தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகம் எத்தனையோ இடைத்தேர்தல்களை பார்த்திருந்தாலும் பலராலும் மறக்க முடியாத இடைத்தேர்தல் ஆர். கே. நகர் தொகுதிதான்.
தொகுதி மக்களுக்கு ஆயிரக்கணக்கில் பணப்பட்டுவாடா கொடுக்கப்பட்டதால் தேர்தலே ரத்தானது. பின்னர், தேர்தல் நடத்தப்பட்டது.
அங்கு டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்.
எனவே பரபரப்பான அந்த தொகுதி பெயரை தான் தயாரிக்கும் படத்திற்கு தலைப்பாக வைத்தார் வெங்கட் பிரபு.
ஆர். கே. நகர் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் வைபவ் நாயகனாக நடித்துள்ளார்.
வைபவுக்கு ஜோடியாக ‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தில் நடித்த சானா அல்தாப் நடிக்கிறார். சம்பத் வில்லனாக நடிக்கிறார். பிரேம்ஜி இசையமைக்கிறார்.
இப்படத்தை ‘வடகறி’ படத்தை இயக்கிய சரவண ராஜன் இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு சென்சாரில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Venkat Prabus RK Nagar movie censored UA