தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உறியடி, உறியடி 2 படங்களை எழுதி, இயக்கி, நடித்தவரும், சூரரை போற்று படத்திற்கு வசனம் எழுதியவருமான விஜய் குமார், நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்குகிறது.
அறிமுக இயக்குனர் அப்பாஸ் இயக்க விருக்கும் இத்திரைப்படத்தை ‘ரீல் குட் பிலிம்ஸ்’ சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிக்கிறார்.
அறிமுக இயக்குனரான அப்பாஸ், உறியடி படத்தின் இரு பாகங்களிலும் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் ஆவார்.
விஜய் குமாருக்கு ஜோடியாக அர்ஷா எனும் நடிகை அறிமுகமாகிறார்.
இவர்களுடன் நடிகர்கள் சங்கர் தாஸ், அவினாஷ் , கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
பிரபல ஒளிப்பதிவாளர் ரவி வர்மனிடம் உதவியாளராகப் பணியாற்றிய பிரிட்டோ இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.
பட தொகுப்பு வேலைகளை கிருபாகரனும், சண்டைக்காட்சி மற்றும் கலை இயக்கத்தை உறியடி படத்தின் மூலம் அறிமுகமான விக்கி , ஏழுமலை கவனிக்கின்றனர்.
லைஃப்ஸ்டைல் ஆக்சன் டிராமா வகையில் தயாராகும் இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கி தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு நடை பெற இருக்கின்றது.
Uriyadi Vijayakumar begun shooting for his next film