தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அட்லி இயக்கிவரும் தளபதி 61 படத்தில் விஜய் 3 விதமாக கெட்டப்புகளில் நடித்து வருகிறார்.
இதில் ஒரு கேரக்டர் தந்தை என்றும் மற்ற இரண்டு கேரக்டர்கள் அவரது மகன்களாக நடிக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
தந்தை கேரக்டருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க, மகன்களுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் சமந்தா நடிக்கின்றனர்.
விஜய்யும் காஜலும் டாக்டர்களாக நடிக்க, அதன் சூட்டிங்கை ஐரோப்பா நாட்டில் படமாக்கினார் அட்லி.
தற்போது விஜய், சமந்தா காட்சிகளை சென்னையருகே படமாக்கி வருகிறார்.
இந்த விஜய் கேரக்டர்தான் மாறா என்று அழைக்கப்படுவதை பார்த்தோம்.
இந்நிலையில் ஒரு சூழ்நிலையில் இந்த மாறா கேரக்டரை போலீஸ் சத்யராஜ் அரெஸ்ட் செய்வது போல காட்சிகளை படமாக்கியுள்ளனர்.
அப்போது மக்கள் திரண்டு வந்து, மாறாவை விடுதலை செய் என கோஷமிட்டு போராடுவதாக காட்சிகளையும் படமாக்கியுள்ளார் அட்லி.
Sathyaraj arrested Vijay Atlee 3 movie updates