கொரோனா நிவாரணம் 4000.. ஆவின் பால் விலை குறைப்பு.. பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம்..; 5 அரசாணைகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கையெழுத்து.!

MK Stalinதமிழகத்தின் முதல்வராக இன்று மே 7ல் மிக எளிய முறையில் (கொரோனா காரணமாக) ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார் மு.க.ஸ்டாலின்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்…’ எனும் நான்’ என்று கூறி தமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்.. அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

இவருடன் 33 புதிய அமைச்சர்களும் இன்று பதவிஏற்றுக் கொண்டனர்.

இந்த அமைச்சரவைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்டாலின் முதல் கையெழுத்து என்னவாக இருக்கும்.? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவியது.

இந்த நிலையில் கோட்டையில் தனது அறைக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், கோப்பில் முதல் கையெழுத்தாக எந்தத் திட்டத்துக்குப் போடுவார் என்கிற கேள்வி எழுந்த நிலையில் 5 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.

1. முதல் அரசாணையாக கொரோனா நிவாரணமாக அரிசி குடும்ப அட்டை ஒன்றுக்கு கருணாநிதி பிறந்த நாளில் ரூ.4000 என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதை முதல் தவணையாக மே மாதத்திலேயே ரூ.2000-ஐ குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் அரசாணை. இதன்படி 2 கோடியே, 7 லட்சத்து 66,000 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர்.

2. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படுகிறது. அது இந்த மாதம் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

3. மகளிர், பணிக்குச் செல்லும் பெண்கள், படிக்கும் பெண்கள் இலவசமாக உள்ளூர் பேருந்தில் பயணம் செய்யும் திட்டம் நாளை முதல் அமல்.

4. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கிற திட்டத்தின் கீழ் தேர்தல் பிரச்சாரத்தின்போது பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களில் தீர்வு காண உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்கிற திட்டத்தின் கீழ் துறை உருவாக்கப்படுகிறது. இதற்காக ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுகிறார்.

5. கரோனா சிகிச்சை பெறுவோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை செலவுகளை அரசே வழங்கும்.

கூடுதல் தகவல்..:

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தனக்கு சேவை வாய்ப்பு வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

MK Stalin signs 5 orders on Day 1 as TN CM

Overall Rating : Not available

Latest Post