சீ.வி.குமார் தயாரித்து இயக்கும் “கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்”

சீ.வி.குமார் தயாரித்து இயக்கும் “கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்”

gangs of madrasபல பிரபல இயக்குனர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சீ.வி.குமார் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரித்து இயக்கியிருக்கும் படம் “கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்”

பலரின் பாரட்டை பெற்ற “மாயவன்” திரைப்படத்திற்கு பிறகு சீ.வி.குமார் இயக்கும் இரண்டாவது படம் இது.

தேவைகள் ஆசையாக மாறும் போது அதனால் ஏற்படும் விளைவுகளே “கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்” படத்தின் கதைக்கரு.

பிரியங்கா ருத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அஷோக், வேலு பிரகாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், பகவதி பெருமாள் (பக்ஸ்) , டைரக்டர் ராம்தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாக அனைவரின் பாராட்டையும் பெற்று, படத்திற்காக எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது. இப்படம் மார்ச் வெளியீடாக வரும் என எதிர்பார்க்கபடுகிறது .

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு, இயக்கம் – சீ.வி.குமார் (திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்)
இசை – ஹரி டஃபுசியா
இசை (OST) – ஷ்யமளங்கன்
இசை மேற்பார்வை – சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு – கார்த்திக் K தில்லை
படத்தொகுப்பு – ராதாகிருஷ்ணன் தனபால்
கலை – விஜய் ஆதிநாதன், சிவா
சண்டைப்பயிற்சி – ஹரி தினேஷ்
சவுண்ட் டிசைன் – தாமஸ் குரியன்
நடனம் – சாண்டி
மக்கள் தொடர்பு – நிகில்
நிர்வாக தயாரிப்பு – S.சிவகுமார்

ஒரே காட்சியில் ஒரு முழுநீளத் திரைப்படம் – தடயம் !

ஒரே காட்சியில் ஒரு முழுநீளத் திரைப்படம் – தடயம் !

thadayamஇந்திய சமூகத்தில் மலிந்து கிடக்கிற காதலில்லாத திருமணங்களின் ஊடே, ஒரு திருமணமில்லாத காதல் பற்றியதோர் திரைப்படம், தடயம்.

ஒரு பெண்ணின் மனதை புரிந்து கொள்ள இயலாத, உடலால் அறத்தை மதிப்பீடு செய்கிற ஒரு ஆண் மனதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தானும் தன் காதல் நினைவுகளுமாய் தன்னந்தனியே படுத்த படுக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிற கதாநாயகியை அவளின் காதலன் ஒரு மழைநாளில் சந்திக்கிறான். அவள் வசிக்கும் குடிலில் அவன் நுழைகிற போது அடைமழை அடித்துக் கொட்டுகிறது. காதலின் பரவசத்தை உறிஞ்சிக் கொள்கிற மழை. அந்த ஒற்றை அறைக்குள்ளான, அந்த ஒற்றை சந்திப்பை உயிரோட்டமான திரைக்கதையின் வாயிலாக விறுவிறுப்பாக, தாளா பரவசங்களின் காட்சிப் படிமங்களாக மாற்றித் தந்திருக்கும் திரைப்படம் தான் தடயம்.

இத்திரைப்படத்தை, தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவரான தமயந்தி எழுதி இயக்கியிருக்கிறார். இவர் இயக்குநர்கள் சமுத்திரகனி, மீரா கதிரவன், பரத் பாலா ஆகியோருடன் பணிபுரிந்திருக்கிறார். மேலும் பல மொழிபெயர்ப்பு நாவல்களையும் எழுதியிருக்கிறார். ஆனந்த விகடன் வார இதழில் வெளியான “தடயம்” சிறுகதையே இந்தப் படத்தின் கரு என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் கதாநாயகியாக கனி குஸ்ருதி நடித்திருக்கிறார். “அபிநயா” குழுவில் பயிற்சி பெற்ற இவர், 2000 முதல் 2006 வரை வசந்தசேனா கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். “பாரத் ரங் மகோத்சவ்” தேசிய திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் கலந்திருக்கிறார். நாயகனாக கணபதி முருகேசன் அறிமுகமாகிறார். நான்கு வருடங்கள் கூத்துப்பட்டறையில் முழுநேர நடிகராக இருந்த இவர், இருபதிற்கும் மேற்பட்ட தயாரிப்புகளில், 300க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். இசையமைப்பாளராக ஜஸ்டின் கெனன்யா அறிமுகமாகிறார். ப்ரவீன் பாஸ்கர் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.

முழுக்க முழுக்க “கிரவுட் ஃபண்டிங்” தயாரிப்பில் சுயாதீன திரைப்படமாக உருவாகியிருக்கும் “தடயம்” விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
உங்கள் மேலான அன்பையும்
ஆதரவையும் தொடர்ந்து விரும்பும்…

சிகரெட் பிடித்து, துப்பாக்கி தூக்கி.. சேரனா இப்படி..?! ; விநியோகஸ்தர்களை அதிரவைத்த ’ராஜாவுக்கு செக்’..!

சிகரெட் பிடித்து, துப்பாக்கி தூக்கி.. சேரனா இப்படி..?! ; விநியோகஸ்தர்களை அதிரவைத்த ’ராஜாவுக்கு செக்’..!

cheranஇயக்குநர் சேரன் குடும்ப உறவுகளின் மேன்மைகளைச் சொல்லும் விதமாக படங்களை இயக்குபவர். அதனால் அப்படிப்பட்ட அம்சங்கள் கொண்ட கதைகளை இயக்குவது மட்டுமல்ல, நடிப்பு என வரும்போதும் குடும்ப கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கக்கூடியவர்.. அப்படிப்பட்டவர் ‘ராஜாவுக்கு செக்’ என்கிற ஆக்சன் கலந்த எமோஷனல் த்ரில்லர் படத்தில் அதிரடியாக நடித்துள்ளார்.

சேரன் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது, இது தன் நடிப்புக்கு சவால் என்று தெரிந்தே ஒப்புக்கொண்டாராம்.

காரணம் கதையில் சொல்லப்பட்டுள்ள விஷயமும் அது ஏற்படுத்தப்போகும் தாக்கமும். வழக்கமாக சேரன் நடிக்கும் படங்கள் இப்படித்தான் இருக்கும் என்று ரசிகர்களுக்கு ஒரு அபிப்ராயம் இருக்கும். ஆனால் அதை முற்றிலும் உடைக்கும் விதத்தில் உருவாகியுள்ளது ‘ராஜாவுக்கு செக்.’ அதை மெய்ப்பிப்பது போல ஒரு நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.

சமீபத்தில் இந்தப்படத்தின் முதல் பிரதி முக்கியமான சிலருக்கு திரையிட்டு காட்டப்பட்டுள்ளது.. இது சேரன் படம், குடும்பக் கதையாக இருக்கும் என்கிற நினைப்பில் படம் பார்க்க ஆரம்பித்தவர்களுக்கு செம ஷாக்.. காரணம் படம் முழுவதும் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு பாணியில் இருந்ததுதான். சேரனோ சிகரெட் பிடித்து, துப்பாக்கி தூக்கி வேற லெவெலில் நடித்துள்ளதும், கதை செம விறுவிறுப்பாக நகர்ந்ததும் தானாம்.

குறிப்பாக காட்சிகளில் எப்போதுமே ஒரு எமோஷனும் த்ரில்லும் இருந்துகொண்டே இருந்ததாம். மிரட்டலான அதே சமயம் உணர்வுப்பூர்வமான இப்படிப்பட்ட திரில்லர் படத்தை பார்த்ததே இல்லை என்று பார்த்தவர்கள் மிரண்டு போக…

இந்த தகவல் விநியோகஸ்தர்கள் வட்டாரங்களில் கசிந்ததுமே, படத்திற்கான வியாபாரமே இப்போது வேறுவிதமாக மாறிவிட்டது என்கிறார்கள்..

நல்ல எமோஷனல் படத்திற்கு காத்திருக்கும் ரசிகர்களுக்கும், நல்ல திரில்லர் படத்திற்கு காத்திருக்கும் ரசிகர்களுக்கும் சரியான வேட்டை ‘ராஜாவுக்கு செக்’ என்கிறார்கள் படம் பார்த்தவர்கள்…

இணையத்தில் வைரலாகும் தும்பா

இணையத்தில் வைரலாகும் தும்பா

thumbaaசில நேரங்களில் பெரிய நடிகர்கள் மற்றும் பெரிய படங்கள் தான் லட்சக்கணக்கான லைக்ஸ் மற்றும் ஷேர்களை பெறும் என்ற மாயையை சில விஷயங்கள் பிடிவாதமாக உடைக்கும். ஒரு சிலர் இதனை ‘லக்’ என்று அவர் சொல்லலாம், ஆனால் உண்மை மற்றும் யதார்த்தம் என்னவெனில் ரசிகர்கள் நல்ல மற்றும் மிகச்சிறப்பான கதை, ஐடியாக்களுக்கு காத்திருப்பதோடு, அவர்களின் நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் அளிக்கிறார்கள். தற்போது குழந்தைகளின் ஃபேவரைட்டான அனிருத் மற்றும் டைகரஸ் தும்பா பங்கு பெறும் ‘தும்பா’ வீடியோ 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் YouTubeல் 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பது இதை நிரூபணம் ஆக்குகிறது.

அனிருத் மற்றும் டைக்ரஸ் தும்பாவை வைத்து இந்த வீடியோவை உருவாக்கிய இயக்குனர் ஹரிஷ் ராம் LH கூறும்போது, “இதைப் பற்றி நான் என்ன சொல்றது?, இது முற்றிலும் எதிர்பாராதது, எங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. சாகச, கற்பனை வகை படங்களை குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் எப்போதும் விரும்புவார்கள் என்ற நம்பிக்கை எங்கள் மொத்த குழுவுக்கும் இருந்தது. அதனால் தான் மேற்கு நாடுகளில் இந்த காட்சிகள் மாதக்கணக்கில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடுகிறது. எனினும், எங்கள் தும்பாவிற்கு இந்த வகையான வரவேற்பு கிடைக்கும் என நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை, நாங்கள் இப்போது குழந்தையின் மகிழ்ச்சி மனநிலையில் இருக்கிறோம். புதிய அணியை உள்ளடக்கிய ஒரு படம் இதுபோன்ற வரவேற்பை பெறும் என்று நாங்கள் நினைத்ததில்லை. இந்த படைப்பு மற்றும் புதிய முயற்சிக்கு ஆதரவாக இருந்த என் சகோதரர் அனிருத்துக்கு நன்றி. இந்த வீடியோவின் ஒரு பகுதியாக இருக்க அவர் எந்த யோசனையும் இன்றி ஒப்புக் கொண்டார்” என்றார்.

தும்பாவில் ஒரு பாடலுக்கு அனிருத் இசை அமைக்கிறார். மற்ற பாடல்களுக்கு இளம் மற்றும் சென்சேஷனல் இரட்டை இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் மற்றும் சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார்கள். எதிர் நீச்சல், காக்கி சட்டை மற்றும் கொடி போன்ற திரைப்படங்களில் துரை செந்தில் குமாரிடம் பணிபுரிந்த ஹரிஷ் ராம் LH இயக்குகிறார். இளம் நாயகன் தர்ஷன், தீபா மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நரேன் இளன் ஒளிப்பதிவு செய்கிறார். கலைவாணன் படத்தொகுப்பு செய்கிறார். ஆக்‌ஷன் 100 சண்டைப்பயிற்சியையும், வாசுகி பாஸ்கர் மற்றும் பல்லவி சிங் ஆகியோர் ஆடை வடிவமைப்பையும் கவனிக்கிறார்கள். ராம் ராகவ் மற்றும் பிரபாகரன் ஏ.ஆர். வசனம் எழுதியுள்ளனர்.

Knack ஸ்டுடியோஸ் வில்லவன் கோதை ஜி (வி.எஃப்.எக்ஸ் கிரியேட்டிவ் டைரக்டர்), ஸ்ரீ ரங்கராஜ் ஜே (வி.எஃப்.எக்ஸ் இயக்குநர்) மற்றும் சந்திரமோகன் ஜே (வி.எஃப்.எக்ஸ் தயாரிப்பாளர்) ஆகியோர் இப்படத்தின் மிக முக்கியமான அம்சங்களாக இருக்கிறார்கள். ஏனெனில் இது குடும்பம் & குழந்தைகளை மையப்படுத்திய படம். 2019 கோடை விடுமுறையில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

சுரேகா நியாபதியின் ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.

கமல்-ரஜினி பணத்தை தேடிய போது என் இனத்தை தேடியவன் நான். – சீமான்

கமல்-ரஜினி பணத்தை தேடிய போது என் இனத்தை தேடியவன் நான். – சீமான்

‘நாம் தமிழர்’ கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் நடிகர் ஆர். கே. சுரேஷ் அவர்களும் இணைந்து நடிக்கும் படத்திற்கு அமீரா என்று பெயரிட்டுள்ளனர்

ஆர் சுப்ரமணியம் என்பவர் இயக்கவுள்ள இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடிக்க நாயகியாக அனுசித்தாரா நடிக்கிறார்.

இவர் அண்மையில் வெளியான ‘பொதுநலன் கருதி’ படத்தில் நடித்தவர்.

இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இப்பட பூஜை இன்று பிப்ரவரி 22ஆம் தேதி காலை சென்னையில் நடைபெற்றது.

அப்போது சீமான் கலந்துக் கொண்டு பேசினார்.

இன்று அரசியல்வாதி எல்லாருக்கும் ஒரு கருவி (ஊடகம்) தேவைப்படுகிறது.

டிவி & யுடியூப் போல. பிரதமர் முதல்வர் எல்லாரும் அதனை பயன்படுத்துகிறார்கள்.

நான் சினிமா என்ற கருவியை பயன்படுத்தி என் கருத்தை சொல்கிறேன்.

திமுக ஊழல் கட்சி என்று கமல், ரஜினிக்கு முன்பே தெரியாதா..? இப்போது அரசியலுக்கு வருகிறார்கள்.

நான் 8 வருடமாக அரசியலில் இருக்கிறேன். அதில் 18 மாதங்கள் சிறையில் இருந்தேன்.

ரஜினி, கமல் பணத்தை தேடி ஓடிய காலத்திலேயே நான் என் இனத்தை தேடி ஓடியவன்.

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாத ரஜினி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்கிறார்.aza

இந்த சினிமாவில் அமெரிக்க மாப்பிள்ளை, நண்பர் கேரக்டர் செய்யாமல் இருப்பார்கள். அதுபோல இவர் அரசியலுக்கு வந்த உடனே முதல்வர் ஆகனுமாம்…

நான் ரசிகர்களை தொண்டர்களாக மாற்றவில்லை.” என்று பேசினார் சீமான்.

BREAKING விஜய்காந்த் சந்திப்பில் துளி கூட அரசியல் இல்லை.. – ரஜினி

BREAKING விஜய்காந்த் சந்திப்பில் துளி கூட அரசியல் இல்லை.. – ரஜினி

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அமெரிக்க நாட்டில் தங்கி சிகிச்சை பெற்றார்.

சில தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார்.்

இந்நிலையில் அவரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.

அதன் பின்னர் அவர் கூறியதாவது…

“சிகிச்சைக்கு பின் நான் சிங்கப்பூரில் இருந்து வந்தபின் முதல் ஆளாக என்னை வந்து சந்தித்தவர் #விஜயகாந்த்.

அவர் சிகிச்சைக்கு பின் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் நான் அவர் உடல்நலம் விசாரிக்க வந்தேன்.

இதில் துளிகூட அரசியல் கிடையாது .” என்றார்.

தேர்தல் கூட்டணி குறித்து பேசப்பட்டதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நான் என் அரசியல் நிலை குறித்து ஏற்கெனவே சொல்லிவிட்டேன். அதனால், அங்கு பேசுவதற்கு ஒன்றுமில்லை” என்றார் ரஜினிகாந்த்.

#Rajinikanth #vijayakanth #Friends

Rajinikanth met Vijayakanth to enquire about his health

 

 

 

More Articles
Follows