பாரதம் கண்ட சதுரங்கம் ஒரு பார்வை : மோடி – ஸ்டாலின் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட்.; ரஜினி வாழ்த்து

பாரதம் கண்ட சதுரங்கம் ஒரு பார்வை : மோடி – ஸ்டாலின் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட்.; ரஜினி வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை – மாமல்லபுரத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று (வியாழக்கிழமை) தொடங்கவுள்ளது.

இந்த போட்டி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

1927-ம் ஆண்டு முதல் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது.

இந்தியாவில் முதல் முறையாகவும் அதுவும் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன.

உலகின் அதிவேக சதுரங்க வீரர் என்றால் தனது 15 ஆவது வயதில் “INTERNATIONAL MASTER” என்ற பட்டத்தை வென்ற மயிலாடுதுறையைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தான் நியாபகத்திற்கு வருவார்.

இவ்வளவு பெரிய GRAND MASTER 2013 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் ஒருவருடன் விளையாடி தோல்வியுற்றார் என்றால் அவர்தான் நார்வே நாட்டைச் சேர்ந்த “மேக்னஸ் கார்ல்சன்”.

பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பின் உலகத் தரவரிசையில் முதலிடம் பிடித்த இவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம்.

உலக சதுரங்க மாஸ்டர்களில் மிகப்பிரபலமான இவர் ஐந்து முறை உலகச் சதுரங்க வீரர் என்ற பட்டத்தையும், மூன்றுமுறை அதிவேக சதுரங்க வீரர் என்ற பட்டத்தையும் ஐந்துமுறை உலக பிளிட் சதுரங்க வீரராகவும் வலம் வந்தவர்.!

இவ்வளவு பெரிய GRAND MASTER, பதினொன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு “தமிழ்” மாணவனால் தோற்கடிக்கப்படுவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டோம்.

அவ்வளவு ஏன் “மேக்னஸ் கார்ல்சன்” கூட அந்த போட்டிக்கு முன்புவரை நினைத்திருக்கமாட்டார். அதுவும் 2022 பிப்ரவரி 22, 2022 மே 20 ஆகிய இரு தினங்களில் நடைபெற்ற போட்டியில் இரண்டுமுறை மேக்னஸ் கார்ல்சனை வென்ற முதல் இளம் வயதுகொண்ட வீரன் என்ற பெருமையைப் பெற்றான் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்யானந்தா.

இவனது இந்த வெற்றி உலக நாடுகளையே இந்தியாவை நோக்கித் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது என்பதை மறுக்கவே முடியாது.!

சதுரங்கத்தை உலகிற்கே கற்றுத் தந்தவர்கள் நாங்கள்தான் என்று கர்வத்தோடு மார்தட்டிச் சொல்வதற்குக் காரணமாகியுள்ளான் பிரக்யானந்தா. இது எளிதாகக் கடந்து செல்லும் அளவுக்கு அவ்வளவு எளிதான காரியமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதை எழுதும்போதே “உடலெல்லாம் சிலிர்க்கிறது”. ஏனெனில் அத்தகு மகத்தான சாதனைக்குச் சொந்தக்காரன் பிரக்யானந்தா.

இவனை நமது மத்திய, மாநில அரசுகள் எப்படி கையாள்கின்றன, எந்த அளவுக்கு நிதி உதவிகள், பாராட்டுகள் செய்துள்ளன என்பதை அறியேன். எனினும் இவன் கொண்டாடப் படவேண்டியவன் என்பதில் யாதொரு மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.!

(என்ன? சதுரங்கத்தை உலகிற்கு நாம் கற்றுத் தந்தோமா? என்று சிலரின் மன எண்ணம் ஓட ஆரம்பித்திருக்கலாம்.! இதற்கு பதில் ஆம் என்பதே ஆகும்! தொடர்ந்து படியுங்கள்.!)

சதுர் + அங்கம் = சதுரங்கம் நான்கு பக்கங்களைக் கொண்ட ஒரு பலகையில் விளையாடப்படும் இந்த விளையாட்டானது போரை அடிப்படையாகக்கொண்ட ஒரு போர் விளையாட்டாகும்.!

தென் தமிழகத்தை எடுத்துக்கொண்டால் “வல் என் கிளவி தொழிற்பெயர் இயற்றே” என்ற தொல்காப்பிய வரிகளில் வரும் “வல்” என்ற சொல்லானது இன்றைய சதுரங்கத்தின் சங்ககாலப் பெயராகும். மேலும் “கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய” என்ற அகநானூற்றின் வரிகள் சங்ககாலத்தில் இவ்விளையாட்டு நிலைபெற்றிருந்ததைத் தெளிவாக உணர்த்துகிறது.

மேலும் “வல்லுப் பலகை” என்ற பெயர் கலித்தொகையில் வருவதால் பலகை போன்ற அமைப்பு செய்யப்பட்டு அதன்மீது இவ்விளையாட்டை விளையாடியுள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது..!

SPAIN நாட்டைச் சேர்ந்த “லூயிஸ் ராமிரேஸ்” என்பவர் (CHESS) சதுரங்கம் எப்படி விளையாட வேண்டும் என்று “Repetition of Love and the Art of Playing Chess” என்ற நூலை எழுதியபோது இந்த விளையாட்டு ஆரம்பித்த இடம் பாரததேசம் என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை 2019 ஆம் ஆண்டு “குஜராத்தின் லோதல்” பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சதுரங்கப்பலகை சிந்துசமவெளி நாகரிக காலத்தை சேர்ந்தது என்று அறிஞர்கள் குறிப்பிடுவதையும், கீழடியில் கிடைத்த சதுரங்க காய்களைக் கொண்டும் இந்த விளையாட்டு குறைந்தபட்சம் இன்றிலிருந்து 4500 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பாரத தேசத்தில் விளையாடப்பட்டது என்பதை உறுதி செய்யலாம்.!

சங்கப்புலவன் குன்றம்பூதனார் எழுதிய “வல்லுப்போர் வல்லாய்” என்ற பரிபாடல் வரிகள் முருகனை வல்லாட்டத்தில் சிறந்தவனே என்று புகழ்கிறது. “வல்லு” என்பது போரை மையமாகக்கொண்டு சங்ககாலத்தில் விளையாடப்பட்ட ஒரு விளையாட்டு என்பது இதன்மூலம் உறுதியாகிறது.

இந்த வல்லு விளையாட்டுதான் இன்று சதுரங்கம் என்ற பெயரில் உலகம் முழுவதும் விளையாடப்படுகிறது. இதுவே கீழடியிலும், சிந்துசமவெளி நாகரிக காலங்களிலும் விளையாடப்பட்டு இவ்விளையாட்டின் பிறப்பிடமாக “பாரதமே” முன் நிற்கிறது.

உலகமே உற்றுநோக்கும் விதமாக 44 ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று நேரு மைதானத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். மேலும் அரசியல் பிரபலங்களும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களும் பங்கேற்றனர்.

இந்த நன்னாளில் உலகம் போற்றும் இவ்விளையாட்டை உலகிற்கு அறிமுகம் செய்தது “பாரதவாசிகளாகிய” நாம்தான் என்பதில் பெருமைகொள்வோம்.!

நன்றி : இந்துவன் பதிவு

செஸ் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என நடிகர் ரஜினிகாந்த் தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு பிடித்த INDOOR GAME CHESS என பதிவிட்டு தான் விளையாடும் ஒரு செஸ் படத்தையும் பகிர்ந்துள்ளார் ரஜினிகாந்த்.

Super Star Rajinikanth wishes to Chess Olympiad 2022 event

காமெடி களம்.. ‘காட்டேரி’ தடம்.. சேலை கட்டிய வரலட்சுமி..; ஞானவேலின் நல்ல நேரம் ஆரம்பம்

காமெடி களம்.. ‘காட்டேரி’ தடம்.. சேலை கட்டிய வரலட்சுமி..; ஞானவேலின் நல்ல நேரம் ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரை உலகில் பேயை வைத்து ‘ யாமிருக்க பயமே’ எனும் நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இயக்குநர் டீகே இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘காட்டேரி’.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதனை முன்னிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா, இயக்குநர் டீகே, நாயகிகள் ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், நாயகன் வைபவ் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு உள்ளிட்ட படக்குழுவினரும், திரையுலகினரும் கலந்து கொண்டனர்.

இதில் நடிகை ஆத்மிகா பேசுகையில்…

“‘திரைத்துறையில் அறிமுகமான பிறகு இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். ஸ்டுடியோ கிரீன் எனும் பிரபலமான பட தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றுவது என்பது அனைத்து நடிகைகளின் விருப்பமாக இருந்தது.

பேய் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. இயக்குநர் டீகே இயக்கத்தில் வெளியான ‘யாமிருக்க பயமே’ படத்தை திரையரங்குகளில் பார்த்து, விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன்.

அவரது இயக்கத்தில், அதிலும் பேய் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன். பேயை வைத்து பயமுறுத்தாமல் சிரிக்க வைத்தவர் இயக்குநர் டீகே. அதனால் அவரது இயக்கத்தில் ‘காட்டேரி’ படத்தில் நடித்ததை சந்தோசமாக நினைக்கிறேன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது என்னை பற்றி இயக்குநர் பெருமிதமாக பேட்டி அளித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவரிடமிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். சினிமா மீது இயக்குநர் டீகேக்கு இருக்கும் காதல் அலாதியானது. இலங்கையில் படப்பிடிப்பு நடந்தபோது ஒவ்வொரு நாளும் திட்டமிட்டபடி எதுவும் நடைபெறாது.

ஏனெனில் பருவநிலை அப்படி. அதனால் அங்கு நடைபெற்ற படப்பிடிப்பு அனுபவம் மறக்க இயலாது” என்றார்.

இயக்குநர் டீகே பேசுகையில்…

” இந்த படத்தின் தொடக்க விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று என்னிடம் இருக்கிறது. அந்த புகைப்படத்தில் இருக்கும் இரண்டு திரையுலக பிரபலங்களுக்கு திருமணம் நடந்தது. அதன் பிறகு அவர்களுக்கு விவாகரத்தும் பெற்றுவிட்டார்கள்.

அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்ற மேலும் ஒரு திரையுலக பிரபலத்திற்கு திருமணமாகி, குழந்தை பிறந்து, அந்த குழந்தை கல்வி கற்க பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டது. அந்த குழந்தை, ‘மாமா.! காட்டேரி எப்போது வெளியாகும்?’ என என்னிடம் கேட்டிருக்கிறார்.

படத்தை தொடங்கும் முன் தயாரிப்பாளர் நான் கேட்க அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். ஆனால் அவர் ஒரு பட்ஜெட்டையும் நிர்ணயித்தார். படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் அனைவரும் எனக்கு புதிது. நடிகை ஆத்மிகா, நடிகர் வைபவ். ஆனால் நடிகர், நடிகைகளும், தொழில்நுட்பக் கலைஞர்களும் என்னுடைய எதிர்பார்ப்பிற்கு மேலாக தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கி படப்பிடிப்பை நிறைவு செய்தனர்.

நான் பலமுறை தயாரிப்பாளர் நான் ஞானவேல் ராஜாவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் சூழலை பக்குவமாக எடுத்துக் கூறி, என்னை சமாதானப்படுத்தி மகிழ்ச்சியுடன் காத்திருக்க வைத்தார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று ‘காட்டேரி’ வெளியாகி, ரசிகர்களை சந்தித்து, வெற்றி பெறும்.” என்றார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசுகையில்….

, ” சின்ன வயதில் நடித்த படம். இயக்குநர் டீகே இயக்கத்தில் வெளியான ‘யாமிருக்கே பயமே’ படத்தை பார்த்து, சிரித்து சிரித்து ரசித்திருக்கிறேன் அவரின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன், முழு கதையையும் கேட்டேன், பிடித்திருந்தது. நடிக்க ஒப்புக்கொண்டேன்.

படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்ற போது, ஒரே வாகனத்தில் நானும், ஆத்மிகாவும் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டோம். நகைச்சுவை படங்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக இருந்தது அந்த ஆசை ‘காட்டேரி’ படத்தில் நிறைவேறி இருக்கிறது.

படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் டீகே பேயாக உழைத்தார். படப்பிடிப்பு நடைபெற்ற சில இடங்களில் அங்கு நிலவும் பருவநிலை எங்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. இந்தப் படத்தில் என்னுடைய சகோதரியாக மான்சி என்றொரு நடிகை நடித்திருந்தார். அவரும் நேர்த்தியாக ஒத்துழைப்பு வழங்கினார்.” என்றார்.

நடிகர் வைபவ் பேசுகையில்…

,” தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்னிடம் பெரிய படம் செய்கிறோம் என்றார். ஆனால் இத்தனை நீண்ட காலம் ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. அது இந்த படத்தில் இயக்குநர் டீகே மூலம் நிறைவேறியது. .

நடிகை வரலட்சுமி தற்போது மெலிந்து விட்டார். அவருடைய பேச்சும் தற்போது நிதானமாக இருக்கிறது. ஆனால் படப்பிடிப்பு தொடக்கத்தில் அவர் வேகமாக பேசுவார். எனக்குப் புரியாது. அதனால் தற்போது பல விசயங்கள் மாற்றம் அடைந்திருக்கிறது.

இலங்கையில் படப்பிடிப்பு நடைபெற்ற தருணத்தில் இருள் சூழ்ந்த நேரத்தில் வரலட்சுமி ஒரு அடர் மஞ்சள் நிற சேலை உடுத்தி வந்தவுடன் பயந்துவிட்டேன்.

ஆகஸ்ட் 5ஆம் தேதி திரையரங்குகளில் ‘காட்டேரி’ படம் வெளியாகிறது. அனைவரும் கண்டு களித்து ஆதரவு தர வேண்டும்.” என்றார்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசுகையில்….

, ” காட்டேரி படத்துடன் 4 ஆண்டு கால அனுபவம் எனக்கிருக்கிறது. என்னுடைய மனைவிக்கு பிறகு நீண்ட செய்தியை அனுப்புவது இயக்குநர் டீகே தான். அதில் ‘உங்களுக்கு நல்ல நேரமே என்னுடைய படத்தின் மூலமாகத்தான் கிடைக்கும்’ என்பது கூட இருக்கும்.

ஆனால் அதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நல்ல நேரம் தொடங்கிய பிறகுதான் இந்த ‘காட்டேரி’ வெளியாகிறது.

இந்தப் படம் இயக்குநர் டீகே மற்றும் அவரது குழுவினரின் கடுமையான உழைப்புக்கு கிடைக்கும் பெரிய வெற்றி படமாக அமையும். டிஜிட்டல் தளங்கள் அறிமுகமாகி, பிரபலமான பிறகு ரசிகர்கள் நாங்கள் ஏன் திரையரங்கிற்கு சென்று படத்தை ரசிக்க வேண்டும்? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.

‘கே. ஜி. எஃப்’, ‘விக்ரம்’ போன்ற பிரம்மாண்டமான தயாரிப்புகள், பிரம்மாண்டமான படைப்புகள் மூலம் ரசிகர்களை திரையரங்கிற்கு வரவழைத்து, ரசிக்க வைத்தனர். அது போன்றதொரு சூழலை குறைவான பட்ஜெட்டில் தயாரான ‘காட்டேரி’யும் உருவாக்கி இருக்கிறது. இயக்குநர் டீகே திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வரவழைத்து ரசிக்கும் வகையிலான ஹாரர் காமெடி ஜானரில் ‘காட்டேரி’யை உருவாக்கி இருக்கிறார்.

அண்மைக்காலமாக பல பேய் படங்கள் வெளியாகி, சில வெற்றியையும், சில எதிர்பாராத தோல்வியையும் அளித்தது. ஆனால் இயக்குநர் டீகே அவர்களுடைய பிரத்யேக முத்திரையுடன் தயாராகி இருக்கும் ‘காட்டேரி’ ரசிகர்களை படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை உற்சாகமாக காண வைக்கும்.

‘காட்டேரி’ படத்தில் பணியாற்றிய இயக்குநர் டீகேவுக்கு பிறகு பொறுமையுடன் காத்திருந்த நடிகர் நடிகைகளுக்கு இந்தத் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் நடைபெற்ற படப்பிடிப்பிற்கு பல தடைகளைக் கடந்து ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் வெளியாகும் ‘காட்டேரி’ படத்தில் நடிகர்கள் வைபவ், கருணாகரன், நடிகைகள் சோனம் பஜ்வா, ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், மனாலீ, பொன்னம்பலம், ரவி மரியா, மைம் கோபி, ஜான் விஜய், லொள்ளு சபா மனோகர், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு எஸ். என். பிரசாத் இசையமைத்திருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

Varalakshmi and Vaibhav funny speech at Kaatteri press meet

ராணுவ வீரர்களின் காதலை சொல்லும் கடிதங்கள்.; ‘சீதா ராமம்’ பற்றி சிலாகிக்கும் துல்கர்

ராணுவ வீரர்களின் காதலை சொல்லும் கடிதங்கள்.; ‘சீதா ராமம்’ பற்றி சிலாகிக்கும் துல்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

துல்கர் சல்மான், நடிகை ரஷ்மிகா மந்தானா, பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், தெலுங்கு நடிகர் சுமந்த் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சீதா ராமம்’ எனும் காதலை மையப்படுத்திய திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது.

இதனை நடிகர் கார்த்தி தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார்.

சீதா ராமம் திரைப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

வைஜயந்தி மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சி அஸ்வினி தத் வழங்கும் ‘சீதா ராமம்’ படத்தை ஸ்வப்னா சினிமா எனும் பட நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை லைகா நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

‘சீதா ராமம்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் துல்கர் சல்மான், நாயகி மிருணாள் தாகூர், நடிகர் சுமந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் நடிகர் சுமந்த் பேசுகையில்…

” தெலுங்கு திரை உலகில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தாலும், ‘சீதா ராமம்’ படத்தில் தான் முதல் முதலாக அழுத்தமான குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இயக்குநர் ஹனு ராகவபுடி கதையை விவரித்ததும், பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இந்தப் படத்தை தமிழ் ரசிகர்களிடம் அறிமுகப்படுத்துவதற்காக முதன் முதலாக சென்னைக்கு வருகை தந்திருக்கிறேன். அன்பு காட்டிய ரசிகர்களுக்கு நன்றி. 60 காலகட்டத்திய காஷ்மீர் பின்னணியில் ராணுவ வீரர்களின் காதலை கவித்துவத்துடன் இயக்குநர் உருவாக்கி இருக்கிறார். ‘சீதா ராமம்’ போன்ற காதல் காவிய படைப்புகள் தற்போது உருவாவதில்லை. இதனால் இயக்குநர் கதையை விவரித்ததும், அவருடைய கற்பனையை நனவாக்க மகிழ்ச்சியுடன் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

துல்கர் சல்மான் போன்ற இளம் திறமையாளருடன் பங்களிப்பு வழங்கி இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாகும் ‘சீதா ராமம்’ படத்திற்கு ஆதரவு தாருங்கள்.” என்றார்.

நடிகை மிருணாள் தாகூர் பேசுகையில்,…

” ‘சீதா ராமம்’ படத்தில் சீதா மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகளில் நன்றாக நடனமாடியிருக்கிறேன் என அனைவரும் பாராட்டுகிறார்கள். இந்தப் பாராட்டிற்கு நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் தான் காரணம். காஷ்மீரில் அதிக குளிரில் கடினமாக உழைத்து, இந்த நாட்டியமாடும் காட்சிகளை உருவாக்கினார்.

என்னுடைய கலை உலக பயணத்தில் முதன் முதலாக அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அனைத்து இளம் நடிகைகளும் நடிக்க விரும்பும் கதாபாத்திரம் இது. துல்கர் சல்மான் போன்ற ரசிகைகள் அதிகம் கொண்டாடும் நடிகருடன் இணைந்து நடித்திருப்பது மறக்க இயலாதது. ” என்றார்.

நடிகர் துல்கர் சல்மான் பேசுகையில்…

” நான் இதற்கு முன்னர் நிறைய காதல் கதைகளில் நடித்திருந்தாலும், இதுபோன்ற வித்தியாசமான காதல் கதையில் நடித்ததில்லை. கதை நடக்கும் காலகட்டம், கதை களம், கதாபாத்திர பின்னணி என பல அம்சங்கள் சிறப்பாக இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

அதிலும் காதலை கடிதம் மூலம் வெளிப்படுத்தும் 1960 காலகட்டத்திய அனுபவங்கள் மிகச் சிறப்பாக ‘சீதா ராமம்’ படத்தில் இடம் பெற்றிருக்கிறது. தற்போதுள்ள தலைமுறைக்கு கடித இலக்கியம், கடிதம் எழுதுவது என்பதே புரியாத விசயம். படத்தில் இடம் பிடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பானவை.

இயக்குநர் எல்லா கதாபாத்திரங்களையும் நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார். கலைஞர்கள் அனைவரும் இயக்குநரின் கற்பனையை படைப்பாக உருவாக்க ஒத்துழைப்பு வழங்கினோம். ‘சீதா ராமம் ‘தமிழ் பதிப்பிலும் நானே பின்னணி பேசி இருக்கிறேன். ” என்றார்.

இதனிடையே ‘போரூற்றி எழுதிய காதல் கவிதை’ எனும் துணைத் தலைப்புடன் வெளியாகவிருக்கும் இந்த ‘சீதா ராமம்’ படத்தை தெலுங்கின் முன்னணி இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்க, பி. எஸ். வினோத் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனைப் படைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Sita Ramam will remind you Love Letters says Dulquer Salman

20 வருடங்களுக்கு முன்பே விஜய் படத்தில் இணைந்த ரோலக்ஸ் & டீனா

20 வருடங்களுக்கு முன்பே விஜய் படத்தில் இணைந்த ரோலக்ஸ் & டீனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த ‘விக்ரம்’ படம் கடந்த ஜூன் மாதம் ரிலீஸ் ஆனது.

இந்த படம் தமிழ் சினிமாவின் அனைத்து ரெக்கார்டுகளை முறியடித்து நல்ல வசூல் வேட்டை செய்துள்ளது.

தற்போது 50 நாட்களைக் கடந்துள்ள நிலையிலும் இன்னும் சில தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் சிறிய கேரக்டரில் நடித்த நடிகர் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டரும் வசந்தியின் டீனா என்ற கேரக்டரும் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது.

இந்த இரண்டு கேரக்டர்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இவர்கள் இருவரும் ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு இணைந்து நடித்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய் சூர்யா இணைந்து நடித்த ‘ப்ரெண்ட்ஸ்’ படத்தில் ருக்கு ருக்கு… என்ற பாடலுக்கு விஜய் சூர்யா தேவயாணியுடன் டீனா இணைந்து ஆடும் பட காட்சிகளை ரசிகர்கள் இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ரோலக்ஸ் & டீனா

20 years ago, Rolex and Tina teamed up in Vijay’s film

வரலாற்று உண்மை : சிவகார்த்திகேயன் படத்தை தொடர்ந்து உதயநிதி படத்தை தயாரிக்கும் கமல்

வரலாற்று உண்மை : சிவகார்த்திகேயன் படத்தை தொடர்ந்து உதயநிதி படத்தை தயாரிக்கும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் ஆர்வம் காட்டி வந்த நடிகர் கமல்ஹாசன் தற்போது மீண்டும் சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார்.

விரைவில் மகேஷ் நாராயணன் இயக்க உள்ள படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன்.

நடிப்பு மட்டும் என்றும் இல்லாமல் தன் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக திரைப்படங்களை அடுத்தடுத்து தயாரித்து வருகிறார்.

இவர் தற்போது தயாரித்து வரும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது நிறுவனத்தின் 54வது படைப்பான புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை கமலுடன் இணைந்து மகேந்திரன் தயாரிக்கிறார்.

பல புதிய முயற்சியுடன் கூடிய வெற்றி படங்களை தயாரித்த, உலகநாயகன் திரு.கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனமும் தயாரிப்பாளர் திரு.ஆர்.மகேந்திரனும் மீண்டும் ஒரு வெற்றி கூட்டணியில் இணைந்து தயாரிக்க இருக்கும் 54வது திரைப்படத்தின் கதாநாயகனாக திரு. உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருக்கிறார்.

இது ஒரு உண்மை வரலாற்று நிகழ்வினை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். பிரம்மாண்டமாகத் தயாராகும் இந்தப் படம் குறித்த பிற விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

கடந்த ஜூன் மாதம் வெளியான கமலின் ‘விக்ரம்’ பட விநியோக உரிமையை உதயநிதி பெற்றிருந்தார்.

அதுபோல பல ஆண்டுகளுக்கு முன் கமல் நடிப்பில் வெளியான ‘மன்மதன் அம்பு, படத்தை உதயநிதி தன் ரெட் ஜெயன்ட் மூவி சார்பாக தயாரித்து வெளியிட்டிருந்தார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Kamal Haasan to produce Udhayanidhi Stalin’s next film

அமீர்கான் – உதயநிதி கைகோர்த்த ‘லால் சிங் சத்தா’ தமிழ் டிரைலர் ரிலீஸ்

அமீர்கான் – உதயநிதி கைகோர்த்த ‘லால் சிங் சத்தா’ தமிழ் டிரைலர் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமீர்கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்திற்கான தமிழ் பதிப்பின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் ‘லால் சிங் சத்தா’ படத்தை ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் வெளியாகிறது.

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகரான அமீர்கான், அவரது கனவு படைப்பான ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்தை, இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் சென்றடைய செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார்.

அதனடிப்படையில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ‘லால் சிங் சத்தா’ படத்தை தமிழில் வழங்குவதுடன், தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், தொடக்கத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு பொருத்தமான மற்றும் முக்கியமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது.

இந்த பட்டியலில் அமீர்கானின் ‘ லால் சிங் சத்தா’வும் இணைந்திருக்கிறது. ஆகஸ்ட் 11 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான முன்னோட்டம் தற்போது வெளியாகியிருக்கிறது.

இதன் மூலம் நடிகர் அமீர்கான் தமிழ் ரசிகர்களிடத்திலும் நட்சத்திர நடிகராக அறிமுகமாகி, பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.

அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தின் முன்னோட்டம் இந்தியில் வெளியாகி, சாதனை படைத்து வருகிறது.

அனைவரின் உலக அளவிலான ரசிகர்கள், அவரது கதாப்பாத்திரத்தை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இப்படத்தின் பாடல்களும் வெளியாகி, இணையத்தில் பெரிய அதிர்வை ஏற்படுத்தி, ட்ரெண்டிங்கில் தொடர்ந்து இருக்கிறது. மேலும் படக்குழுவினர், படத்தின் ஆத்மார்த்தமான உணர்வை தாங்கியிருக்கும் பாடல்களையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த இசையில் பங்களிப்பை வழங்கியிருக்கும் பாடலாசிரியர்கள், இசைக்கலைஞர்கள், இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு இன்று பொதுவெளியில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

அமீர்கான் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கிரண் ராவ் மற்றும் வயாகம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘லால் சிங் சத்தா’ படத்தில், அமீர்கானுடன் கரீனா கபூர் கான், மோனா சிங், சைதன்யா அக்கினேனி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் ஆங்கிலத்தில் வெளியான ‘ஃபாரஸ்ட் கெம்ப்’ எனும் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

The Tamil Trailer of Aamir Khan starrer Laal Singh Chaddha is here

More Articles
Follows