புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மோடி அமைச்சரவை ஒப்புதல்

Narayanasamy (2)தமிழகத்தைப் போலவே புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலுக்கும் இன்னும் சில மாதங்களே உள்ளது.

புதுச்சேரியில் 2016 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் 15 எம்.எல்.ஏ.,க்களுடன் ஆட்சி அமைத்தது. மூன்று தி.மு.க., – MLAக்கள், மாகி தொகுதி சுயேச்சை MLA, ஆட்சிக்கு ஆதரவளித்தனர்.

முதல்வராக நாராயணசாமி பதவியேற்றார்..

2020 கடந்தாண்டு ஜூனில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, அரசுக்கு எதிராகத் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்த காரணத்தினால் பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனவேலுவை தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர்.

இதனால் 18ஆக இருந்த காங்கிரஸ் கூட்டணி கட்சியிலிருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 17ஆக ஆனது.

இந்தாண்டு 2021 ஜனவரியில்… முதல்வர் நாராயணசாமி உடனான மோதல் காரணமாக பொதுப்பணித்துறை அமைச்சரும், வில்லியனூர் தொகுதி MLA நமச்சிவாயம் மற்றும் உசுடு தொகுதி MLA தீப்பாய்ந்தான் ஆகிய இருவரும் ராஜினாமா செய்து பாஜக.வில் இணைந்தனர்.

எனவே காங். கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் 17லிருந்து 15ஆக ஆனது.

இதன் பின்னர் புதுச்சேரி யானம் MLA மல்லாடி கிருஷ்ணா ராவ் கடந்த 15ஆம் தேதியும் அடுத்த நாள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காமராஜர் நகர் MLA ஜான்குமார்‌ இருவரும் ராஜினாமா செய்தனர்.

அதே பிப்ரவரி 16 இரவில்… புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்த கிரண் பேடியை விடுவித்து, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை கூடுதல் பொறுப்பாக ஜனாதிபதி ஒப்படைத்தார்.

நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பிப்ரவரி 22ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார் ஆளுநர் தமிழிசை.

பிப்ரவரி 21ஆம் தேதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்பவன் MLA லட்சுமி நாராயணன் & திமுகவை சேர்ந்த தட்டாஞ்சாவடி தொகுதி MLA வெங்கடேசன் இருவரும் ராஜினாமா செய்தனர்.

மேலும் கீதா ஆனந்தன் MLAவும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஆக மொத்தம் புதுச்சேரியில் 7 MLAக்கள் பதவி விலகியதால், 17ல் இருந்து 10ஆக ஆனது. இதனால் காங்கிரஸ் கூட்டணி அரசு தனது மெஜாரிட்டியை இழந்தது.

இதனால் சட்டசபையில் நாராயணசாமியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.

பெரும்பான்மை இல்லாமல் போனதால் நாராயணசாமி அரசு கவிழ்ந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

இதனையடுத்து, புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி, துணை நிலை கவர்னர் தமிழிசை சௌந்திரராஜன், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.

அதன்படி, இன்று பிப்ரவரி 24ல் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில், புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Union Cabinet approves President’s Rule in Pondicherry

Overall Rating : Not available

Latest Post