தி, மெட்ராஸ் படத்தில்…
...Read More
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘இறைவி’ படத்தில்…
...Read More
இறைவி படத்தை தொடர்ந்து பிரபுதேவா நடிக்கும்…
...Read More

Latest Post