அதிகாரப்பூர்வமாக வெளியானது ஆர்கே. நகர் படம்; அப்போ பார்ட்டி

அதிகாரப்பூர்வமாக வெளியானது ஆர்கே. நகர் படம்; அப்போ பார்ட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RK Nagar stillsஆர்கே. நகர் இடைத்தேர்தல் நடத்திய பரபரப்பை யாராலும் மறக்கமுடியாது. ஓட்டுக்கு பணம் முதல் விஷால் தேர்தல் மனு என அதிரடியாக பட்டைய கிளப்பியது.

அந்த சமயத்தில் தான் தயாரிக்கும் படத்திற்கு ஆர்கே. நகர் என பெயர் வைத்தார் வெங்கட் பிரபு.

இந்த படத்தை சரவணகுமார் என்பவர் இயக்கியுள்ளார்.

இதில் வைபவ், சனா, சம்பத்ராஜ் உள்ளிட்டோர் நடிக்க நடிகர் பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.

இந்த படம் ரிலீசுக்கு தயாரானாலும் பல பிரச்சினைகளால் படம் வெளியாகவில்லை.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் படத்தை தியேட்டரில் வெளியிடாமல், நேரடியாகவே நெட்பிளிக்ஸில் வெளியிட்டுள்ளனர்.

அதுபோல் வெங்கட்பிரபு இயக்கியுள்ள பார்ட்டி என்ற படமும் நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் உள்ளது. அதான் நிலைமை என்னவோ?

முக்தா பிலிம்ஸ் வைர விழா… கமல் கௌதமி மீண்டும் சந்திப்பு.?

முக்தா பிலிம்ஸ் வைர விழா… கமல் கௌதமி மீண்டும் சந்திப்பு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal and gauthamiமுக்தா பிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளது.

அண்மைக்காலமாக படங்களை இவர்கள் தயாரிக்கவில்லை.

இந்த நிலையில் இதன் வைர விழா, 22ம் தேதி, சென்னையில் நடைபெற உள்ளது.

இந்நிறுவனம் தயாரித்த 41 படங்களில், பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர்.

எனவே அவர்கள் இந்த வைரவிழாவில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

சிம்லா ஸ்பெஷல், நாயகன் படங்களில் கமல் நடித்துள்ளார்.

அதுபோல் வாய்க்கொழுப்பு, பிரம்மச்சாரி படங்களில் கவுதமி நடித்துள்ளார்.

எனவே இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சியில் சந்திக்க வாய்ப்பிருக்கலாம் எனத் தெரிகிறது.

பல ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்ந்த கமல் கவுதமி இருவரும் சில வருடங்களுக்கு முன் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருட்டு அறை முரட்டு குத்து 2 படத்தில் லெஸ்பியனாக ஷாலு ஷம்மு?

இருட்டு அறை முரட்டு குத்து 2 படத்தில் லெஸ்பியனாக ஷாலு ஷம்மு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shaalu shamu in IAMK 2வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீதிவ்யாவின் தோழியாக நடித்திருந்தார் ஷாலு ஷம்மு.

அண்மையில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்திலும் இவர் நடித்திருந்தார்.

இவரின் நிஜ கவர்ச்சி நடன வீடியோ ஒன்று அண்மையில் வெளியாகி இளைஞர்களை சூடேற்றியது.

இதன்பின்னர் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க இயக்குநர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

ரோஜாக்களை ஆடையாக்கி இணையத்தை ஹாட்டாக்கிய ஷாலு ஷம்மு

இந்த நிலையில் தற்போது ‛இருட்டு அறையில் முரட்டு குத்து 2′ படத்தில் நடித்து வருகிறார் ஷம்மு.

முதல் பாகத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமாரே இரண்டாம் பாகத்தையும் இயக்கி நாயகனாக அறிமுகமாகிறார்.

அவரின் நண்பராக டேனி போப் நடிக்க. டேனிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடிக்கிறாராம்.

அப்போது சூட்டிங் ஸ்பாட்டில் ரீத்திகா அசோக் என்ற மற்றொரு நடிகைக்கு லிப் லாக் முத்தம் கொடுத்திருக்கிறார் ஷாலு. அந்த வீடியோ லீக்காகியுள்ளது.

ஒருவேளை இது படத்தில் உள்ள காட்சியோ? மற்றொரு நடிகைக்கு இவர் முத்தம் கொடுப்பதால் அது லெஸ்பியன் சம்பந்தப்பட்ட காட்சியாக இருக்குமோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

செங்குட்டுவன் ஜோடியாக தனுஷ் பட நாயகி அம்மு அபிராமி நடிக்கிறார். மணி பாரதி இயக்கும் “பேட்டரி “

செங்குட்டுவன் ஜோடியாக தனுஷ் பட நாயகி அம்மு அபிராமி நடிக்கிறார். மணி பாரதி இயக்கும் “பேட்டரி “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

senguttuvan ammu abiramiஶ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் சார்பில் சி.மாதையன் தயாரிக்கும் புதிய படம் “பேட்டரி”.
மணி பாரதி கதை எழுதி இயக்கும் இப்படத்தில் செங்குட்டுவன் நாயகனாக நடிக்க, தனுஷின் “அசுரன்” படப்புகழ் அம்மு அபிராமி நாயகியாக நடிக்கிறார்.

இயக்குநர் மணிபாரதி கூறியதாவது…

பொதுவாகவே நல்ல கதையம்சம் உள்ள படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தின் கதையும் பரபரப்பாக அமைந்துள்ளது. உண்மையில் நடந்த சில சம்பவங்களின் அடிப்படையில் இதன் திரைக்கதையை அமைத்து வசனம் எழுதியிருக்கிறார் ரவிவர்மா பச்சையப்பன். இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். அப்படி வறுமை கோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களுக்கு மருத்துவம் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. அப்படிப்பட மருத்துவ துறையிலேயே முறைகேடு நடந்தால் அதை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள். அப்படி மருத்துவ துறையில் நடக்கும் முறைகேட்டால் ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப் படுகிறது என்பதை நெஞ்சை பதபதக்கவைக்கும் காட்சிகளாக படமாக்கியுள்ளோம்.
இதை ஒரு க்ரைம் திரில்லர் படமாக நீங்கள் பார்க்கலாம்” என்றார்.

இயக்குநர் மணிபாரதி பிரபல இயக்குநர்கள் வஸந்த், மணிரத்னம் , சரண் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இயக்குநர் லிங்குசாமி, ஹரி ஆகியோரின் கதை விவாதங்களில் பங்காற்றி வருபவர்.

இப்படத்தில் நாயகனாக நடிக்கும் செங்குட்டுவன் சப் இன்ஸ்பெக்டராக நடிக்கிறார். அவரது கதாப்பாத்திரம் வெகு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். நாயகனுக்கு இணையானதாக நாயகி பாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். சமீபத்தில் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட “அசுரன்” படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்த அம்மு அபிராமி இப்படத்தில் நாயகி பாத்திரம் ஏற்றுள்ளார். மேலும் “கைதி” படத்தில் மக்களிடம் கைத்தட்டல் பெற்ற ஜார்ஜ் மரியான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ராஜ்குமார், நாகேந்திர பிரசாத், கிருஷ்ணகுமார், அபிஷேக் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் படத்தில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களுக்கு நடிகர் தேர்வு நடைபெற்று வருகிறது.

பூஜையுடன் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமானது. விழாவில் இயக்குநர் லிங்குசாமி கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். படம் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.

எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது “தம்பி”

எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது “தம்பி”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thambi team meet“தம்பி” படத்தில் முதல் முறையாக ஜோதிகா, கார்த்தி இணைந்து நடிக்கும் படம், ஜோதிகாவின் தம்பி தயாரித்திருக்கும் படம், இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியிருக்கும் படம் என எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது “தம்பி”.

ஜோதிகா, கார்த்தி, நிகிலா விமல், இயக்குநர் ஜீத்து ஜோசப் ஆகிய நால்வரையும் படம் பற்றி பேச ஒன்றாக சந்தித்த உரையராடலிலிருந்து…

சூர்யா, கார்த்தி இருவரும் சேர்ந்து நடிப்பாங்கனு எல்லாரும் எதிர்பார்த்துட்டு இருக்காங்க ஆனா இவங்க ரெண்டு பேரையும் சேர்ந்து நடிக்க வச்சது ஏன் ?

ஜீத்து ஜோசப் : இவங்க ரெண்டு பேரையும் நான் செலக்ட் பண்ணல, எங்கிட்ட வந்தப்போ இவங்க ரெண்டு பேரும் பிக்ஸ் ஆகிருந்தாங்க, இந்த காம்பினேஷன் எனக்கு பிடிச்சிருந்தது அதுக்கு அப்புறமா மற்ற நடிகர்கள தான் நான் செலக்ட் பண்ணினேன்.

இந்தக்கதை எப்படி எழுதினீங்க ?

ஜீத்து ஜோசப் : இந்தக்கதை என்னோடதல்ல, பாலிவுட் ரைட்டர் ரென்ஷில் டி சில்வா, சமீர் அரோரா ரெண்டு பேரும் எழுதியிருக்காங்க அவங்க கதையை நான் கொஞ்சம் மாத்தி வேலை பார்த்திருக்கேன். அவங்க ஹிந்தி, நான் மலையாளம் அதனால தமிழ்ல சரியா இருக்கனும்கிறதுக்காக விக்ரம் வேதா ரைட்டர் மணிகண்டன் இதில வேலை பார்த்திருக்கார். இந்தபடத்தின் திரைக்கதையில 4,5 பேர் வேலை பார்த்திருக்கோம்.

கதை பற்றி கொஞ்சமா சொல்லுங்களேன் ?

ஜீத்து ஜோசப்: இது ஒரு ஃபேமிலி படம், திரில்லர் இருக்கு. ரெண்டு ஃபேமிலி அவங்களுக்குள்ள நடக்கிற சம்பவங்கள், அதில் ஒரு
திரில்லர் இருக்கும். இதுக்கு மேல இப்ப எதுவும் சொல்ல முடியாது.

தம்பி கார்த்தி, அக்காவுக்காக யாரை கொலை பண்றார் அத எப்படி மறைக்கிறார் ?

கார்த்தி : ப்பா நீங்களே கதை எழுதிடலாம் போலயே ! தம்பி இரண்டாம் பாகம் எடுத்துடலாம்.

இதுல வேற வேற லுக்ல வர்றீங்களே எத்தனை கேரக்டர் உங்களுக்கு ?

கார்த்தி : மல்டிபிள் லுக் கிடையாது . ரெண்டு லுக் தான். கதை கோவாவுல ஆரம்பிச்சு பயணிக்குது.அதனால ரெண்டு லுக். ஒரே கேரக்டர் தான். நான் நிறைய கெட்டப் முயற்சி பண்ணினதில்லை. சார் தைரியம் சொல்லி கோவா லுக் பண்ண வச்சார் உங்கள சும்மாவே பாக்குறாங்க வேற லுக்லயும் பாப்பாங்கனு கன்வின்ஸ் பண்ணாரு. நான் ஒரு லுக்ல சுத்திட்டு இருக்கேன் இல்லையா அந்த லுக்ல கோவால நிறைய பேர் சுத்திட்டு இருக்காங்க. சார் பைக்ல கூட்டிப்போய் பாருங்க எவ்வளவு பேர் உங்கள மாதிரி சுத்திட்டு இருக்காங்கனு காட்டினார். கோவா பகுதிக்கு மட்டும் அதை முயற்சி பண்ணிருக்கோம் அப்புறம் நார்மலா ஆயிடுவேன்.

ரெண்டு விதமான பாத்திரம் பண்ணிருக்கீங்க அதில் உள்ள மாற்றங்கள் என்னென்ன ?

கார்த்தி : ரெண்டு கேரக்டர் கிடையாது. ஒரு கேரக்டர் தான் டபுள் ஆக்‌ஷன் கிடையாது ஒரே கேரக்டர் எப்படி டிராவல் ஆகுது அது மட்டும்தான். அது எப்படி மாறுது என்கிறது தான்

ஜீத்து ஜோசப் : இருக்கு, நிறைய வேறுபாடு இருக்கு. ரெண்டு விதமா பண்ணிருக்கார். நல்லாவே நடிச்சிருக்கார். நீங்க பாருங்களேன் தெரியும்.

உங்க தம்பி தயாரிக்கிற படம் இந்த தம்பி கூட நடிக்கிறீங்க எப்படி இருந்தது ?

ஜோதிகா: எதிர் பார்க்கவே இல்ல, எப்படி நடந்ததுனு இப்பவும் ஆச்சர்யாமா இருக்கு. அதுவும் தம்பின்னு டைட்டில் அமைஞ்சது எல்லாமே ரொம்ப சந்தோஷமா இருக்கு.

கார்த்தி கூட நடிக்கிறது கஷ்டமா ? இல்ல சூர்யா கூட நடிக்கிறது கஷ்டமா ?

ஜோதிகா : சூர்யா கூட தான். அவர் கூட நடிக்கிறது கஷ்டம்.. நிறைய சண்டை வரும்.

எப்படியான சண்டை ?

ஜோதிகா: உங்க வீட்ல எப்படி சண்டை வருமோ.. அப்படித்தான் புருஷன் பொண்டாட்டி சண்டை.

கார்த்தி : அண்ணாகிட்ட நேத்து சொன்னேன் நீ பாட்டுக்கு ஆடியோ லாஞ்ச்ல எனக்கு கிளிசரின் போடாம அழுக வராது, இவங்க ஈஸியா பண்ணுவாங்கனு பேசிட்டு போயிட்ட, எங்க ரெண்டு பேரையும் அழுமூஞ்சினு சொல்லப்போறங்கன்னு சொன்னேன்.

அது திறமைதான். கிளிசரின் போடாம அழுறது ஈஸியான விசயம் கிடையாது இல்லையா ?

கார்த்தி : என்னைப் பொறுத்த வரைக்கும் கதை தான் எல்லாத்துக்கும் காரணம் இது எல்லாமே கதை தீர்மாணிக்கிற விசயம்னு நம்புறேன். எல்லாப் படதுலயும் வரும்னு சொல்ல முடியாது. கதை சரியா இருக்கனும் எமோஷன் இருக்கனும் அப்பதான் ஒர்க் அவுட் ஆகும்.

தமிழ் சினிமால நிறைய அக்கா தம்பி வந்துருக்காங்க இதிலென்ன ஸ்பெஷல் ?

ஜீத்து ஜோசப்: அத நீங்க தியேட்டர்ல தான் பார்க்கனும். இதுல எல்லா கேரகடருக்கும் ஒரு அடையாளம் இருக்கும் . ஒரு நோக்கம் இருக்கும் .

கார்த்தி : இல்ல கண்டிப்பா ஒரு ஸ்பெஷல் இருக்கு ஆனா அத நீங்க தியேட்டர்லதான் பார்க்கனும்

ஜோதிக : இதுல நிறைய ஒரிஜினாலிடி இருக்கும்.

நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கும் போது எது கஷ்டமா இருந்தது ?

கார்த்தி : கஷ்டமெல்லாம் தோணவே இல்ல. நாங்க எப்பவும் எப்படி இருப்போமோ அப்படிதான் இருந்தது. நான் என்ன ரசிச்சேன்னா படத்துல எங்க ரெண்டு பேருக்கும் ஒத்து வராது. சண்டை போட்டுகிட்டே இருப்போம் அவங்க முறைப்பாங்க நான் ஒதுங்கி போவேன் அத ரசிச்சேன்.

வீட்லயும் அப்படித்தானா ?

கார்த்தி : ம்ம் வீட்லயும் நாங்க ரெண்டு பேரும் நிறைய பேசிப்போம்

ஜோதிகா : இல்ல வீட்ல நாங்க சண்டைலாம் போட்டுக்க மாட்டோம்.

தமிழ் சினிமால ஜோதிகாவ பொம்பள கமல்னு சொல்லுவாங்க இதுல எப்படி நடிச்சிருக்கீங்க ?

ஜோதிகா : அப்படில்லாம் ஒண்ணும் கிடையாது அப்படி யாரும் சொல்ல மாட்டாங்க. என்ன பொறுத்த வரைக்கும் லேடி கமல்னா ஒரே ஆள் ஊர்வசி மேடம் மட்டுந்தான்.

ஜீத்து ஜோசப் : ஒன்ணு சொல்லனும் இவங்க நடிப்பு பிரமாதம். ஒரு கேரக்டருக்கு இவங்க எடுத்துக்குற உழைப்பு, சிரத்தை, ஒரு ஸீனுக்கு முன்னாடி அவங்க தன்ன தயார்படுத்திக்கிறது எல்லாமே பக்கா ஃபுரபஷனல்.

ஜோதிகா : நன்றி சார்

தம்பினு ஏற்கனவே ஒரு படம் வந்துருக்கு அப்புறம் ஏன் மீண்டும் அதே டைட்டில் ?

ஜீத்து ஜோசப் : நிறைய டைட்டில் தேர்ந்தெடுத்தோம் ஆனா இந்தக்கதைக்கு இது தான் சரியா இருந்தது. இந்தப்படமே அக்கா தம்பி கதை தான் அதுனால இது சரினு தோணுச்சு .

கார்த்தி : நிறைய டைட்டில் யோசிச்சோம் கிடைக்கல, ஏற்கனவே புக் பண்ணி வச்சுட்டாங்க, கெஞ்சி கூடப்பார்த்தோம் ஆனா கிடைக்கல அப்புறம் இந்த டைட்டில் சரியா இருக்கும்னு டைரக்டர் சொன்னார். அப்புறம் எனக்குள்ள இருக்கிற ஒரு உதவி இயக்குநரா யோசிச்சு, நம்ம மொழில இருக்குற டைட்டில் படத்துக்கும் சரியான டைட்டில்னு இத வச்சுட்டோம்.

ஜீத்து ஜோசப் படத்துல நடிக்கிறதுக்கான ஸ்கோப் அதிகமா இருக்கும் இதுல எப்படி இருந்தது ?

கார்த்தி : என்னை பொறுத்தவரைக்கும் சார் சுதந்திரமா விட்டுடுவாரு. அவங்கங்க பெஸ்ட் எதுவோ அத பண்ண விடுவாரு. அதே நேரம் ஸீனுக்கு என்ன வேணுமோ அத எடுத்துடுவாரு

ஜோதிகா : எனக்கு பிடிச்ச விசயம்.. சார் எல்லாத்துக்கும் லாஜிக் பார்ப்பாரு. ஒரு ஸீன் அந்த லாஜிக்கோட இருக்கா ஆடியன்ஸ் பாயிண்ட்ல எப்படி எடுத்துப்பாங்கனு பார்ப்பாரு. இப்ப யாரும் அதப் பாக்கிறதில்ல அது எனக்கு பிடிக்கும்.

நிகிலா விமல் : டைரக்டர் எப்பவும் பர்ஃபெக்ட் 99 க்கும் போக விட மாட்டார் 101க்கும் போக விட மாட்டார். சரியா 100 ல அவருக்கு தேவையானத வாங்கிடுவார்.

கார்த்தி, ஜோதிகா படங்கள் பார்த்திருக்கீங்களா ? உங்களுக்கு பிடிச்ச படங்கள் ?

ஜீத்து ஜோசப் : கார்த்தியோட முதல் படம் பருத்திவீரன் அதுலயே கலக்கியிருப்பார். அப்புறம் தீரன், இப்ப கைதி ரொம்ப பிடிக்கும். ஜோ மொழில ரொம்ப பிடிக்கும் அவங்க என்ன பண்ணாலும் சரியா இருக்கும் அது பிடிக்கும். எல்லாப்படங்களும் பார்ப்பேன்

அப்பாவியான எக்ஸ்பிரஷன்ஸ் ஜோதிகா பயங்கரமா தருவாங்க இந்தப்படத்துல இல்லையே ?

ஜீத்து ஜொசப் : இல்லைனு உங்களுக்கு எப்படி தெரியும் படத்துல இருக்கு பாருங்க. ஜோ மேடம் கிட்ட டெட்லி லுக் ஒன்ணு இருக்கு அது இந்தபடத்தில நல்லா வந்திருக்கு.

யார் பார்த்தாலும் பயந்துடுவாங்க இல்ல ?
ஜீத்து ஜொசப் : ஆமா ரொம்ப பயங்கரமா இருக்கும் இந்தப்படத்தில் அது இருக்கு.

சூர்யா பார்த்தாலும் பயந்துடுவாரா ?

ஜோதிகா : நீங்க இதத்ததான் கேப்பீங்கனு தெரியும்.

சத்யராஜ், சௌகார் ஜானகி பயங்கரமா நடிக்க கூடியவங்க கூட நடிக்கும் போது பயமா இருந்ததா ?

கார்த்தி : சார் நான் அவங்க ரோல் பண்ண முடியாது. சத்யராஜ் சார் ரோலோ, சௌகார் மேடம் ரோலோ என்னால நடிக்க முடியாது. நான் என்னோட ரோல் தான் பண்ண முடியும் அத சரியா பண்ணினா போதும்னு நினைக்கிறேன். அப்புறம் இதுல எல்லாருக்குமே அற்புதமான கதாப்பாத்திரம். அவங்களுக்கான ஸ்பேஸ் இருந்தது. ஒரு படத்தில எல்லாரும் இணைஞ்சு நல்லா நடிச்சா தான் படம் நல்லா வரும். படம் முடிஞ்சு போகும்போது அந்தகேரக்டர் நல்லா இருந்ததுல இந்தக் கேரக்டர் நல்லா இருந்தது அப்படினு பேசினாதான் படம் ஜெயிக்கும் நான் அததான் நம்புறேன்.

சௌகார் ஜானகி மேடம்
ரொம்பவும் அனுபவம் வாந்த நடிகை அவங்களோட நடிச்சது எப்படி இருந்தது ?

ஜோதிகா : ஒரு மிகப்பெரிய அனுபவம் அவங்களுக்கு எத்தனை வருட அனுபவம் அவங்களோட சேர்ந்து இருந்தாலே அவ்வளவு சந்தோஷமா இருக்கும். அவங்க ஹோட்டலுக்கே போக மாட்டாங்க, ஸ்பாட்லயே தான் இருப்பாங்க, இப்பவும் தொழில்மேல அவங்க காட்டற பக்தி பெரிது. முதல் நாள் ஜீன்ஸ் டீசர்ட்ல வந்தாங்க, யூனிட்ல இருக்க எல்லாத்து கூடயும் பழகுவாங்க அவங்களுக்கு ஸ்வீட் வாங்கி கொடுத்தாங்க, எல்லாத்துக்கும் சமச்சு போட்டாங்க.

கார்த்தி : 88 வயசில லைஃப் என்ஜாய் பண்றாங்க, துறுதுறுன்னு இருக்காங்க, படிக்கட்டுல விழுகுற மாதிரி ஒரு ஸீன் நாங்க எதிர்பாக்கவே இல்ல. டக்குனு
விழுந்து எந்திரிச்சுட்டாங்க, நாங்க தான் பயந்துட்டோம்.

ஜீத்து ஜோசப் : ஆமா நாங்க டூப் போட்டுக்கலாம்னோம் ஆனா நானே பண்றேன்னாங்க, விழுந்தா போதுமா படிக்கட்டுல உருண்டு வரவானு கேட்டாங்க, பயங்கரமான எனர்ஜி.

படத்துல உங்க கேரக்டரஸ் எல்லோரட கேரக்டர்ஸ் பத்தி சொல்லுங்க ?

ஜோதிகா : நாங்க எல்லோரும் குடும்பம், நான் ஒரு இளமையான அக்கா அவ்வளவு தான் சொல்லுவேன்

கார்த்தி : இது ஒரு குடும்பத்துக்குள்ள நடக்கிற கதை அவ்வளவுதான்.

ஜீத்து சார் நீங்களே திரைக்ககதை மாஸ்டர் இன்னொருவர் திரைக்கதை வாங்கி பண்றது எப்படி இருக்கு ?

நான் மாஸ்டர் எல்லாம் கிடையாது. மத்தவங்க திரைக்கதைய பண்றதுல சாதகமும் இருக்கு பாதகமும் இருக்கு. என்னோட கதையில என்னோட பார்வை மட்டுமே தான் இருக்கும். முடிவு என் கையில் இருக்கும். மத்தவங்க திரைக்கதையில் அவங்களோட பார்வை இருக்கும். அத நாம சரியா பண்ணணும். இந்தக்கதையில நாலு மூளைகள் வேலை செஞ்சிருக்கு. ஆனா இந்த டீம்ல எனக்கு பிடிச்சது.இறுதியா படம் நல்லா வரனும் அத நோக்கி தான் எல்லாரும் வேலை பாக்குறாங்க யார்கிட்டயும் ஈகோ இல்ல.

ஒரே படத்தில் சிவக்குமார், ஜோதிகா, கார்த்தி, சூர்யா நடிக்கிற வாய்ப்புகள் இருக்கா?

ஜீத்து ஜோசப்: நல்ல ஐடியா கொஞ்சம் டைம் கொடுங்க ரெடி பண்ணிட்டு வந்துடுறேன் .

உங்க தம்பி தயாரிக்கிறாரு ஷீட்டிங்கல ஏதாவது சுவாரஸ்யம் நடந்ததா ?

ஜோதிகா : நான் சின்ன வயசுலயே நடிக்க வந்துட்டேன் தம்பி அப்ப ரொம்ப சின்ன பையன். அப்புறம் நான் சென்னையில செட்டில் ஆகிட்டேன். போன்ல தான் பேசிப்போம். இந்தப்படத்துல தான் அதிகம் கூட இருந்துருக்கேன். அம்மா வந்தப்போ அது நிஜமா நடந்தது. அவங்கள்ட எப்பவும் போல ஏதாவது சாப்பிடுங்கனு சொன்னேன். நான் ஹீரோயின் அம்மா இல்ல தயாரிப்பாளர் அம்மா என்ன கவனிச்சுக்கிட்டாங்கனு ரொம்ப பெருமையா சொன்னாங்க, சந்தோஷமா இருந்தது.

உங்க ரியல் லைஃப் ரிலேஷன்ஷிப் இந்தப்படத்துக்கு உதவியா இருந்ததா ?

ஜோதிகா : கண்டிப்பா ரொம்ப ஈஸியா இருந்தது. கேஷிவலா நடிச்சோம்

கார்த்தி : ரொம்ப நாளா நடிக்கிறது உதவியா இருந்தது. கேமரா ஆன் பண்ணிட்டா கேரக்டர்குள்ள போயிடறது. அது பழக்கத்துல வருவது தான்.

ஜோதிகா : ரெண்டு பேருக்கும் ஃபர்ஸ்ட் டேக் முடிக்கிறது பிடிக்கும் எல்லாமே ரொம்ப ஈஸியா இருந்தது.

படத்தில் ரெண்டு பேருக்கும் சரிசமமான இடம் இருக்கா ?

கார்த்தி : கண்டிப்பா இருக்கு. இந்தக்கதையே அப்படித்தான். ரெண்டு கேரக்டருக்கும் தனிதனி பார்வை இருக்கு ஸ்பேஸ் இருக்கு ரெண்டு முட்டிக்கும் அது சேரும்போது அது அழகா இருக்கும்.

ஜோதிகா : எனக்கு அக்கா கேரக்டர் இதுவரை பண்ணினதில்ல, அம்மா ஓகே இது ரொம்ப புதுசு நல்லா இருந்தது.

உங்க லுக் பத்தி இந்தபடத்தில எப்படி வந்திருக்கு ?

ஜோதிகா : நான் இந்தபடத்தில கார்த்திய விட யங்கா தெரியனும்னு பண்ணிருக்கேன். அது தான் என் லுக்

கார்த்தி : R D ராஜசேகர் சார் அண்ணியோட ஃபேவரைட் அவர் பண்ணின படங்கள்ல அண்ணி ரொம்ப அழகா தெரிவாங்க, படமும் பெரிய ஹிட், எனக்குல்லாம் குளோசப் ஷாட் ஒரு நிமிஷத்துல முடிஞ்சுடும். அண்ணிக்கு 1/2 மணி நேரம் எடுப்பார். எனக்கெல்லாம் இந்த மாதிரி பண்ணவே இல்லையே சொல்லுவேன்.

நிகிலா இவங்க ரெண்டு பேர் நடிக்கிற படம் எப்படி ஒத்துக்கிட்டீங்க ?

நிகிலா விமல்: இந்த டீமே ரொம்ப பெரிசு, பெரிய பெரிய டெக்னீஷியன்கள், இவங்க ரெண்டு பேரும் நடிக்கிறாங்க இப்படி ஒரு படத்த யார் வேணாம்னு சொல்வாங்க, ஆனா எனக்கு முதல்ல பயம் இருந்தது. தமிழில் எனக்கு ரீஎன்ட்ரி மாதிரி நம்ம கேரக்டருக்கு ஒன்னுமே இருக்காதோனு நினைச்சேன் ஆனா கேரக்டரும் நல்லா இருந்தது அதான் ஒத்துக்கிட்டேன்

சூர்யா எதுவும் டிப்ஸ் கொடுத்தாரா அண்ணி கூட நடிக்க ?

கார்த்தி : ம்ம் அப்படில்லாம் எதுவும் கொடுக்கல. அண்ணா ஒரு நாள் மட்டும் ஷீட்டிங் வந்தார்.

ஜொதிகா : நான் சொல்லி செட் பண்ணி வச்சிருக்கேன்.

நிறைய அக்கா தம்பி கதைகள் வந்துடுச்சு இந்தப் படம் என்ன சொல்லுது ?

கார்த்தி : நான் ஆடியோ லாஞ்ச்ல சொல்லியிருந்தேன். டயலாக் எழுதின பாரதி தம்பி சொல்லியிருந்தார் அவரோட அக்கா பேர் பாரதி அக்கா.பாசத்துல தன்னோட பேர பாரதி தம்பினு மாத்தி வச்சிகிட்டார். அக்காங்கிறது இன்னொரு அம்மானு டயலாக் எழுதியிருந்தார் அது தான் உண்மை. அக்கான்ற உறவு எவ்வளவு பலமானதுனு இந்தப்படம் பேசும்.

மியூஸிக் எப்படி வந்திருக்கு ?

ஜீத்து ஜோசப் : கோவிந்த் வஸந்தா ரொம்ப திறமையானவர். அவர் பண்ணியிருக்கும் படங்கள் பார்த்தாலே தெரியும். 96 எல்லாம் சூப்பரா பண்ணிருக்கார். இந்தபடத்தில் மூன்று பாடல்கள் பயங்கரமா பண்ணிருக்கார். பின்னணி இசை எப்படி வந்திருக்குனு பார்க்க நானும் ஆவலா இருக்கேன்

மாமனிதன் விஜய்சேதுபதி-காயத்ரிக்கு தேசிய விருது கிடைக்காவிட்டால் அந்த விருதுக்கே மரியாதை இல்லை ; ஒளிப்பதிவாளர் சுகுமார்

மாமனிதன் விஜய்சேதுபதி-காயத்ரிக்கு தேசிய விருது கிடைக்காவிட்டால் அந்த விருதுக்கே மரியாதை இல்லை ; ஒளிப்பதிவாளர் சுகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Cinematographer sukumarதமிழ்சினிமாவில் தங்களது ஒளி ஓவியத்தால் சில திரைப்படங்களை காலத்தால் அழியாத காவியங்களாக மாற்றிய ஒளிப்பதிவாளர்கள் பலர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றனர். அப்படி ஒருவர் தான் மைனா, கும்கி என இயற்கை சார்ந்த படங்கள் மூலம் நம்மை கதை நடக்கும் இடத்திற்கே தனது கேமரா கண்களால் அழைத்துச் சென்ற ஒளிப்பதிவாளர் சுகுமார்.

தற்போது மாமனிதன், கும்கி-2, தேன் ஆகிய படங்களை முடித்துவிட்டு தெலுங்கு படம் ஒன்றுக்காக ஆந்திரா பக்கம் கிளம்பத் தயாராகி வருகிறார்.

இந்தநிலையில் மாமனிதன், கும்கி-2 படங்கள் மட்டுமல்லாது பாலா இயக்கிய வர்மா படத்தில் பணிபுரிந்த அனுபவங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் சுகுமார்.

“யானை என்றாலே யாருக்குத்தான் பிடிக்காது. அந்தவகையில் கும்கி படத்தை விட இன்னும் ஒருபடி மேலாக கும்கி-2 படம் குழந்தைகளை ரொம்பவே ஈர்க்கும் படமாக உருவாகியுள்ளது.. இரண்டும் வெவ்வேறு விதமான பின்னணி கொண்ட கதைகள்..

யானை ஒன்று மட்டுமே இரண்டு படங்களையும் இணைக்கும் ஒற்றுமை பாலம்.. இந்தியாவுக்குள்ளேயே சினிமாக்காரர்கள் யாரும் இதுவரை நுழையாத ஒரு அருமையான ரம்மியமான வனப்பகுதியில் கும்கி 2 படப்பிடிப்பை நடத்தி வந்துள்ளோம். முக்கால்வாசி கதைக்கு மேல் வனப்பகுதியிலேயே நடைபெறுவதால் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ஒரு புது அனுபவம் அவர்களுக்கு கிடைக்கும்..

பொதுவாக யானைகளை ஏதாவது வண்டியில் ஏற்றித்தான் படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.. ஆனால் நாங்கள் படப்பிடிப்பு நடத்திய பகுதிக்கோ மெயின் ரோட்டில் இருந்து கிட்டத்தட்ட ஜீப்பில் பயணித்தாலே ஒன்றரை மணி நேரம் ஆகும்.. பெரிய வாகனங்கள் செல்ல முடியாது என்பதால் யானையை நடத்தி கூட்டிச்செல்ல குறைந்தபட்சம் மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆனது.

அதன் பிறகுதான் படப்பிடிப்பு நடத்த துவங்குவோம். இந்த பயணத்தின்போது வேறு காட்டு யானைகள் வந்து விடும் அபாயமும் இருந்ததால் அந்த பகுதியைச் சேர்ந்த 40க்கு மேற்பட்ட ஆட்களை பாதுகாப்புக்காக தினசரி அழைத்துச் செல்வோம்.

இந்தப்பகுதியில் 40 நாட்கள் நாங்கள் தங்கியிருந்தபோது நல்ல இயற்கையான சாப்பாடு, சுத்தமான, மூலிகை அம்சங்கள் கொண்ட குடிநீர் என ஒரு புது வாழ்க்கை வாழ்ந்தது போல இருந்தது. கும்கி படத்தை எடுத்த சமயத்தை விட, தற்போது முன்னேறியுள்ள தொழில்நுட்பம் இன்னும் எங்களுக்கு புதிய முயற்சிகளை மேற்கொள்ள கைகொடுத்தது.

அதேசமயம் அவற்றை பயன்படுத்தி மொத்த படப்பிடிப்பையும் எந்தவித செயற்கை ஒளியும் இல்லாமல் இயற்கை ஒளியிலேயே படமாக்கி இருக்கிறோம்.. இயக்குநர் பிரபுசாலமன் கூட கும்கி படத்தை விட இதில் நமக்கு தாராளமாக செலவு செய்ய இன்னும் அதிகமாகவே பட்ஜெட் இருக்கிறது.. நீங்கள் இன்னும் நிறைய பயன்படுத்திக் கொள்ளலாமே என்று கூறியபோது வேண்டாமென திட்டவட்டமாக மறுத்துவிட்டேன்..

காரணம் இந்த கதைக்கு இயற்கையான ஒளி இன்னும் வலுவூட்டுவதாக இருக்கும் என்பதால் ஒரு டார்ச்லைட் ஒளியைக் கூட இதில் பயன்படுத்தவில்லை.. இதை பரிசோதனை முயற்சியாக என்று சொல்வதை விட, இந்த படத்திற்கு தேவைப்பட்டதாலும் அதேசமயம் இப்படியும் கூட படமாக்க முடியும் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளோம்..

இதனால் படப்பிடிப்பு நேரம் எங்களுக்கு ரொம்பவே மிச்சமானது.. இயக்குநர் பிரபு சாலமனின் முழு ஒத்துழைப்பு இருந்ததால்தான் இது சாத்தியமானது.. அதேசமயம் இந்த படத்தில் வி எஃப் எக்ஸ் பணிகளும் சிறப்பாக வந்திருக்கிறது.. கலகலப்பாக நகைச்சுவையாக நகரும் படம் என்றாலும் இதில் சென்டிமென்ட்டுக்கும் ரொம்பவே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

தர்மதுரை படத்திற்கு பிறகு இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் விஜய்சேதுபதி இருவருடனும் இணைந்து மாமனிதன் படத்தில் பணியாற்றுகிறேன். இது தர்மதுரை மாதிரியான கதை அல்ல.. வேறு விதமான கதை..

அடுத்தவர்களைப் பார்த்து வாழ வேண்டாம், நமக்காக நாம் வாழ்வோம் என்கிற ஒரு செய்தியைச் சொல்லும் நடுத்தர வர்க்கத்து குடும்பத்து கதையாக இது இருக்கும்..

இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிப்பாகட்டும் காயத்ரியின் நடிப்பாகட்டும் நிச்சயமாக இந்த இருவருக்கும் சிறந்த நடிப்புக்கான தேசிய விருது கிடைத்தே ஆகவேண்டும்.. அப்படி கிடைக்கவில்லை என்றால் அந்த தேசிய விருதுக்கே மரியாதை இல்லை என்றுதான் உறுதியாக சொல்வேன்.. அந்த அளவுக்கு மிக இயல்பான அற்புதமான நடிப்பை இருவரும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்..

இந்தப்படத்திலும் புதிய முயற்சி ஒன்றை கையாண்டுள்ளோம். படத்தில் குறிப்பிட்ட நான்கு காட்சிகளை மட்டும் ஒரே ஷாட்டில் படமாக்கியுள்ளோம்.. ஒவ்வொரு காட்சியும் சுமார் நான்கு நிமிடத்துக்கு குறையாத நீளம் கொண்டவை.. அவற்றை ஒரே டேக்கில் படமாக்கி இருக்கிறோம்.. காரணம் அந்தக்காட்சிகளை அப்படி ஒரே ஷாட்டில் சொன்னால் ரொம்பவே பொருத்தமானதாக இருக்கும் என இயக்குநர் சீனு ராமசாமி விரும்பினார்..

இதை பல ஷாட்டுகளாக பிரித்து வழக்கம்போல ஏன் எடுக்கவேண்டும் ஒரே ஷாட்டில் எடுக்கலாமே என்று எனக்கு இந்த புதிய முயற்சியை பரீட்சித்து பார்க்க ஊக்கம் தந்தார்.. பக்காவான ரிகர்சல் பார்த்துவிட்டு சென்றதால் ஒரே டேக்கில் பிரமாதப்படுத்தி விட்டார்கள் விஜய்சேதுபதியும் காயத்ரியும்.

அப்படி இந்த காட்சியை படமாக்குவதற்காக பகலில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அன்று இரவே பக்கத்தில் இருந்த இன்னொரு லொக்கேசனுக்கு மாறினோம்.. படக்குழுவினரும் எப்படியும் முதல் ஷாட்டே எட்டு மணிக்குத்தான் ஆரம்பிக்கும் நள்ளிரவில் தான் படப்பிடிப்பு முடியும் என அதற்கான ஏற்பாடுகளுடன் வந்திருந்தனர்.

ஆனால் ஏழரை மணிக்கு ஷாட் வைத்து கிட்டத்தட்ட எட்டு மணிக்கெல்லாம் படப்பிடிப்பை முடித்துவிட்டு கிளம்பிவிட்டோம்.. நாங்கள் ஒரே ஷாட்டில் இந்த நான்கு நிமிட காட்சிகளை எடுக்கப்போகிறோம் என்பது எங்கள் நால்வரை தவிர யாருக்கும் தெரியாததால் படக்குழுவினருக்கு கூட இது எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

தர்மதுரை படத்தில் பார்த்த அதே விஜய்சேதுபதி தான் மாமனிதன் படத்திலும்.. எந்தவித மாற்றமும் இல்லாத மனிதர்.. கதாபாத்திரங்களுக்காக மட்டுமே தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய மனிதர்.

சங்கத்தமிழன் போன்ற கமர்ஷியல் படங்களில் விஜய்சேதுபதி நடிக்கலாமா என சிலர் கேட்கிறார்கள்.. விஜய்சேதுபதி போன்ற ஒரு நடிகனை இப்படித்தான் நடிக்க வேண்டும் என ஒரு வட்டத்திற்குள் அடக்கவே கூடாது.. எல்லா வகையான படங்களும் செய்வதற்கு தகுதியான ஒரு நடிகர் தான் அவர்..

தர்மதுரை படம் போலவே இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பையும் ஆண்டிப்பட்டி பகுதிகளில்தான் நடத்தி இருக்கிறோம்.. ஆனால் அந்தப்படத்தின் படப்பிடிப்பை விட தற்போது விஜய்சேதுபதிக்கான மிகப்பெரிய வரவேற்பு இருந்ததை காண முடிந்தது..

அதுமட்டுமல்ல படப்பிடிப்பு முடிந்ததும் இவ்வளவு சீக்கிரமாக முடிந்து விட்டதா என நாட்களே போனது தெரியாமல் ஒரு குடும்பமாக இருந்தது போன்ற உணர்வை தந்தது இந்த மாமனிதன் படப்பிடிப்பு.. இது தவிர கேரளா மற்றும் காசியிலும் இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்..

இந்த படத்துக்காக முதல் முறையாக இசைஞானி இளையராஜாவும் அவரது மகன் யுவன்சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளார்கள். அப்படி ஒரு சிறப்புமிக்க படத்தில் நானும் இருக்கிறேன் என்பதே பெருமையாக இருக்கிறது.

வீர சிவாஜி படத்தை இயக்கிய இயக்குநர் கணேஷ் விநாயக் இயக்கியுள்ள ’தேன்’ என்கிற படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம்.. இந்த படத்தின் கதையை அவர் என்னிடம் சொன்னபோது நானே விரும்பி இந்தப்படத்தில் பணிபுரிவதற்கு விருப்பம் தெரிவித்தேன்.. அவரோ நீங்கள் பணிபுரியும் அளவிற்கு இது பெரிய பட்ஜெட் படம் இல்லையே எனத் தயங்கினார்..

ஆனால் அவர் சொன்ன கதைதான் இந்த படத்திற்குள் வாண்டட் ஆக என்னை உள்ளே இழுத்தது.. காரணம் இதுவரை கிட்டத்தட்ட சொல்லப்படாத ஒரு புதிய கதை தான் இது.. அதுமட்டுமல்ல இந்தப் படத்தின் கதையும் தேனி மற்றும் அதன் அருகிலுள்ள மலைப்பகுதியில் நடக்கிறது என்பதால் மைனா படத்தில் எனக்கு கிடைத்த அனுபவங்களை மீண்டும் இந்த படத்தில் பெறுவதற்கு நான் விரும்பியதும் ஒரு காரணம்..

மைனா படத்தில் என்னால் செய்ய முடியாமல் போன சில விஷயங்களை இந்த படத்தில் செய்திருக்கிறேன்.. பொதுவாகவே எல்லோருக்குமே மலைப்பகுதி என்றாலே மிக பிடித்தமான ஒரு விஷயம் என்னுடைய படங்கள் பெரும்பாலும் அப்படி இயற்கை சார்ந்த கதைகளுடன் அமைவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்..

வரும் சம்மரில் இந்த படத்தை ரிலீஸ் செய்வதாக இருக்கிறார்கள்.. அதனால் தியேட்டருக்கு வரும் பார்வையாளர்களுக்கு அவ்வளவு குளுகுளு என இந்த படம் இருக்கும்.. மைனாவுக்குப் பிறகு இந்தப் படம் எனக்கு பெயர் வாங்கி கொடுக்கும் என உறுதியாக நம்புகிறேன்..

வர்மா படத்தில் இயக்குநர் பாலாவுடன் பணிபுரிந்தது புதுவிதமான அனுபவம்.. அந்த படம் வெளியாக முடியாமல் போனதில் எங்களுக்கு வருத்தம் என்பதைவிட, ரசிகர்களுக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைக்காமல் போகிறதே என்கிற ஆதங்கம் தான் அதிகமாக இருக்கிறது.. நான் இரண்டு படத்தையும் பார்த்துவிட்டேன்.. நிச்சயம் பாலாவின் ’வர்மா’ ஒருபடி மேலே தான் இருக்கிறது..

இந்த படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தான் இயக்குநர் பாலா இயக்கினார்.. படம் சென்சாருக்குப் போகும் கடைசி நாள்வரை இந்த படத்தை நிறுத்துவதற்கான எந்த ஒரு அடையாளமுமே தென்படவில்லை.

ஆனால் தான் பணியாற்றும் படங்கள் எல்லாம் ஹிட் ஆவதால் தன்னை எப்போதுமே அறிவுஜீவி என நினைத்துக் கொள்ளும் ஒரு முக்கியமான நபரின் தூண்டுதலால், தயாரிப்பாளர் வேறு வழியின்றி எடுத்த திடீர் முடிவு அது. படத்தைப் பற்றிய விளக்கங்களை பாலாவிடம் கேட்டுவிட்டுப் பிறகு அவர்கள் முடிவெடுத்திருக்க வேண்டும்.. இயக்குநர் பாலாவைப் பொருத்தவரை இந்தப்படத்தை விக்ரமுக்காகத்தான் இயக்கினார்..

நடிகர் விக்ரமுடன் எனக்கு 19 வருட நட்பு இருக்கிறது.. அவர்தான் எனக்கு முதல்முதலாக ஸ்டில் போட்டோகிராபர் ஆக வாய்ப்பு கொடுத்தவர்.. அவரது மகன் துருவ்வுக்கும் முதன்முதலாக நான்தான் ஸ்டில்ஸ் டெஸ்ட் எடுத்தேன் என்பது எனக்கு சந்தோஷமான விஷயம். அவரது குடும்பத்தில் ஒரு நபர் போலத்தான் நான்..

விஜய்யின் தீவிர ரசிகர் தான் துருவ்.. அவரது படங்களை விரும்பி பார்ப்பவர்.. அதுமட்டுமல்ல இயல்பிலேயே அவருக்குள்ளும் நடிப்பு ஜீன் இருந்திருக்கிறது.. அத்துடன் அமெரிக்கா சென்ற நடிப்பு பயிற்சியும் பெற்றுவந்தார்..

நாங்கள் ஸ்கெட்ச் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது, அமெரிக்காவில் நடிப்பு பயிற்சி பள்ளியில் அவர் நடித்துக்காட்டி கைதட்டல்களை, பாராட்டுக்களை அள்ளிய வீடியோக்களை அவ்வப்போது தனது தந்தைக்கு அனுப்பிக்கொண்டே இருப்பார்.. அதை எல்லாம் எங்களிடம் காட்டி ரொம்பவே பெருமைப்படுவார் விக்ரம்.

துருவ்விடம் உள்ள ஒரு சிறப்பம்சம், அவர் தமிழில் பேசினால் தமிழ் நடிகர் மாதிரி தெரிவார்.. ஆங்கிலத்தில் பேசினால் அமெரிக்க நடிகர் போல அவரது முகமே மாறிவிடும்.. லோக்கலாக பேசினால் சென்னைப்பையன் போல, கொஞ்சம் மாடல் ஐடி வாலிபனாக பேசினால் அதேபோல என அவரது முகத்தோற்றம் விதம் விதமாக மாறுவது அவருக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்..

வர்மா படப்பிடிப்பின்போது எங்களுடன் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருக்கும் துருவ், அந்தப்படத்தின் டாக்டர் கதாபாத்திரத்திற்காக ஸ்டைலிஷாக ஆங்கிலம் பேசும்போது அவரது முகமே வேறுவிதமாக மாறுவதைக் கண்டு பாலாவே ஆச்சரியப்பட்டுப்போய், “இவன் அவங்க அப்பனையும் தாண்டிருவான்டா” என்று எங்களிடம் கூறியது இப்போதும் ஞாபகம் இருக்கிறது..

அதேபோல சில காட்சிகளில் பாலா மீண்டும் ஒன்மோர் கேட்பார்.. அப்போது துருவ்வின் நடிப்பைப் பார்த்துவிட்டு அவங்க அப்பா மாதிரியே இருக்கிறார் என்று நான் கூறுவேன்.. அதற்கு பாலா, “ஆமாப்பா.. துருவ்கிட்ட அவங்க அப்பன் தெரியக்கூடாது.. அதனாலதான் ஒன்மோர் போலாம்னு சொன்னேன்” என்பார்.

வர்மா படத்திற்குள் வரும்போது துருவ் எப்படி இருந்தார், அந்தப்படம் முடியும்போது ஒரு முழுமையான நடிகராக எப்படி மாறி இருந்தார் என்பதையெல்லாம் கூடவே இருந்து பார்த்தவன் நான்.. இப்பொழுது வெளியாகியுள்ள ஆதித்யா வர்மா படத்தில் அவரது நடிப்பு சிறப்பாக இருப்பதாக பேசப்படுகிறது என்றால் பாலா என்கிற சிற்பியின் கைவண்ணம் தான் அதற்கு காரணம் என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை..

அந்தப் படத்தை பற்றி விமர்சனம் செய்யும்போது புளூ சட்டை மாறன் கூட இது துருவ்விற்கு 101-வது படம் போல இருக்கிறது என்று சொன்னார்.. காரணம் பாலா படத்தில் நடித்து விட்டால் நூறு படங்களில் நடித்து அனுபவத்திற்கு சமம் என்பதைத்தான் அவர் அப்படி குறிப்பிட்டார்.

சூர்யா நடித்த நந்தா படத்தில் இருந்து இயக்குநர் பாலாவுடன் பணிபுரிந்துள்ளேன்.. அப்போது இருந்த பாலா வேறு.. இப்போது இருக்கும் பாலா வேறு.. அதனால் துருவ்விற்கு பாலா ரொம்ப கஷ்டம் கொடுக்கவில்லை.. துருவ்வே உரிமை எடுத்துக்கொண்டு மாமா இன்னொரு முறை ஒன்மோர் பண்ணிக்கிறேனே என்று கேட்டால்கூட, இதுக்கு மேல நீ ஒன்மோர் பண்ணினாலும் எனக்கு இதுவே போதும் என்பார்..

சிறுவயதிலிருந்தே தான் பார்த்த, தூக்கி வளர்த்த குழந்தை என்பதால் துருவ்விற்கு படப்பிடிப்புத் தளத்தில் மிகுந்த சுதந்திரம் கொடுத்து அவரை மிகச் சிறந்த நடிகனாக மாற்றினார் பாலா. துருவ்விற்கு இது மிகவும் கொடுப்பினையான விஷயம்..

இனி வருங்காலத்தில் பாலா-துருவ் இருவரும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.. இந்த ஒரு படத்தில் ஏற்பட்ட வருத்தத்தால் விக்ரமுடனான பலவருட நட்பில் எந்த விரிசலும் விழவில்லை.. ரீமேக் படம் என்பதால் பாலாவால் சிறப்பாக செய்யமுடியவில்லை அல்லது சிட்டி சப்ஜெக்ட் என்பதால் அவரால் அதை கையாள முடியவில்லை என்று சிலர் கூறுவதெல்லாம் முட்டாள்தனத்தின் உச்சம்..

இன்னும் சொல்லப்போனால் பாலா இயக்கிய சேது படம்தான் தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி ஆக மாறியது.. அதே சேதுவைத்தான் இங்கே பாலா மீண்டும் உருவாக்கினார்.. சேதுவில் தான் செய்ய நினைத்து முடியாமல் போன விஷயங்களை எல்லாம் இதில் அழகாகக் கொண்டுவந்திருந்தார்.. சொல்லப்போனால் சேது விக்ரமின் இன்னொரு அப்டேட் வெர்சன் தான் வர்மாவில் நடித்த துருவ்வின் கதாபாத்திரம்.. நிச்சயம் இந்தப்படம் வெளியாகி ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்பதே என்னுடைய ஆசை” என்றார் சுகுமார்..

விடைபெற்று கிளம்பும் முன்பு இறுதியாக அவரிடம் எப்பொழுது நீங்கள் டைரக்டராக மாறப்போகிறீர்கள் எனக் கேட்டதற்கு, இப்போது மட்டுமல்ல எப்போதுமே எனக்கு டைரக்ஷன் ஆசை இல்லை” என அழுத்தம் திருத்தமாக கூறி விடைகொடுத்தார் ஒளிப்பதிவாளர் சுகுமார்.

More Articles
Follows