‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் சந்தானம் ஜோடியாக தனுஷ் – சிம்பு பட நாயகி

‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் சந்தானம் ஜோடியாக தனுஷ் – சிம்பு பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கவுண்டமணியின் பிரபலமான காமெடி வசனங்களில் ஒன்றான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற கேரக்டர் பெயர் சமீபத்தில் புதிய படத்தின் தலைப்பானது.

இந்த படத்தில் சந்தான நாயகனாக நடிக்கிறார் என்ற செய்தியை சமீபத்தில் நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்

அதன் விவரம் வருமாறு..

தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று PEOPLE MEDIA FACTORY.

தற்போது இந்த நிறுவனம் தமிழில் புதிய படத்தை தயாரிக்க முன் வந்துள்ளது.

தெலுங்கில் Oh Baby, Goodachari, Karthikeya 2 and Dhamaka உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளனர்.

‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கார்த்தி யோகி என்பவர் இயக்குகிறார்.

ஷான் ரோல்டன் இசையமைக்க தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவா நந்தீஸ்வரன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.

இந்த நிலையில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடிக்கிறார் என்ற தகவலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளனர்.

வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகவும் என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் மேகா ஆகாஷ்.

மேலும் ரஜினியின் பேட்ட படத்தில் சிம்ரனுக்கு மகளாக மேகா ஆகாஷ் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வடக்குப்பட்டி ராமசாமி

Megha Akash join Santhanam in ‘Vadakupatti Ramasamy’

தங்கலான் படப்பிடிப்பில் பங்கேற்க பறந்து வந்த விஜய் & தனுஷ் பட நாயகி

தங்கலான் படப்பிடிப்பில் பங்கேற்க பறந்து வந்த விஜய் & தனுஷ் பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது நடிகர் விக்ரம் வைத்து ‘தங்கலான்’ படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் விக்ரம், பார்வதி திருவோடு, மாளவிகா மோகனன், பசுபதி மாசிலாமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘ஸ்டூடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக படத்தின் கதாநாயகியாக நடிக்கும் நடிகை மாளவிகா மோகனன் இன்று சென்னை வந்துள்ளார்.

மேலும், மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் மற்றும் மாறன் படத்தில் தனுஷ் உடன் ஜோடியாக நடித்தவர் மாளவிகா என்பது குறிப்பிடத்தக்கது.

Malavika Mohanan reaches Chennai for ‘Thangalaan’ shooting

நடிகர் டி.பி.கஜேந்திரனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கமல்…

நடிகர் டி.பி.கஜேந்திரனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கமல்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் டி.பி.கஜேந்திரன் பிப்ரவரி 5-ம் தேதி காலமானார்.

டி.பி.கஜேந்திரனின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

டி.பி.கஜேந்திரனின் மறைவுக்கு கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் நடிகரின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் கமல்ஹாசன் மறைந்த நடிகருக்கு இரங்கல் தெரிவித்தார்.

கமல் தனது ட்விட்டரில், “எந்த விஷயத்தையும் நகைச்சுவையோடு சொல்வதன் வலிமையை அறிந்தவர் இயக்குநர் திரு டி.பி.கஜேந்திரன். அவருக்கான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறினார்.

மேலும், ‘பம்மல் கே சமந்தம்’ படத்தில் கமல்ஹாசனுடன் டி.பி.கஜேந்திரன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal mourns the demise of TP Gajendran

‘சூர்யா 42’ படத்தில் மிரள வைக்கும் ஸ்டண்ட் காட்சிகள்

‘சூர்யா 42’ படத்தில் மிரள வைக்கும் ஸ்டண்ட் காட்சிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்திய அப்டேட் என்னவென்றால், ‘சூர்யா 42’ படத்திற்காக ஒரு பெரிய விமான செட் கட்டப்பட்டுள்ளது, அதில் ஒரு பெரிய ஸ்டண்ட் காட்சி பதிவு செய்யப்பட உள்ளது . தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத வகையிலான ஹை ஆக்டான்ஸ் ஆக்ஷன் சீக்வென்ஸில் காட்சிகளும் உள்ளன.

‘சூர்யா 42’ படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர், சில நாட்களுக்கு முன்பு ஜிம்மில் சூர்யாவுடன் சுமார் 50 ஸ்டண்ட் கலைஞர்கள் மோதும் சண்டைக் காட்சியை படமாக்கினார் அன்பான சூர்யா ரசிகர்களுக்கு இப்படம் ஒரு அதிரடி விருந்தாக இருக்கும் என்பதை மேலே உள்ள தகவல் தெளிவாகக் காட்டுகிறது.

Suriya’s high altitude stunt sequence in ‘Suriya 42’

நடிகர் கருணாஸ் மகளுக்கு திருமணம். பிரபலங்கள் வாழ்த்து ..

நடிகர் கருணாஸ் மகளுக்கு திருமணம். பிரபலங்கள் வாழ்த்து ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரசியல்வாதியும், முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ், பாடகி மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரான கிரேஸ் கருணாஸை திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகன் கென் கருணாஸும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தில் நடித்து அறிமுகமானவர்.

கிரேஸ் மற்றும் கருணாஸின் மூத்த மகள் டயானா மருத்துவராக உள்ளார், மேலும் அவர் சமீபத்தில் பெங்களூருவில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஒரு தனியார் விழாவில் திருமணம் செய்து கொண்டார்.

இந்த இளம் ஜோடிக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Actor Karunas daughter gets married

JUST IN இயக்குனர் ரஞ்சித்தின் 10வது படைப்பு பற்றிய அறிவிப்பு; இயக்குனர் யார்?

JUST IN இயக்குனர் ரஞ்சித்தின் 10வது படைப்பு பற்றிய அறிவிப்பு; இயக்குனர் யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமூகம் ஜாதி சார்ந்த படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குனர் என பெயர் பெற்றவர் இயக்குனர் பா ரஞ்சித்.

ஒரு பக்கம் ‘கபாலி’ ‘காலா’ என ரஜினியின் பிரம்மாண்ட படைப்புகளை இயக்குனராக கொடுத்தார்.

தற்போது விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ என பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார்.

விரைவில் கமல்ஹாசன் நடிக்க உள்ள படத்தை இயக்குவார் என அவரே தெரிவித்து இருந்தார்.

மறுபக்கம் வித்தியாசமான படைப்புகளை ஒரு தயாரிப்பாளராக உருவாக்கி வருகிறார்.

இவரது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகும் படங்கள் அனைத்தும் மக்களின் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.

பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, நட்சத்திரம் நகர்கிறது, சார்பட்டா பரம்பரை, குதிரைவால், பொம்மை நாயகி என தரமான படங்களை கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்தின் அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளனர்.

நாளை பிப்ரவரி 6ம் தேதி மாலை 7 மணிக்கு தங்களது புதிய படைப்பின் தலைப்பு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இந்தப் படத்தை இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு என்ற படத்தை இயக்கிய ஆதிரை அதியன் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

பா ரஞ்சித்

Ranjiths direction 10th movie News updates

More Articles
Follows