ஷார்ட் & ஸ்வீட்…. ஹாலிவுட்டில் விருது பெற்ற பூஜா தேவாரியா

ஷார்ட் & ஸ்வீட்…. ஹாலிவுட்டில் விருது பெற்ற பூஜா தேவாரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pooja Devariyaசெல்வராகவனின் ‘மயக்கம் என்ன’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நாடக கலைஞரான பூஜா தேவாரியா.

அதன்பின்னர் இறைவி, ‘குற்றமே தண்டனை’ மற்றும் ‘ஆண்டவன் கட்டளை’ படங்களில் நடித்து தன் அழகான முத்திரையை பதித்து வருகிறார்.

பாபி சிம்ஹாவுடன் நடித்துள்ள ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படம் இவரது நடிப்பில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் பிரபலமான ஹாலிவுட் நாடக விழாவான ‘ஷார்ட் & ஸ்வீட் நாடக விழாவில்’ ‘வளர்ந்து வரும் கலைஞர்’ என்கிற விருதை பெற்றிருக்கிறார்.

இவருடன் மதிவாணன் ராஜேந்திரனும் இந்த விருதை பெற்றிருக்கிறார்.

‘ஸ்ட்ரே பேக்டரி’ என்னும் நிறுவனத்தின் சார்பில் இந்த இருவர் மட்டும் தான் இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மை நேம் ஸ் சினிமா’ மற்றும் ‘வா வன் கோ’ ஆகிய இரண்டு நாடகங்களை இந்த விழாவில் பூஜா தேவாரியாவும், மதிவாணன் ராஜேந்திரனும் அரங்கேற்றி இருக்கின்றனர் .

மேலும் சிட்னி மற்றும் ஆக்லேண்ட் நகரங்களில் அரகேற்றப்பட்ட ‘மை நேம் ஸ் சினிமா’ நாடகத்திற்காக, சிறந்த நடிகை மற்றும் சிறந்த இயக்குனருக்கான விருதுகளை இவர்கள் இருவரும் பெற்றுள்ளனர்.

தனுஷின் ‘கொடி’… பர்ஸ்ட் லுக்குக்கே இவ்ளோ பவரா.?

தனுஷின் ‘கொடி’… பர்ஸ்ட் லுக்குக்கே இவ்ளோ பவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush double kodiபன்முக திறமை கொண்ட தனுஷின் அடுத்தடுத்த பட அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

அண்மையில் வெளியான தொடரி படத்தில் இவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து நேற்று கொடி படத்தின் பர்ஸ்ட் லுக் மோசன் போஸ்டரை வெளியிட்டார்.

இப்படத்தில் இவர் ஏற்றுள்ள இரு வேடத்திற்கும் பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தின் தமிழக உரிமை மட்டும் ரூ. 20 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம்.

பர்ஸ்ட் லுக்குக்கே இப்படி பிஸினஸ் பத்திக்கிச்சின்னா… இன்னும் டீசர், ட்ரைலர், பாடல்கள் வெளியானால்…?

சூர்யா படத்தில் ‘பாகுபலி’ பிரபாஸ் நடிக்கிறாரா? இல்லையா?

சூர்யா படத்தில் ‘பாகுபலி’ பிரபாஸ் நடிக்கிறாரா? இல்லையா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prabhas bahubaliசூர்யா நடித்துள்ள சிங்கம் 3 படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 16 என அதிகாரப்பூர்வமாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இப்படத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் கௌரவ வேடத்தில் நடிப்பதாக சில நாட்களாக தகவல்கள் வருகின்றன.

இதுகுறித்து படக்குழுவினர் தரப்பில் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

ஆனால் ஒரு முக்கியமான போலீஸ் கேரக்டரில் பிரபலமானவர் ஒருவர் நடிப்பது உறுதியாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.

படுரகசியமான கேரக்டர் என்பதால் அது குறித்த தகவல்களை வெளியிட மறுத்து வருகின்றனர்.

கொஞ்சம் நாள் பொறுத்துதான் பார்ப்போமே..

‘தலைவர்’ இடத்தில் நானா.? எஸ்கேப் ஆன தல.!

‘தலைவர்’ இடத்தில் நானா.? எஸ்கேப் ஆன தல.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini ajithசிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னை ஈ.வி.பி. நகரில் செட் அமைத்து அங்கே படமாக்க திட்டமிட்டிருந்தாராம் சிவா.

ஆனால் அங்கே ஷங்கர் இயக்கும் ரஜினியின் 2.ஓ சூட்டிங் நடைபெறுகிறதாம்.

எனவே தனக்கு அந்த இடத்தில் பிரைவசி கிடைக்காது என நினைத்த அஜித் சூட்டிங் ஸ்பாட்டை மாற்றி விட்டதாக சொல்லப்படுகிறது.

அதாவது ஹைதராபாத்தில் அக்காட்சிகளை படமாக்கி சொல்லிவிட்டாராம் அஜித்.

இதனால் படக்குழு ஹைதராபாத் பறக்கும் என கூறப்படுகிறது.

‘படையப்பா’ பாணியில் சிம்பு படம்

‘படையப்பா’ பாணியில் சிம்பு படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu padaiyappa styleஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

இதில் சிம்பு மூன்று வேடம் ஏற்க உள்ளதையும், அதில் இரண்டு கேரக்டர்கள் பற்றிய தகவல்களையும் தெரிவித்திருந்தோம்.
முதல் கேரக்டரான மதுரை மைக்கேலுக்கு ஸ்ரேயா ஜோடியாக நடிக்கிறார்.

இரண்டாவது கேரக்டரில் 60 வயது முதியவராக அஸ்வின் தாத்தா என்ற கெட்டப்பில் நடிக்கிறார்.

தற்போது இந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதில் படையப்பா பாணியில் ரஜினி ஸ்டைலாக போஸ் கொடுப்பது போன்று சிம்பு நிற்கிறார். அவரின் முதுகுபுறம் மட்டுமே படத்தில் தெரிகிறது.

அருகில் மொட்டை ராஜேந்திரன் கேமராவை பார்த்த படி நிற்கிறார்.

விஜய்-சூர்யா-கார்த்தி வழியில் ஆர்வம் காட்டும் விக்ரம்

விஜய்-சூர்யா-கார்த்தி வழியில் ஆர்வம் காட்டும் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikramவிஜய்க்கு தமிழகத்தை போன்றே கேரளாவிலும் ரசிகர் வட்டம் உருவாகி வருவதால், அவரது படங்களில் மலையாளம் நிறையவே மணக்கிறது.

அதற்கு தெறி படத்தை சரியான உதாரணமாக சொல்லலாம்.

அதுபோல், சூர்யா-கார்த்திக்கு ஆந்திராவில் ஆச்சரியப்படும் அளவிற்கு மாஸ் உருவாகியுள்ளது.

தோழா படம் கிட்டதட்ட ஆந்திராவை குறிவைத்தே உருவாக்கப்பட்டது

தற்போது இவர்களின் பாணியை பின்பற்றி விக்ரம் ஒரு புது முடிவு எடுத்திருக்கிறாராம்.

இருமுகன் படத்திற்கு கேரளாவிலும் ஆந்திராவிலும் நல்ல வரவேற்பு இருந்துள்ளது.

எனவே விரைவில் நேரடி மலையாளம் மற்றும் தெலுங்கு படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகிறாராம்.

More Articles
Follows