மாரி செல்வராஜின் படத்துக்கு டப்பிங் பேச ஆரம்பித்த வடிவேலு

மாரி செல்வராஜின் படத்துக்கு டப்பிங் பேச ஆரம்பித்த வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி நடித்துள்ள படம் ‘மாமன்னன்’.

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

‘மாமன்னன்’ படம் போஸ்ட் புரொடக்ஷன் பணியில் உள்ளது.

இந்த நிலையில், நகைச்சுவை நடிகர் வடிவேலு படத்தில் உள்ள தனது பகுதிகளுக்கு டப்பிங் பேசத் தொடங்கியுள்ளார்.

டப்பிங் ஸ்டுடியோவில் வடிவேலு மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோரின் படங்களைப் பகிர்ந்த தயாரிப்பு நிறுவனம், “எங்களுக்கு பிடித்த வடிவேலு சார் ‘மாமன்னன்’ டப்பிங் பேசத் தொடங்குகிறார்” என்று பதிவிட்டுள்ளது.

மாமன்னன்

Vadivelu starts dubbing for Mari Selvaraj’s ‘Maamannan’

கவினின் ‘டாடா’ OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

கவினின் ‘டாடா’ OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் நடிகர் கவின் நடித்திருக்கும் படம் ‘டாடா’.

இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணாதாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க பாக்யராஜ், ஐஷ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபெளஸி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ். அம்பேத் குமார் தயாரித்துள்ளார்.

‘டாடா’ திரைப்படம் பிப்ரவரி 10 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது, மேலும் படமும் சூப்பர்ஹிட் என்று தயாரிப்பாளர்களால் அறிவிக்கப்பட்டது.இப்படம் 12 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.

இந்த நிலையில், ‘டாடா’ வரும் மார்ச் 10-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

kavin’s ‘dada’ OTT Release Date Announcement

இந்தியாவின் பிராட் பிட் என அழைக்கப்பட்ட RRR பட நடிகர்

இந்தியாவின் பிராட் பிட் என அழைக்கப்பட்ட RRR பட நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் KTLA என்டர்டெயின்மென்ட்டில் தோன்றியுள்ளார். தனது மிடுக்கான தோற்றத்தினால் (சாம் ரூபின், ஃபிராங்க் பக்லி, ஜெசிகா ஹோம்ஸ் மற்றும் மார்க் கிரிஸ்கி) ஆகியோர்களால் இந்தியாவின் பிராட் பிட் என்று வர்ணிக்கப்பட்டார்.

உங்களுக்கு அந்த பட்டம் பிடித்திருக்கிறதா?’ என்று ஆர்ஆர்ஆர்’ நடிகரிடம் ஹோஸ்ட் சாம் ரூபின் கேட்டார். இதற்கு, பதிலளித்த ராம் சரண் நிச்சயமாக விரும்புகிறேன் என்றார்.

அமெரிக்க நிகழ்ச்சியில் ‘ரங்கஸ்தலம்’ நடிகருக்கு கிடைத்த புகழ்பெற்ற இனிமையான இது என்பது குறிப்பிடத்தக்கது.

Ram Charan gets called India’s Brad Pitt

BIG BREAKING : Thalaivar 170 OFFICIAL – ரஜினியை இயக்கும் சூர்யா பட இயக்குனர்..

BIG BREAKING : Thalaivar 170 OFFICIAL – ரஜினியை இயக்கும் சூர்யா பட இயக்குனர்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா நிறுவன தலைவர் சுபாஷ்கரன் பிறந்த நாளை முன்னிட்டு அந்நிறுவனம் இன்று புது பட அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடிக்கும் 170 வது படத்தை லைக்கா தயாரிக்க இருக்கிறது.

இப்படத்தை சூரியா நடித்த ‘ஜெய் பீம்’ புகழ் ஞானவேல் இயக்கவுள்ளார்.

படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். மேலும் படம் 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள லைக்கா ” ரஜினிகாந்த்தின் ஒவ்வொரு படம் வெளியீடும் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அவருடன் இணைவதில் மகிழ்ச்சி கொள்கிறோம் ” என பதிவிட்டுள்ளது.

Lyca officially announced next project with Rajinikanth

இணையத்தில் வைரலாகும் துரோகம்.; எதிர்ப்பார்ப்பை எகிறச் செய்யும் ‘அகிலன்’

இணையத்தில் வைரலாகும் துரோகம்.; எதிர்ப்பார்ப்பை எகிறச் செய்யும் ‘அகிலன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அகிலன்’.

இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் தயாரிக்க சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இதில் பிரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.

இமில் இரட்டை வேடத்தில் ஜெயம் ரவி நடிப்பதாகவும் ஒரு கேரக்டர் கடற்படை அதிகாரி எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான ‘துரோகம்’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. விவேக் எழுதியுள்ள இந்த பாடலை சாம் சி.எஸ், சிவம் இணைந்து பாடியுள்ளனர்.

ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து இந்த பாடல் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

‘அகிலன்’ படம் வருகிற மார்ச் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

#Dhrogam from @actor_jayamravi ‘s #Agilan is in fierce Mode !
Hits 1 M+ Views ..
?youtu.be/rUER5mwz65w

Time to create a playlist in new genere !!

#AgilanFromMarch10

@Screensceneoffl #DirKalyan @priya_Bshankar @actortanya @SamCSmusic @sukeshdd

https://twitter.com/Screensceneoffl/status/1630781989459726336/video/1

Dhrogam from Jayam Ravi in Agilan goes viral

9 days to witness @actor_jayamravi as strong as the Anchor in #Agilan releasing on March 10th in theatres !

ICYMI watch the first Single : https://youtu.be/rUER5mwz65w

#AgilanFromMarch10

@Screensceneoffl #DirKalyan @priya_Bshankar @actortanya @SamCSmusic @vivekcinema @RVijaimurugan @Pallavi_offl @skiran_kumar @senthilkumarsmc @harishuthaman @JaniChiragjani @onlynikil @shiyamjack @thinkmusicindia
Attachments area

சூப்பர் ஹீரோயின்களை ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’ வில் பார்க்கலாம்.. – பிரியங்கா உபேந்திரா

சூப்பர் ஹீரோயின்களை ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’ வில் பார்க்கலாம்.. – பிரியங்கா உபேந்திரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரியங்கா திரிவேதி 90களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் பெங்காலி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தார்.

பிரபல ஸ்டார் ஹீரோ மற்றும் இயக்குனர் உபேந்திராவை திருமணம் செய்து பிரியங்கா உபேந்திராவாக பல படங்களில் நடித்தவர்.

இவர் நடிக்கும் 50வது படம் ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா” .

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

‘டிடெக்டிவ் தீக்‌ஷனா” படத்தை த்ரிவிக்ரம் ரகு இயக்க குத்த முனி பிரசன்னா & ஜி. முனி வெங்கட் சரண் ஆகியோர் தயாரித்துள்ளனர்.. புருஷோத்தம் பி (SDC) உடன் இணைந்து தயாரிக்கின்றார்.

படம் குறித்து பேசிய பிரியங்கா உபேந்திரா…

நான் அமெரிக்காவிலும் சிங்கப்பூரிலும் வளர்ந்தேன். நான் 16 வயதில் மிஸ் கல்கத்தா ஆனேன், பெங்காலி திரைப்படத் துறையில் எனது வாழ்க்கையைத் தொடங்கினேன்.

1999 – 2003க்கு இடைப்பட்ட குறுகிய காலத்தில் பெங்காலி, ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் ஒடியா படங்களில் பணியாற்றினேன்.

அந்த நேரத்தில் பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றினேன். விஜயகாந்த் சார், விக்ரம் சார், பிரபுதேவா, உபேந்திரா ஆகியோருடன் படங்களில் நடித்தேன்.

எனது முதல் திரைப்படம் பெங்காலி திரைப்படம், தேசிய விருது பெற்ற இயக்குநரான பாசு சாட்டர்ஜி இயக்கிய ஹதத் பிரிஷ்டி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்தது. எனது வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் நான் நிறைய கற்றுக்கொண்டேன்.

பிறகு எனக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்தன. அந்த நேரத்தில், நான் என் நடிப்பு வாழ்க்கையை மீண்டும் தொடங்குவேன் என்று நினைக்கவில்லை. நான் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தேன். பின்னர், மெதுவாக மீண்டும் எனக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

அப்போதெல்லாம் சூப்பர் ஸ்டார்களை திருமணம் செய்து கொண்டு திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்த நடிகைகள் அதிகம் இல்லை.
அப்படியே நடிக்க வந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்வது அவ்வளவு சுலபமல்ல, யாருடன் நடிப்பது?,என்ன மாதிரியான கதைகளை தெர்ந்தெடுப்பது? மற்ற ஹீரோக்களுடன் நடித்தால் பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்ன மாதிரியான வேடங்களில் நடிக்கலாம் போன்ற பல குழப்பங்கள் இருந்தன ஆனாலும் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தேன்.. எனக்கென்று ஒரு இடத்தையும் நான் தக்கவைத்துக்கொண்டேன் .

குழந்தைகள் பிறந்த பிறகு எனக்கு 8 பெங்காலி படங்கள் கிடைத்தது
ஆனால், குழந்தைகளுடன் என்னால் கொல்கத்தா செல்ல முடியவில்லை.
அதனால், கன்னட படங்களில் மட்டுமே நடிக்க விரும்பினேன்.

பாலிவுட் படமான ‘ஐத்ராஸ்’ படத்தின் ரீமேக்கான ‘ஸ்ரீமதி’ படத்தில் உபேந்திராவுடன் நடித்தேன்.
அப்புறம் ரவிச்சந்திரன் சாருடன் ‘கிரேஸி ஸ்டார்’ பண்ணினேன்

பெண்களை முதன்மைபடுத்தி வரும் படங்களுக்கு மார்க்கெட் இருக்கிறது என்பது ஒரு புதிய வழியைத் திறந்து விட்டிருக்கிறது.

எனக்கு நிறைய திகில் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. ஆனால் திகில் தொடர்ந்து செய்யக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

பிறகு ‘இரண்டாம் பாதி’, ‘தேவகி’ ஆகிய படங்களில் நடித்தேன். ‘ ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா” என்னுடைய 50வது படம்.

ஒரு ஸ்கிரிப்டைக் கேட்கும்போது, அதை என் குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்கும் படமாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

ரசிகர்களிடமிருந்து பெரும் அன்பு கிடைக்கும்பொழுது அவர்களை ஒரு போதும் ஏமாற்றிவிடக்கூடாது என்பதிலும்,
பெண்கள் மற்றும் குழந்தைகளை ஊக்குவிக்கும் பாத்திரங்கள் மற்றும் படங்களில் நடிக்க விரும்புகிறேன்.

சமூக வலைதளங்களில் பல திருமணமான பெண்கள் என்னை சக்திவாய்ந்த வேடங்களில் பார்க்கும்பொழுது சக்தி வாய்ந்ததாக உணர்கிறேன் என்று என்னிடம் கூறுகிறார்கள். அதைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறேன்.

‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’
படத்தின் இயக்குனர் ரகு கடின உழைப்பாளி.
நான் ஏற்கனவே அவருடன் பணியாற்றியிருக்கிறேன்.

அவருடைய அர்ப்பணிப்பு எனக்குத் தெரியும். படத்தின் கதையை என்னிடம் சொன்னபொழுது . இதுவரை யாரும் செய்திடாத கதாபாத்திரமாக எனக்கு தோன்றியது எனவே நான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இப்படிப்பட்ட சூப்பர் ஹீரோ ஆக்‌ஷன் படம் செய்ய ஃபிட்டாக இருக்க வேண்டும்.
கதாபாத்திரத்தின் உடல் மொழி, சின்ன சின்ன நுணுக்கமான விசயங்கள் கூட பார்த்து பார்த்து செய்திருக்கிறோம்.

இந்த கதாபாத்திரம் சக்திவாய்ந்த, அறிவார்ந்த, துணிச்சலான பெண்களை பிரதிபலிக்கிறது.

இது பல பெண்களுக்கு ஊக்கமளிக்கும், குறிப்பாக ஆண் ஹீரோக்களைப் பார்க்கும் பெண்கள் இப்போது பெண் சூப்பர் ஹீரோக்களை ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா”’வில் பார்க்கலாம்.

பெண்கள் சக்தி வாய்ந்தவர்களாகவும், புத்திசாலிகளாகவும், துணிச்சலானவர்களாகவும் இருக்க முடியும் என்பதையும், ஆண்களைப் போலவே குற்றங்களைத் தீர்க்க முடியும் என்பதையும் இந்தப்படம் சொல்கிறது. இது நிச்சயமாக புதுவிதமான அனுபவத்தை தரும்.

‘ ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா” ஒரு மிடுக்கான ஆக்‌ஷன் எண்டர்டெய்னர் பார்வையாளர்களுக்கு மிகவும் பொழுதுபோக்காகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும

இது பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். வணிகமாகவும் இந்த படம் பெரும் வெற்றியை கொடுக்கும் என நம்புகிறோம்.

பாகுபலிக்குப் பிறகு கேஜிஎஃப், ஆர்ஆர்ஆர், கந்தாரா,போன்ற திரைப்படங்கள் தென்னிந்திய திரைப்படத் துறைகளுக்கு இடையே இருந்த எல்லைகளை களைந்துள்ளன.

” ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’வை கன்னடம் , தெலுங்கு, இந்தி, தமிழ், பெங்காலி ஆகிய மொழிகளிலும் வெளியிடுகிறோம்.

‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’ படத்திற்குப் பிறகு நான் தற்போது கர்த்தா கர்மா கிரியா, விஸ்வரூபினி ஹல்லிகெம்மா, கைமாரா மற்றும் பெங்காலி படமான மாஸ்டர் ஆங்ஷுமான் ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இவை தவிர தி வைரஸ், கமரோட்டு செக்போஸ்ட் 2, உக்ரா அவதாரா ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இவ்வாறு பேசினார் பிரியங்கா உபேந்திரா.

Actress Priyanka Upendra talks about Detective Deekshana

More Articles
Follows