விஜய்61 பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியில் மாற்றம்; ரசிகர்கள் குஷி

விஜய்61 பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியில் மாற்றம்; ரசிகர்கள் குஷி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay 61 first look will be released on June 21st 2017நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வருகிற ஜுன் 22ஆம் தேதி வருகிறது.

இதனை முன்னிட்டு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்த அட்லி இயக்கிவரும் தளபதி 61 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை அன்றைய தினத்தில் வெளியிட இருந்தனர்.

இதுநாள் வரை அந்த கொண்டாத்திற்காக ரசிகர்கள் காத்து கிடந்தனர்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் நாளை (ஜீன் 21) மாலை 6 மணிக்கே இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிட உள்ளனர்.

இதனை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Vijay 61 first look will be released on June 21st 2017

ரஜினியின் அடுத்தடுத்த சந்திப்புகள்; இன்று இந்து மக்கள் கட்சி

ரஜினியின் அடுத்தடுத்த சந்திப்புகள்; இன்று இந்து மக்கள் கட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக வந்த செய்திகளை அடுத்து தினம் தினம் பிரபலங்கள் அவரை சந்தித்து வருகின்றனர்.

இன்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ரஜினியை சந்தித்துள்ளார்.

அவருடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும் உடனிருந்தார்.

இந்த சந்திப்பின் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத் கூறுகையில்…

‘ரஜினி கண்டிப்பாக தனி கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருவார். இது குறித்த ஆலோசனைகளை அவர் நடத்தி வருகிறார்.

அவர் அரசியலுக்கு வருவதற்கான சரியான தருணம் இதுதான்.

பா.ஜ.க. ரஜினியை இயக்கவில்லை’ என்று தெரிவித்தார்.

விஜய் அரசியலுக்கு வருவாரா? எஸ்ஏ சந்திரசேகர் ஓபன் டாக்

விஜய் அரசியலுக்கு வருவாரா? எஸ்ஏ சந்திரசேகர் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay with his dadதமிழக அரசியல் களத்தில் விஜய் குதிக்க உள்ளதாகவும், அதற்கான ஆயுத்த பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருவதாக அண்மைகாலமாக பல செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், புரட்சி இயக்குனரும், விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் கூறியதாவது…
“விஜய் அரசியலுக்கு வருவது அவரது விருப்பம். நான் தலையிடுவதில்லை.

அவருடைய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் நான். அதற்கான பணிகளை மட்டுமே செய்து வருகிறேன்.” என்று தெரிவித்தார்.

‘பாஸ்ட் ஃபுட் முதல் மெடிக்கல் வரை…’ வேலைக்காரன் ரவுண்ட் அப்

‘பாஸ்ட் ஃபுட் முதல் மெடிக்கல் வரை…’ வேலைக்காரன் ரவுண்ட் அப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

velaikkaran stillsமோகன்ராஜா இயக்கும் வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஸ்நேகா, பஹத்பாசில் உள்ளிட்டோர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சில எதிர்மறையாக கருத்துக்களை சந்தித்தாலும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

மேலும் இப்படத்தை தான் பெரிதும் எதிர்பார்ப்பதாக ஜெயம்ரவி அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் கதையானது தற்போது டிரெண்டாகியுள்ள பாஸ்ட் புட் உணவுகளின் தீமைகளை விளக்குவதாக உள்ளதாம்.

மேலும் இதை வைத்து இந்தியாவில் நடக்கும் மருத்துவ துறையின் லாபத்தையும் சுட்டிக் காட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ரமணா-துப்பாக்கி படங்களின் கலவை விஜய் 61.?

ரமணா-துப்பாக்கி படங்களின் கலவை விஜய் 61.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay atleeஅட்லி இயக்கிவரும் தளபதி 61 படத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்து வருகிறார்.

வருகிற ஜீன் 22ஆம் தேதி இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபஸ்ட் லுக்கை வெளியிட உள்ளனர்.

இந்த படம் எந்த மாதிரியான படமாக இருக்கும்? என்ற ஆவல் ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இது ரஜினியின் மூன்று முகம் படத்தின் தழுவலாக இருக்கும் என கூறப்பட்டது.

தற்போது ஏஆர். முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி மற்றும் ரமணா படத்தின் விறுவிறுப்பான திரைக்கதையை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

பெரிய படங்கள் என்றாலே இதுபோன்ற செய்திகள் வந்துக் கொண்டேதான் இருக்கும். எனவே இந்தாண்டு தீபாவளி வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.

Vijay 61 movie screen play updates

25 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ஏஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி

25 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ஏஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music Director AR Rahman london concert on July 8th to Celebrate his 25th yearகடந்த 1992ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ரோஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர். ரஹ்மான்.

தற்போது இவர் இசைப்பயணத்தில் 25 வருடங்களை நிறைவு செய்துள்ளார்.

எனவே இதனை கொண்டாடும் வகையில், ‘நேற்று இன்று நாளை’ என்ற பெயரில் லண்டனில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளது.

வரும் ஜூலை 8ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது…

“கடந்த 25 வருடங்களாக தொடரும் இசைப்பயணம் உண்மையிலேயே மறக்கமுடியாதது. ஆச்சரியமானது.

என் ரசிகர்களின் அன்பைப் பெற நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்.

‘ரோஜா’ முதல் ‘காற்று வெளியிடை’ படங்கள் வரைக்குமான என் இசைப்பயணத்தைக் கொண்டாடும் லண்டன் நிகழ்ச்சியை மிகவும் எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பென்னி தயால், நீத்தி மோகன், ஹரிசரன், ஜொனிடா காந்தி, ஜாவத் அலி போன்ற பிரபல பாடகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Music Director AR Rahman london concert on July 8th to Celebrate his 25th year

More Articles
Follows