அரை டஜன் படங்கள்… கோடிகளில் புரளும் விஜய்சேதுபதி

அரை டஜன் படங்கள்… கோடிகளில் புரளும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi movies in 2016இந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் விஜய் சேதுபதி நடிப்பில் அரை டஜன் படங்கள் வெளியானது.

சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க ஆகிய 6 படங்கள் ரிலீஸ் ஆனது.

ஒரு சில படங்கள் சற்று சரிவை சந்தித்தாலும், மற்றவை நன்றாகவே கல்லா கட்டியது.

இந்த படங்கள் அனைத்தும் சென்னையில் மட்டும் கிட்டதட்ட ரூ 16 கோடி வரை வசூல் செய்து கொடுத்துள்ளாம்.

இதில் அதிகபட்சமாக சீனுராமசாமி இயக்கிய தர்மதுரை படம் ரூ. 3 கோடி வசூல் செய்து டாப்பில் உள்ளது.

சிறிய பட்ஜெட் அதிக லாபம் என்ற விஜய் சேதுபதியின் பார்முலா இந்த வருடமும் தொடர வாழ்த்துக்கள்.

2016ல் தமிழ் சினிமாவை கலக்கிய பெண் இயக்குனர்கள்

2016ல் தமிழ் சினிமாவை கலக்கிய பெண் இயக்குனர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Best Tamil Female Directors in 2016எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் வளர்ந்து வருகின்றனர்.

நடிப்புத் துறைகளில் பல பெண்கள் இருந்தாலும், இயக்கத்தில் ஒரு சிலரே தங்கள் படைப்புகளால் உயர்ந்து நிற்கின்றனர்.

இந்த 2016ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் தங்கள் தடங்களை பதித்த பெண் இயக்குனர்கள் ஒரு சிலரைப் பற்றி இங்கே காண்போம்.

லக்ஷ்மி ராமகிருஷ்ணன்…

ஒரு பக்கம் நடிப்பு. ஒரு பக்கம் டிவி நிகழ்ச்சிகள் என பரபரப்பாக இருந்தாலும் இயக்கத்திலும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் கை ஓங்கியே உள்ளது.

இந்தாண்டு இவர் இயக்கத்தில் வெளியான ‘அம்மணி’ எல்லா தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

பெற்றோரை விட பணமே இன்று வாழ்க்கை தீர்மானிக்கிறது என்பதை உருக்கமாக பதிவு செய்திருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

உஷா கிருஷ்ணன்…

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஆண் பாவம் படத்தை யாராலும் மறக்க முடியாது.

அதுபோன்ற அண்ணன் தம்பிகளின் ஜாலி கலாட்டக்களை சொல்ல ஒரு படம் வரவில்லையே என்ற ஏக்கத்தை உஷா கிருஷ்ணன் தீர்த்து வைத்தார்.

ராஜா மந்திரி என்ற படத்தில் கலையரசன், காளி வெங்கட் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படம் மூலம் ரசிகர்களிடையே நல்ல பெயரை பெற்றார் இதன் இயக்குனர்.

கீதாஞ்சலி செல்வராகவன்…

‘மாலை நேரத்து மயக்கம்’ இப்படத்தின் இயக்குனர் கீதாஞ்சலி என்றாலும் இவரது கணவர் செல்வராகவனின் சாயலே படம் முழுக்க இருந்தது.

கணவன், மனைவி இடையே நடக்கும் சிறசிறு மோதல்களையும் ஊடல்களையும் செல்வராகவன் பாணியில் கூறியிருந்தார் கீதாஞ்சலி.

இப்படம் இந்தாண்டு 2016 பிறந்த தினமான ஜனவரி 1ஆம் தேதியே வெளியானது குறிப்பிடத்தக்கது.

சுதா கொங்கரா…

மாதவன் மற்றும் ரியல் பாக்ஸர் ரித்திகா சிங் நடித்த ‘இறுதிச் சுற்று’ படத்தை இயக்கியிருந்தார் சுதா கொங்கரா.

உண்மையிலேயே பெண்தான் இயக்கினாரா? என்ற சந்தேகம் எல்லாருக்கும் ஏற்பட்டது.

படத்தில் மாதவனையும் ரித்திகாவையும் அவ்வளவு தத்ரூபமாக காட்டியிருந்தார்.

மேலும் விளையாட்டுத் துறையில் நடக்கும் அரசியலையும் அப்பட்டமாக காட்டியிருந்தார்.

இவர் இதற்குமுன்பே துரோகி என்ற படத்தையும் இயக்கியிருந்தார்.

நெகடிவ்வான தலைப்புகள் வெற்றிப் பெறாது என்ற செண்டிமென்டையும் இப்படம் உடைத்தது.

அஜித்-நயன்தாரா ரூட்டில் ஜெய் செல்வது சரியா?

அஜித்-நயன்தாரா ரூட்டில் ஜெய் செல்வது சரியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith Nayanthara Jaiபொது நிகழ்ச்சிகள் என்றாலும், தங்கள் படங்களின் நிகழ்ச்சி என்றாலும் அஜித், நயன்தாரா ஆகியோர் விழாக்களில் கலந்து கொள்வதில்லை.

சில தயாரிப்பாளர்கள் இச்செயலை கண்டித்தும் இது தொடர்கதையாகி வருகிறது.

தற்போது இவர்களின் வரிசையில் ஜெய்யும் இணைந்து வருவதால், அவரின் செயலும் விமர்சித்துக்குள்ளாகி வருகிறது.

சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற சென்னை-28-2 படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஜெய் கலந்துக் கொள்ளவில்லை.

அதுபோல் நேற்று நடைபெற்ற எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தின் ஆடியோ விழாவிலும் ஜெய் கலந்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய் லண்டனில் இருப்பதால், கலந்து கொள்ளவில்லை என அப்பட இயக்குனர் மகேந்திரன் ராஜாமணி தெரிவித்தார்.

தமிழ் சினிமாவுக்கு பெருமைத் தேடித் தரும் கபாலி-பைரவா

தமிழ் சினிமாவுக்கு பெருமைத் தேடித் தரும் கபாலி-பைரவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali bairavaaஉலக நாடுகளில் இந்தி சினிமாக்களே இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தன.

ஆனால் சமீப காலமாக தமிழ் சினிமாக்களும் இந்த வரிசையில் இடம் பிடித்து வருகின்றன.

சில மாதங்களுக்கு முன், ரஜினி நடித்த கபாலி படம் முதன்முறையாக பாரிஸில் உள்ள தி கிரான்ட் ரெக்ஸ் தியேட்டரில் திரையிடப்பட்டது.

தற்போது விஜய் நடித்த பைரவா படமும் ஐரோப்பாவிலுள்ள லாட்வியாவில் உள்ள தியேட்டர்களில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

அஜித் ரசிகர் மன்ற தலைவராக பொறுப்பேற்கும் ஆர்.கே. சுரேஷ்

அஜித் ரசிகர் மன்ற தலைவராக பொறுப்பேற்கும் ஆர்.கே. சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

R K Sureshஇந்தாண்டில் வெளியான ‘தாரை தப்பட்டை’ மற்றும் மருது படங்களில் டெரர் வில்லனாக நடிப்பில் மிரட்டியவர் ஆர். கே. சுரேஷ்.

இவர் தர்மதுரை உள்ளிட்ட படங்களை தயாரித்தும் வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.

இவர் நடித்துவரும் ‘பில்லா பாண்டி என்ற படத்தில் அஜித் ரசிகர் மன்ற தலைவராக நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்காக அஜித்தின் உருவத்தை தனது உடம்பில் டாட்டூவாகவும் வரைய இருக்கிறார்.

இதன் சூட்டிங் 2017 பொங்கல் முதல் துவங்கவிருக்கிறது.

ஆஸ்கர் நாயகனை அசர வைத்த ரஜினிகாந்த்

ஆஸ்கர் நாயகனை அசர வைத்த ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthஷங்கர் இயக்கி வரும் ‘2.0’ படத்தின் சூட்டிங் ஒரு பக்கம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

மறுப்பக்கம் இதன் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இதன் டப்பிங் பணிகளை சூப்பர் ஸ்டார் ரஜினி தொடங்கிவிட்டார்.

நேற்று மட்டும் ஒரே நாளில் மூன்று ரீல்களின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டாராம்.

ரஜினியின் விறுவிறுப்பான டப்பிங்கால் ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி அசந்தேவிட்டார் என தெரிவித்துள்ளார்.

resul pookutty ‏@resulp
The commitment&virtuosity our thalaivar @superstarrajini has is unparallel.Finished three reels in one day,I’m amazed at the way he works!

More Articles
Follows