வருண் தேஜ் & லாவண்யா.. லவ் மேரேஜ் கன்ஃபார்ம்.!

வருண் தேஜ் & லாவண்யா.. லவ் மேரேஜ் கன்ஃபார்ம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சீரஞ்சிவியின் சகோததரரும் நடிகருமான நாகபாபுவின் மகனும் பிரபல தெலுங்கு நடிகருமானவர் வருண் தேஜ்.

தமிழில் சசிகுமாருக்கு ஜோடியாக ‘பிரம்மன்’ மற்றும் சந்தீப் கிஷன் ஜோடியாக ‘மாயவன்’ ஆகிய இரு படங்களில் மட்டும் நடித்தவர் நடிகை லாவண்யா திரிபாதி.

வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி இருவரும் ‘மிஸ்டர்’ மற்றும் ‘அந்தாரிக்ஷம்’ ஆகிய தெலுங்கு படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

வருண் தேஜ் மற்றும் லாவண்யா ஜோடியாக பார்ட்டி, குடும்ப நிகழ்வுகள் ஆகியவற்றில் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து இருவரும் தற்போது காதலித்து வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், இருவரும் அடுத்த மாதம் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் இருவீட்டார் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

varun tej and lavanya tripathi said to married in june 2023

ஜூனியர் என்டிஆர் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு செம ட்ரீட்

ஜூனியர் என்டிஆர் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு செம ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடைசியாக ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் நடித்து மாபெரும் வெற்றி மகிழ்ச்சியில் உள்ளார் ஜூனியர் என்டிஆர்

ஜூனியர் என்டிஆர் தற்போது கொரடலா சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு தற்காலிகமாக ‘என்டிஆர்30’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.

‘NTR 30’ படம் மூலம் நடிகை ஜான்வி கபூர் தெலுங்கில் அறிமுகமாகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது.

இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சைஃப் அலிகான் சில தினங்களுக்கு முன்பு இணைந்துள்ளதாக புகைப்படம் வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளான நாளை மே 19ம் தேதியன்று இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

NTR 30

ntr30 title and first look will be release by junior ntr’s brithday

விஜே மணிமேகலை வீட்டில் விசேஷமா.?வாழ்த்துக்களை பகிரும் ரசிகர்கள்

விஜே மணிமேகலை வீட்டில் விசேஷமா.?வாழ்த்துக்களை பகிரும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரை டிவி சீரியல் நடிகைகளை போல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் ரசிகர்கள் மத்தியில் படு பிரபலம் ஆகி வருகின்றனர்.

இவர்களில் விஜே மணிமேகலை மிக முக்கியமானவர். இவருக்கென்று ஒரு ரசிகர் வட்டாரமும் சின்னத்திரை மத்தியில் உள்ளது.

மேலும் இவர் ‘குக் வித் கோமாளியில் பங்கேற்ற பின்னர் ரசிகர்களிடையே படுபிரபலம் பிரபலமானார் இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்.

மணிமேகலையும் இவரது கணவர் உசைன் என்பவரும் தங்கள் குடும்பம் தொடர்பான வீடியோக்களை இணையங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

இவர்களுக்கென ஒரு youtube சேனலும் உள்ளது.

இந்த நிலையில் மணிமேகலையின் சமீபத்திய வீடியோக்களில் அவர் தளர்வான உடைகளை அணிந்து வந்தார்.

இதனையடுத்து ஒருவேளை மணிமேகலை கர்ப்பமாக இருக்கிறாரோ என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Fans sharing greetings to VJ Mani Megalai. Anything special?

ஒட்டு மொத்த மனித சமூகத்தின் அவலம்.; தமிழக முதல்வருக்கு பா ரஞ்சித் கண்டனம்

ஒட்டு மொத்த மனித சமூகத்தின் அவலம்.; தமிழக முதல்வருக்கு பா ரஞ்சித் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறியப்பட்டவர் பா ரஞ்சித். தற்போது தயாரிப்பாளராகவும் உருவெடுத்திருக்கிறார்.

இவரது கம்பெனி பேனரில் தயாரிக்கப்படும் படங்கள் சமூகம் சார்ந்த படைப்புகளாக உருவாக்கி வருகின்றன.

அதுபோல ரஞ்சித் படங்களிலும் சமூக சார்ந்த கருத்துகளும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலும் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

இந்த நிலையில் இன்று மே 18ஆம் தேதி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மலக்குழி மரணங்கள் குறித்து அவர் பதிவிட்டுள்ளார்.

அதில்…

“தொடரும் மலக்குழி மரணங்கள்! தமிழ் நாட்டில் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் ஒன்பது உயிர்களை பலி கொடுத்திருக்கிறோம்.

இக் கொடுமையான சமூக அவலத்தை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கும், தமிழக அரசிற்க்கும் கடும் கண்டனங்கள்.

மலக்குழி மரணங்களை குறிப்பிட்ட சமூக மக்களின் பிரச்சனையாக மட்டும் கருதி கடந்து போகாமல் ஒட்டு மொத்த மனித சமூகத்தின் அவலமாக கருதி, சட்டங்களை இன்னும் கடுமையாக்கி, மக்களிடையே சரியான விழிப்புணர்வை உண்டாக்கி, உடனே தடுத்திட முனைவோம்.

தமிழக அரசே மலக்குழி மரணங்களை உடனே தடுத்திடு!!!
@CMOTamilnadu

என தமிழக முதல்வருக்கு தன் கோரிக்கையை விடுத்து தன்னுடைய கண்டனங்களையும் பதிவு செய்துள்ளார் இயக்குனர் பா ரஞ்சித்.

Pa Ranjith condemns the Chief Minister of Tamil Nadu

ஒரு கிராம் தங்கத்தை வைத்து ‘எறும்பு’ கதை சொல்லும் இயக்குநர் சுரேஷ்

ஒரு கிராம் தங்கத்தை வைத்து ‘எறும்பு’ கதை சொல்லும் இயக்குநர் சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் பேசுகையில்…

‘ எறும்பு திரைப்படத்தில் பணியாற்றிய எங்களுக்கு, படம் திருப்தியளித்திருக்கிறது. வெற்றி பெறும் என நம்பிக்கையும் இருக்கிறது. தயாரிப்பாளராக வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன்.

2018 ஆம் ஆண்டில் ‘போதை’ எனும் திரைப்படத்தை தயாரித்து, இயக்கியிருந்தேன். இந்தத் திரைப்படம் எனக்கு நிறைய அனுபவத்தை கற்றுக் கொடுத்தது.

அதன் பிறகு நடிகர் சார்லியை சந்தித்து கதையை சொல்லி குறும்படம் ஒன்றை இயக்க திட்டமிட்டிருந்தேன். கொரோனா காரணமாக அது நிறைவேறவில்லை. அந்த தருணத்தில் தோன்றிய கரு தான் எறும்பு. இந்த கதை எனக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

அவரது இயற்பெயர் தர்மலிங்கம். அவரது பெயரை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவரது பெயரில் பட நிறுவனத்தை தொடங்கி படத்தை தயாரித்திருக்கிறேன்.

சினிமாவை நம்பி உண்மையாக பணியாற்றுபவர்களை.. சினிமா ஒருபோதும் கைவிடாது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால் இந்த திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்.

ஃபீல் குட் மூவிக்கும்.. எமோஷனல் எனும் உணர்விற்கும்.. தனி சக்தி உண்டு. அது வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

என்னுடைய தயாரிப்பில் வெளியான ‘போதை’ படத்தை வெளியிடுவதற்கு ரமணி ராமச்சந்திரன் உதவி செய்தார். இந்தப் படத்திற்கும் அவர் உதவி செய்திருக்கிறார். அவர் இல்லையேல் நான் இல்லை.

நமக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்வது தங்கம். அதிலும் ஒரே ஒரு கிராம் தங்கத்தை மையப்படுத்தி தான் இப்படத்தின் கதை உருவாகி இருக்கிறது.

ஒரு கிராம் தங்கத்தை வைத்து அக்கா -தம்பி பாசம்… அப்பா -மகன் உறவு… என பல விசயங்களை இணைத்திருக்கிறேன். நாம் சிறிய வயதில் ஏதேனும் ஒரு பொருளை தொலைத்திருப்போம். அதனை எப்படி பெற்றோர்களிடத்தில் சொல்வது என அச்சம் கொண்டிருப்போம்.

ஒரு கிராம் மோதிரம் தொலைந்து விட்டது. அப்பா, அம்மா வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வருவதற்குள் இதனை தேடி கண்டுபிடிக்க அக்காவும், தம்பியும் முயல்கிறார்கள். அவர்கள் வருவதற்குள் இவர்கள் என்ன முயற்சி எடுத்தார்கள். இதுதான் கதை. ” என்றார்.

Director Suresh tells the story of ‘Erumbu’ with a gram of gold

நான் எப்படி இயக்க விரும்பினேனோ அதுபோன்ற படமே ‘எறும்பு’ – மித்ரன் ஆர். ஜவஹர்

நான் எப்படி இயக்க விரும்பினேனோ அதுபோன்ற படமே ‘எறும்பு’ – மித்ரன் ஆர். ஜவஹர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுரேஷ் குணசேகரன் இயக்கத்தில் தயாரான ‘எறும்பு’ படத்தில் சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், பேபி மோனிகா, மாஸ்டர் சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், ஜெகன், பரவை சுந்தராம்பாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கே. எஸ். காளிதாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர் பேசுகையில்…

‘ இந்தப் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இயக்குநர் என அனைவரும் எனது நண்பர்கள். நண்பர்கள் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன். இயக்குநர் சுரேஷிடமிருந்து நான் கற்றுக்கொள்ள விரும்பும் விசயம் அவரது துணிச்சல். சுரேஷின் தைரியத்திற்காகவே இந்த படம் வெற்றி பெறும்.

நான் எந்த மாதிரியான படங்களை இயக்க வேண்டும் என்று விரும்பினேனோ… அதுபோன்ற ஒரு படம் தான் ‘எறும்பு’.

நான் இந்த படத்தை பார்த்து விட்டேன். யதார்த்தமாகவும், அழகியலுடன் படம் இருக்கும். இந்தப் படம் பார்த்த பிறகு மனதில் ஒரு நிறைவு உண்டாகும்.

இந்த படத்திற்கு நடிகர்கள் பக்க பலம். குறிப்பாக எம். எஸ். பாஸ்கர், சார்லி, ஜார்ஜ் மரியான் ஆகிய மூவரின் கதாபாத்திரங்களும் தனித்துவமாக இருக்கும். இவர்களுடன் அக்கா – தம்பி கதாபாத்திரத்தில் நடித்த மோனிகா மற்றும் சக்தி ரித்விக்கின் நடிப்பும் அற்புதம்.

நடிகர்கள் மட்டுமல்லாமல் தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறார்கள் இதற்காக இந்த படம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும்.” என்றார்.

‘Erumbu’ is the kind of film I wanted to direct – Mithran R. Jawahar

More Articles
Follows