நொந்து போன ரசிகர்களுக்கு ‘வெந்து தணிந்தது காடு’ அப்டேட் தந்த சிம்பு

நொந்து போன ரசிகர்களுக்கு ‘வெந்து தணிந்தது காடு’ அப்டேட் தந்த சிம்பு

சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை. நவம்பர் 25ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் நொந்து போய் இருந்தனர்.

ஆனால் அதே சமயம் சிம்புவின் மற்றொரு படமான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் அப்பேட்டை சிம்புவே தெரிவித்துவிட்டதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் வெந்து தணிந்தது காடு.

இப்படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுத ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

கௌதம் மேனனின் ஆஸ்தான பாடலாசிரியையான தாமரை பாடல்கள் எழுதி வருகிறார்.

வெந்து தணிந்தது காடு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே அப்படத்தின் எதிர்பார்ப்பு அசுர வேகத்தில் எகிறியுள்ளது.

தற்போது இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற உள்ள நிலையில் சென்னையில் இருந்து விமானத்தில் மும்பை பறந்துள்ளார் சிம்பு. அப்போது அவர் விமானத்தில் செல்லும் ஒரு புகைப்படத்தை அவரே பதிவிட்டு அப்டேட் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படம் இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

VendhuThanindhathuKaadu Mumbai shooting schedule set to commence

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *