இவன் வாயே திறக்கக்கூடாது.. கொலை மிரட்டல் விடுத்த பாஜக-வினர்.; மோடியை சாடிய ‘ரியல் ஹீரோ’ சித்தார்த்

siddharth (2)கொரோனா 2வது அலை நாடெங்கிலும் அதிவேகமாக பரவி வருகிறது.

கொரோனா சிகிச்சைக்கான ஆக்ஸிஜன் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மனிதர்களை நம் சமூகம் இழந்து வருகிறது.

இதனால் மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசை பலரும் கண்டித்து வருகின்றனர்.

ஆனால் “ஆக்ஸிஜன் இல்லை என பொய் சொல்லும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார்.

இதனையடுத்து ரியல் ஹீரோவான சித்தார்த் அவர்கள் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில்,..

“நான் ஒரு கண்ணியமான மனிதன் அல்லது புனிதத் துறவி அல்லது தலைவர் என்று பொய் சொன்னால் அறை விழும்” என முதல்வர் யோகியை குறிப்பிட்டு இருந்தார்.

நடிகர் சித்தார்த்தின் இந்தப் பதிவுக்கு பா.ஜ.க.-வினர் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இதனால் இரு தரப்புக்கும் மோதல் உருவானது.

இதனையடுத்து நடிகர் சித்தார்த் தனது அடுத்த ட்விட்டர் பதிவில்…

“என்னுடைய செல்பேசி எண்ணை தமிழக பா.ஜ.கவும் பா.ஜ.க. ஐடி செல்லும் வெளியிட்டுள்ளன. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் எனக்கும் என் குடும்பத்திற்கும் மிரட்டல் விடுத்து 500க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்திருக்கின்றன.

பாலியல் துன்புறுத்தல், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. அனைத்து எண்களும் பதிவு செய்யப்பட்டு, காவல்துறையிடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

நான் பேசாமல் இருக்க மாட்டேன். தொடர்ந்து முயற்சித்துப் பாருங்கள்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் “தமிழக பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் என்னுடைய செல்பேசி எண்ணைக் குறிப்பிட்டு, என்னைத் தாக்கும்படி கூறி வெளியிட்ட பல சமூகவலைதளப் பதிவுகளில் இதுவும் ஒன்று. “இவன் இனிமேல வாயே திறக்கக்கூடாது” என்று கூறியுள்ளார்கள் என மற்றொரு ஸ்க்ரீன் ஷாட்டையும் சித்தார்த் பதிவிட்டுள்ளார்.

நாம் கோவிட்டிலிருந்து தப்பிவிடலாம். இவர்களிடமிருந்து தப்ப முடியுமா?” என்று மற்றொரு ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் சித்தார்த்.

Actor Siddharth receives rape , death threats

Overall Rating : Not available

Latest Post