உதயநிதியின் ‘மாமன்னன்’ படத்தில் வடிவேலுக்கு என்ன கேரக்டர் தெரியுமா.?

உதயநிதியின் ‘மாமன்னன்’ படத்தில் வடிவேலுக்கு என்ன கேரக்டர் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதிர் நடித்த ‘பரியேறும் பெருமாள்’ மற்றும் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ ஆகிய இரு வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ்.

தற்போது ஹாட்ரிக் வெற்றி கொடுக்க உதயநிதி உடன் இணைந்துள்ளார்.

இவர்கள் இணைந்த படத்திற்கு ‘மாமன்னன்’ என்று பெயரிட்டுள்ளனர்.

உதயநிதி தயாரித்து நடிக்கும் இந்த படத்தில் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், ரவீனா, வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

சென்னை, சேலம் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்ட இந்த பட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் வடிவேலுவின் கேரக்டர் பற்றி தெரிய வந்துள்ளது.

அவர் உதயநிதிக்கு தந்தை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறத.

பெரும்பாலும் ஹீரோக்களுக்கு நண்பன் மாமா உள்ளிட்ட கேரக்டரில் வடிவேலு நடித்து வந்தார். தற்போது ஹீரோக்கு அப்பாவாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Vadivelu character update from Maamannan movie

நடிகர்கள் மட்டும்தான் ஃபிட்டா இருக்கனுமா.? உங்க ஆரோக்யத்துக்கு அமீர் தருகிறார் ரூ 10 லட்சம் பரிசு

நடிகர்கள் மட்டும்தான் ஃபிட்டா இருக்கனுமா.? உங்க ஆரோக்யத்துக்கு அமீர் தருகிறார் ரூ 10 லட்சம் பரிசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போதைப் பொருட்களை பயன்படுத்துவதின் தீமைகள் மற்றும் ஆரோக்கியமாக வாழ்வதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மதுரை கே.எல்.என் பொறியியல் கல்லூரியில் World Fitness Federation (WFF) தேசிய அளவிலான உடற்கட்டமைப்பு மற்றும் உடற்தகுதி போட்டியை இயக்குநர் அமீர் நடத்துகிறார்.

இம்முயற்சி குறித்து பேசிய அமீர்…

“மனித வாழ்வில் ஆரோக்கியம் ஒரு முக்கிய அம்சமாகும், ஆனால் மக்கள் பாரம்பரிய உணவுப் பழக்கத்திலிருந்து விலகிவிட்டனர் என்றார்.

“இதனால் முன்பு போல் மக்கள் இன்று ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. மேற்கத்திய நாடுகளின் ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறையை நாம் எவ்வாறு பின்பற்றுகிறோமோ, அதே போல் அவர்களின் உணவுப் பழக்கங்களையும் பின்பற்ற முயற்சிக்கிறோம்.

ஆரோக்கியமாக இருப்பது குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும். நடிகர்கள் மட்டுமே ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது, அது உண்மையல்ல,” என்று அவர் மேலும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்…

“சில வருடங்களுக்கு முன்பு வரை கல்லூரி தேர்வில் தேர்ச்சி பெறுவதே மாணவர்களின் இலக்காக இருந்தது. ஆனால், இப்போது போதைப் பழக்கம் இல்லாமல் கல்லூரியை விட்டு வெளியே வருவதே பெரிய சாதனையாகப் பார்க்கப்படும் நிலையில் இருக்கிறோம். இது மிகவும் ஏமாற்றமளிக்கும் மற்றும் மிகவும் ஆபத்தான போக்காகும்.

நமது ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டு அல்லது உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் போதைப்பழக்கத்தில் இருந்து நாம் விலகி இருக்கலாம்,” என்று கூறினார்.

​​“நான் திரையில் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் உடல்நலனில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். என்னை போல மற்றவர்கள் தாமதமாகத் தொடங்குவதை நான் விரும்பவில்லை.

அதனால்தான் எனது பயிற்சியாளர் மோகன் ஆதரவுடன் இந்தப் போட்டியை நடத்த நினைத்தேன். மோகன் இது போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தியவர்,” என்று அமீர் தெரிவித்தார்.

“இந்தியாவில் இருந்து ஏராளமானோர் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர். தலைநகரில் மட்டும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதை நான் விரும்பவில்லை. எனவே முதல் நிகழ்ச்சி மதுரையில் நடத்தப்படும்.

இந்த நிகழ்ச்சிக்கு கிடைக்கும் வரவேற்பின் அடிப்படையில் மேலும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.

மற்ற போட்டிகளை போலல்லாமல், இந்தப் போட்டியில் அதிக பங்கேற்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 10 லட்சம் ரூபாய் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் அமீர் கூறினார்.

Ameers initiative for drug free society and fitness competition

In order to create awareness about the ill effects of drugs and the importance of maintaining good health, Director Ameer will be organising a World Fitness Federation (WFF) National level body building and fitness competition on 17 and 18 September at the Madurai KLN Engineering College.

Speaking about the initiative, Ameer said that health is an important aspect of human life, but people have moved away from traditional food habits.

“As a result of this people are not giving much importance to health these days like before. Just like how we follow the fashion and lifestyle from the western countries, we are also trying to replicate their food habits as well. However, it is important that awareness should be created among the youth about staying healthy. There is a popular belief that only actors have to be fit, which is not true,” he said.

He further said that there was a time when college students thought of passing out without any arrears.

“But now we are at a stage where coming out of college without any drug habit is itself seen as a big achievement. This is a very disappointing and highly dangerous trend. We should concentrate more on our health. To achieve this we must focus on sports, body building or any other activity that will keep us away from drugs,” he added.

Ameer said, “I started focusing on my health, only after I started appearing on screen. I realised that I was late. But I do not want others to start late. This is why I thought of conducting this competition with the support of my physical trainer Mohan, who has conducted many such events.”

“Many people from India are participating. I do not want the event to get restricted in the capital city alone and hence the first event will be held in Madurai. More events will be conducted based on the response for this event,” he added.

Ameer also said that unlike most other events, the competition will have a cash prize of upto Rs 10 lakh to encourage more participants.

விக்ரம் 100வது நாள்: கோவையில் கோலாகலம்; கமல்ஹாசன் பங்கேற்கிறார்

விக்ரம் 100வது நாள்: கோவையில் கோலாகலம்; கமல்ஹாசன் பங்கேற்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்திருந்த படம் ‘விக்ரம்’.

அனிருத் இசையமைத்திருந்த இந்த படத்தில் கமலுடன் விஜய்சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ், ஷிவானி மைனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கிளைமாக்ஸில் வரும் முக்கிய கேரக்டரில் நடிகர் சூர்யா நடித்திருந்தார்.

இந்தப் படம் தமிழ் சினிமாவின் பல ரெக்கார்டுகளை முறியடித்து சாதனை படைத்து வருகிறது.

இந்தப் படம் வெளியாகி 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் கேஜி சினிமாஸ் திரையரங்கில் 100வது நாள் கொண்டாட்டம் நடைபெற உள்ளது.

400 காட்சிகள் திரையிடப்பட்டு ஒரு லட்சத்துக்கு 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் இந்த படத்தை பார்த்துள்ளனர்.

இதனை முன்னிட்டு வருகிற வெள்ளிக்கிழமை செப்டம்பர் 16ஆம் தேதி சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கமலஹாசன் கலந்து கொள்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம்

Kamal will particpate in 100 Days of Industry Hit Vikram

விஜய்சேதுபதி போல நடிக்கணும்.. ரஜினி கமல் கிட்ட காட்டணும்.; வேலு நாச்சியராக சேத்தன் சீனு.!

விஜய்சேதுபதி போல நடிக்கணும்.. ரஜினி கமல் கிட்ட காட்டணும்.; வேலு நாச்சியராக சேத்தன் சீனு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் மு.களஞ்சியம் இயக்கிய கருங்காலி படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக நடித்து கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேத்தன் சீனு.

ஸ்ரீநிவாஸ் என்பது இவரது பெயராக இருந்தாலும் அந்த பெயரில் இன்னும் சில நடிகர்கள் இருப்பதால் சேத்தன் சீனு என மாற்றிக்கொண்டார்.

சேத்தன் சீனுவின் பூர்விகம் தெலுங்கு என்றாலும் இவர் படித்தது வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான். சிறுவயதிலேயே இவருக்கு சினிமா ஆர்வத்தை ஏற்படுத்தியது இவரது தந்தை தான்.. அந்த சமயத்தில் அஞ்சலி, சேதுபதி ஐபிஎஸ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்க சினிமா மீதான கனவு அப்போதே துவங்கி விட்டது என்கிறார் சேத்தன் சீனு.

ஜூனியர் என்டிஆர் நடனம் கற்றுக்கொண்ட அதே மாஸ்டரிடம் நடனத்தையும் பாண்டியன் மாஸ்டரிடம் சண்டையையும் கற்றுக்கொண்ட சேத்தன் சீனு, அப்படியே மாடலிங் பக்கம் கவனத்தை திருப்பினார்.

மாடலிங் மூலமாக விளம்பரப்பட வாய்ப்புகள் வரவே, கார்னியர், சாம்சங், டாமினோஸ், ஜாய் ஆலுக்காஸ் உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் ஷாருக்கான், மாதவன் ஆகியோர் டெலிவிஷன்களில் நடித்து அதன்மூலம் திரையுலகில் நுழைய காரணமாக இருந்த மும்பையில் உள்ள பாலாஜி டெலிபிலிம்ஸ் நிறுவனத்திலும் கொஞ்சநாள் பணியாற்றினார்..

அப்படியே சினிமாவுக்கென முழுதாக தயாரான சமயத்தில் தான், கருங்காலி படத்தில் நடிக்கும் முதல் வாய்ப்பு இயக்குனர் மு.களஞ்சியம் மூலமாக சீனுவின் வீட்டுக்கதவை தட்டியது.. அதை தொடர்ந்து இவரை அழைத்து நான் சிவப்பு மனிதன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார் நடிகர் விஷால்.

இந்த படங்களின் மூலம் கிடைத்த வரவேற்பால் தெலுங்கில் அடியெடுத்து வைத்ததும் அங்கே முதல் படமாக நடிகை சார்மி கதாநாயகியாக நடித்த மந்த்ரா-2 என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.

“ஏற்கனவே ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகம் அது.. அதுவும் ஹிட் தான்.. சார்மியை பார்க்கும்போதெல்லாம் ஒரு அயன் லேடி போலத்தான் எனக்கு தோன்றும். நடிகையாக இருந்து இப்போது தயாரிப்பாளராக மாறி அனைத்து வேலைகளையும் கவனிப்பது சாதாரண விஷயம் அல்லவே..

தெலுங்கில் மந்த்ரா-2 படத்தை தொடர்ந்து, நான் நடித்த படம் தான் ராஜூ காரி கதி.. மூன்று கோடியில் தயாரான இந்தப்படம் 18 கோடி வசூலித்து மிகப்பெரிய ஹிட் ஆனது.

“இந்தப்படத்தில் ஒரே கதாபாத்திரத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்திருந்தேன்… அதற்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல பாராட்டுக்கள் கிடைத்தன. மேலும் சுனைனா கதாநாயகியாக நடித்த பெல்லிக்கி முந்து பிரேமகதா என்கிற படத்திலும் கதாநாயகனாக நடித்தேன். அதை தொடர்ந்து சில வாய்ப்புகள் தேடி வந்தாலும் கூட, நல்ல கதைகளுக்காக காத்திருந்தேன்.

புன்னகை பூவே, கண்ணுக்குள் நிலவு, காசி, சமுத்திரம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை காவேரி கல்யாணி இப்போது இயக்குனராக மாறி தமிழ், தெலுங்கில் உருவாக்கி வரும் பான் இந்திய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

அந்தப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்கிறார். அந்தப்படத்தில், ஹீரோவாக நடித்துள்ளேன்..

இந்தப்படத்தில் நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இதில் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ள சித்தி இத்னானியும் ஒருவர். அவர்தான் படத்தில் எனக்கு பிரதான ஜோடியாக நடித்துள்ளார்.

சுகாசினி, ஸ்ரீகாந்த், விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பல நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்போதும் எனது முதல் பட கதாநாயகி அஞ்சலியுடன் நல்ல நட்பு தொடர்கிறது. காவேரி கல்யாணி இயக்கிய படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க அஞ்சலியை கேட்டோம். சந்தோஷமாக ஒப்புக்கொண்டார்.. ஆனால் கோவிட் காரணமாக அவர் நடித்துவந்த படங்களின் தேதிகள் மாறியதால் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை..

இதுதவிர தெலுங்கு, மற்றும் தமிழில் உருவாகி வரும் வித்யார்த்தி என்கிற படத்தில் நடித்து வருகிறேன். தமிழில் இதன் டைட்டில் பரிசீலனையில் உள்ளது. ஆணவக்கொலையை மையப்படுத்தி உண்மையில் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில் இந்தப்படம் உருவாகியுள்ளது இதுவும் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.

இந்த இரண்டு படங்களும் தமிழிலும் வெளியாவதால் இதன்மூலம் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தமிழுக்கு திரும்புகிறேன். அதுமட்டுமல்ல, தற்போது ஆஸ்திரேலிய தயாரிப்பாளர் ஒருவரின் தயாரிப்பில் தமிழில் உருவாகும் ஒரு படத்திலும் நடித்து வருகிறேன்….

கோவிட் காலகட்டத்தில் நிறைய ஒய்வு நேரம் கிடைத்தது. அந்த சமயத்தில் விஸ்காம் ஸ்டூடன்ட் ஆன என்னுடைய தங்கையுடன் இணைந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுதந்திரத்திற்காக போராடிய வி.வி.எஸ்.ஐயர், சத்ரபதி சிவாஜி, வேலுத்தம்பி தலவா, வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் என 12 சுதந்திர போராட்ட வீரர்களின் கதைகளை ஆக்டர் என்கிற பெயரில் ஆந்தாலாஜி படமாக எடுக்கலாம் என முடிவு செய்து 12 எபிசோடுகளுக்கான கதைகளையும் நானும் என் தங்கையும் இணைந்து உருவாக்கியுள்ளோம்…

அதாவது அவர்களது வாழ்க்கையில் நடந்த, முக்கியமான, அவர்கள் மிக தீரமாக எதிர்கொண்ட ஒரு விஷயத்தை மையமாக வைத்து, இருபது நிமிடங்கள் என்கிற அளவில் ஒவ்வொருவரின் எபிசோடையும் உருவாக்க திட்டமிட்டுள்ளோம்…

அதற்கு முன்னதாக வேலு நாச்சியார் உட்பட இந்த 12 கதாபாத்திரங்களிலும் நானே நடிக்கிறேன் என்பதால் இதற்காக கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக எனது உடல் எடையை ஏற்றி இறக்கி, முடியை ஒவ்வொரு கதாபாத்திரத்திரும் ஏற்றாற்போல் வளர்த்து அந்தந்த கதாபாத்திரங்களாக மாறி, ஒவ்வொரு எபிசோடுக்கான பைலட் சூட்டையும் நடத்தி முடித்துள்ளோம்..

இந்த கதைகளை அழகாக திரைக்கதை அமைத்து வடிவமைத்து தரும்படி பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற பிரமாண்ட படங்களுக்கு கதை எழுதிய விஜயேந்திர பிரசாத்தை அணுகியுள்ளோம்.. அவரை நேரில் சந்திக்கும்போது நாங்கள் உருவாக்கிய கதையுடன் இந்த பைலட் காட்சிகளையும் அவரிடம் காட்ட இருக்கிறோம். முழுமையான திரைக்கதை கிடைத்தவுடன் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளோம்.

இதுதவிர இந்த 12 கதாபாத்திரங்களில் நடிக்கும் எனது 12 விதமான தோற்றங்களை கொண்டு ஒரு அழகான காலண்டர் ஒன்றை வடிவமைக்கும் யோசனையும் மனதில் இருக்கிறது.. இந்த படமும் இந்த காலண்டரும் கூட நாளை எனக்கான புதிய வாசலை திறந்துவிட கூடும் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது. .

எனது தந்தை வாஹினி நிறுவனத்தில் பணியாற்றிய சமயத்தில் ரஜினி சாரின் உழைப்பாளி, கமல் சாரின் நம்மவர் ஆகிய படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றது.

அந்த சமயத்தில் அவர்களை வைத்த கண் வாங்காமல் பார்ப்பேன்.. அவர்கள் இருவரையும் அவர்களது கடின உழைப்பையும் நடிப்புக்கான அர்ப்பணிப்பு உணர்வையும் தான் இன்ஸ்பிரேஷனாக மனதில் கொண்டுள்ளேன்..

தசாவதாரம் பார்த்து பிரமித்தவன் நான். இந்த ஆக்டர் ஆந்தாலாஜி படத்தை உருவாக்குவதற்கு கமல் சார் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்.. இதை எடுத்து முடித்ததும் கமல்-ரஜினி இருவரிடம் இந்தப்படத்தை காட்ட விரும்புகிறேன்.

நடிகர் விஜய்சேதுபதி போல எந்த கதாபாத்திரம் என்றாலும் நடிக்க கூடிய ஒரு நல்ல நடிகராகவே என்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.. எல்லோருக்கும் ஒரு நேரம் வரும்.. ஒரு வெள்ளிக்கிழமை காலை ஷோ ஒரு நடிகரின் தலையெழுத்தையே மாற்றி அவரை ஸ்டார் ஆக்கிவிடும்.. எனக்கென ஒரு வெள்ளிக்கிழமை நிச்சயம் இருக்கும் என்கிற நம்பிக்கையில் விடாமுயற்சி செய்து வருகிறேன்” என தனது மனதில் உள்ளவற்றை வெளிப்படையாக பேசினார் சேத்தன் சீனு..

சேத்தன் சீனு

Actor Chethan Cheenu talks about his upcoming movies

#OneActor12MakeOvers @ChethanCheenu

@johnmediamangr

#ChethanCheenu

‘சூப்பர் ஸ்டார்’ படத்தால் ‘வெந்து தணிந்தது காடு’ பட ரிலீசுக்கு சிக்கல்.??

‘சூப்பர் ஸ்டார்’ படத்தால் ‘வெந்து தணிந்தது காடு’ பட ரிலீசுக்கு சிக்கல்.??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதமேனன் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் சிலம்பரசன் நடித்துள்ள திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’.

வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்பு படம் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

எனவே 200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் அதிகாலை காட்சிகள் திரையிடப்பட உள்ளது.

இந்த நிலையில் “வெந்து தணிந்தது காடு” படத்திற்கு தடைவிதிக்கக்கோரி வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது.

சிம்பு நடிப்பில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் படம் இயக்க ரூ.2.40 கோடி முன்பணம் பெற்று ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் அதே கதையை வைத்து “வெந்து தணிந்தது காடு” படம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆன் இன் பிக்சர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

எனவே வழக்கு தொடர்ந்த தயாரிப்பு நிறுவனத்துடன் சமரசம் செய்து கொள்கிறோம் என இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் உத்திரவாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய கவுதம் வாசுதேவ் மேனன் தரப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது கோர்ட்.

இது தொடர்பான விசாரணை வரும் செப்.21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கோர்ட் தெரிவித்துள்ளது.

வெந்து தணிந்தது காடு

Vendhu Thanindhathu Kaadu movie release issue

தளபதிக்கு வயசு ரிவர்ஸ் ஆகுதே..; விஜய் – ராஷ்மிகா எடுத்த செல்ஃபி வைரல்

தளபதிக்கு வயசு ரிவர்ஸ் ஆகுதே..; விஜய் – ராஷ்மிகா எடுத்த செல்ஃபி வைரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வம்சி இயக்கத்தில் தமன் இசையில் விஜய் நடித்து வரும் படம் ‘வாரிசு’

விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், யோகிபாபு, பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஜெயசுதா உட்பட பலர் நடிக்க தில் ராஜு தயாரித்து வருகிறார்.

இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் குடும்ப செண்டிமெண்ட் படமாக வளர்ந்து வருகிறது.

அடுத்த அக்டோபர் மாதத்திற்குள் இப்படத்தின் சூட்டிங் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ‘வாரிசு’ பட சூட்டிங்கின் போது விஜய் ராஷ்மிகா எடுத்த செல்ஃபி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதில் விஜய் இளமையாக இருப்பதாகவும் அவருக்கு மட்டும் வயசு குறைந்து வருவதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

More Articles
Follows