தேர்தல் முடிந்தது.. பசுத்தோல் உதிர்ந்தது.. கோடிகளை வைச்சு சரிக்கட்டுங்க..; மோடியை சாடிய கமல்

தேர்தல் முடிந்தது.. பசுத்தோல் உதிர்ந்தது.. கோடிகளை வைச்சு சரிக்கட்டுங்க..; மோடியை சாடிய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஓரிரு தினங்களில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை அதிகளவில் உயர்ந்துள்ளன.

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ 50 உயர்ந்துள்ளது. 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது. பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 80 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது..

‛மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்தன. இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது.

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பார்கள். ஆனால் அது கீழே இறங்கியபோதும் விலையைக் குறைக்கவில்லை இவர்கள்.

அதில் சேர்த்த லட்சம் கோடிகளை வைத்து இப்போது சரிக்கட்டலாமே…’

என கமல்ஹாசன் கடுமையாக மத்திய அரசு பாஐக.வை விமர்சித்துள்ளார்.

5 மாநில சட்டமன்ற தேர்தலுக்காக தான் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan criticises increase in prices of fuel and LPG

ரூ 21 கோடி தேவை.. ரஜினி-கமலை சந்திப்போம்..; நாசர் விஷால் கார்த்தி அறிவிப்பு

ரூ 21 கோடி தேவை.. ரஜினி-கமலை சந்திப்போம்..; நாசர் விஷால் கார்த்தி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நேற்று சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகளிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

சில படங்களுக்கு பிரச்சனை வரும் போது நடிகர் சங்கம் சார்பில் அவர்களுக்கு உதவ திட்டம் உள்ளதா ?

அதற்கு பதிலளித்த நடிகர் கார்த்தி…

“தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்திற்கு சில அமைப்புகள் மூலம் பிரச்சினை வரும்போது சட்டப்படியாக நடிகர் சங்கம் உதவும்.

நடிகர் சங்கத்திற்கான கட்டடம் பணிகள் மூன்று மாதத்தில் தொடங்கும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றியடைந்த நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

அனைவருக்கும் 97 வயதாகும் நடிகர் சங்கத்தின் மூத்த கலைஞர் மணி அய்யர், மற்றும் 95 வயதாகும் ஊட்டி மணி இருவரும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்கள்.

அதற்கு முன் நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன் உள்ளிட்ட செய்தியாளர்களை சந்தித்தனர்.

அதில் பேசிய நடிகர் நாசர்…

“இந்த வெற்றியின் மூலம் நாங்கள் எடுத்துக்கொண்ட பொறுப்பு மேலும் கூடுதலாகியுள்ளது என தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய விஷால்…

நடிகர் சங்க தேர்தலுக்கு ஆகும் செலவை கட்டடத்திற்கு பயன்படுத்த நாங்கள் நினைத்தோம். அத்துடன் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் எனவும் முயற்சித்தோம். ஆனால் எதிரணியினர் இதை போட்டியாக பார்த்தனர்.

தேர்தல் முடிந்து 3 ஆண்டுகள் கழித்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது வேறு எங்கும் நடைபெறவில்லை. இதுதான் முதல் முறை. தற்போது நாங்கள் வெற்றி அடைந்துள்ளோம். திரும்ப திரும்ப நாங்கள் சொல்வது ஒன்று தான்,
நாடக நடிகர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக தான் நாங்கள் எல்லோரும் போராடுகிறோம்.

அது நல்லபடியாக நடக்கும் என விஷால் தெரிவித்தார். அத்துடன் நடிகர் சங்க கட்டடத்தை அப்போதைய விட தற்போதைய நிலவரப்படி இருபத்தி ஒரு கோடி ரூபாய் தேவைப்படுகிறது.

30% விலை உயர்ந்துள்ளது. அதற்கான நிதி திரட்டும் வேலையில் இறங்க உள்ளோம்.

நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்டவர்கள் அனைவரையும் நேரில் சந்திப்போம். இந்த நேரத்தின் இக்கட்டான காலகட்டத்தில் தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன், உறுதுணையாக இருந்த வழக்கறிஞர் கிருஷ்ணா மற்றும் நடிகர் சங்கத்தின் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் விஷால் கூறினார்.

நடிகர் கார்த்தி..

நாங்கள் செய்த வேலைக்கு தேர்தலை நடக்காது போட்டியின்றி தேர்வு ஆகும் என நினைத்து இருந்தோம். ஆனால் தேர்தல் நடைபெற்று தற்போது வெற்றி அடைந்து உள்ளோம்.

தற்போதைய சூழலில் நிதி திரட்டுவது என்பது சவாலான பணியாக இருக்கிறது. நிறுத்தப்பட்ட வேலைகள் மீண்டும் தொடங்க வேண்டும் அதற்கு திட்டமிடுதல் வேண்டும் எனவே கட்டட வேலைகளை மூன்று மாதத்திற்குள் தொடங்க உள்ளோம் என கூறினார்.

அத்துடன் நடிகர் சங்கத்தில் தற்போது கடன்கள் எதுவும் கிடையாது. நிதிகள் அனைத்தும் கட்டடத்திற்கு செலவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இறுதியாக பேசிய பூச்சி முருகன் நடிகர் சங்கத்திற்கு பையனூரில் அரசு ஏழு ஏக்கர் நிலம் வழங்கி உள்ளது அதில் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தனி மண்டபம் கட்டி அவர்கள் தங்குவதற்கு வழிவகை செய்யப்படும் என தெரிவித்தார்.

தணிக்கை செய்யப்பட்ட படத்திற்கு அமைப்புகள் மூலம் பிரச்சினை வரும்போது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கம் உதவுவது அவசியம் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

Rock fort தயாரிப்பாளர் முருகானந்தம் அவர்கள் நடிகர் சங்கத்திற்கான கட்டிட பணிகளுக்காக ₹5 லட்சம் காசோலை நன்கொடை அளித்தார்.

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக ₹10 ஆயிரம் காசோலை வழங்கப் பட்டது. அத்துடன்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அனைவர் முன்பாகவும் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

புதிய நிர்வாகிகளுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம், மற்றும் பலர் சால்வே அணிவித்து மரியாதை செய்தனர்.

Nadigar Sangam team wants to meet with Rajinikanth and Kamal Haasan

JUST IN ‘ஜென்டில்மேன்2’ பட ஹீரோயின் நயன்தாரா என அறிவித்தார் K.T. குஞ்சுமோன்

JUST IN ‘ஜென்டில்மேன்2’ பட ஹீரோயின் நயன்தாரா என அறிவித்தார் K.T. குஞ்சுமோன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

#ஜென்டில்மேன்2
பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் படத்தில் நயன்தாரா சக்ரவர்த்தி கதாநாயகியாக அறிமுகம்.

மெகா தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்ட படம் ‘ஜென்டில்மேன்2 ‘.

இவர் தனது *ஜென்டில்மேன், காதலன்* படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர்.

தற்போது ‘ஜென்டில்மேன்2 ‘ என்ற பிரம்மாண்ட படத்தை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

ஏற்கனவே இப்படத்தின் இசை அமைப்பாளராக கீரவாணியை அறிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களாக திரை உலகிலும் சமூக வலை தளங்களிலும் இப்படத்தின் கதநாயகி யார்..! நயன்தாராவா? என்று கேள்வி குறியுடன் சர்ச்சைகள் பரவலாக இருந்தது .

தற்போது அந்த சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைத்து ஹீரோயின் பெயரை அறிவித்துள்ளார் குஞ்சுமோன்.

சூப்பர் ஸ்டார்களான ரஜனி, மம்முட்டி ,மோகன்லால் ஆகியோருடன் முப்பதுக்கும் அதிகமான மலையாளம், தெலுங்கு, தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்ற கேரளாவை சேர்ந்த நயன்தாரா சக்ரவர்த்தி ( இது இவரது சொந்த பெயர் )
தான் அந்த அறிமுக கதாநாயகி.

இன்னொரு கதாநாயகியும் படத்தில் உள்ளதாகவும் அது யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சஸ்பென்ஸ் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன்.

அது யார் என்று ஆவலோடு காத்திருக்கிறது திரை உலகமும் ரசிகர்களும். மேலும் படத்தின் இயக்குனர், ஹீரோ, மற்றும் தொழி்நுட்ப கலைஞர்கள் யார் என்ற அறிவிப்புகளும் விரைவில் வெளிவரும்.

KT Kunjumon announces Nayathara will be lead in Gentleman 2

ஜூனியர் என்.டி.ஆருக்கு அபராதம் விதித்த போலீஸார்..; அடங்காத RRR நடிகர்

ஜூனியர் என்.டி.ஆருக்கு அபராதம் விதித்த போலீஸார்..; அடங்காத RRR நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சொகுசு கார் கண்ணாடிகளில் கருப்பு கலர் ஃபிலிம் ஸ்டிக்கர் (டின்ட் கிளாஸ்) ஒட்டப்பட்டுள்ளதை நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால் இந்த ஸ்டிக்கரை ஒட்டுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் கண்ணாடிகளில், கருப்பு பிலிம் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது.

அவ்வாறாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதும் வழக்கம்.

ஆனாலும் சில பிரபலங்கள் கருப்பு நிற டின்ட் ஸ்டிக்கர்களை கார்களில் ஒட்டி விதிமுறைகளை மீறி வருகின்றனர்.

இதை தடுக்க போக்குவரத்து போலீஸார் சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.

இந்த நிலையில் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் போக்குவரத்து போலீஸார் சோதனையில் ஈடுபட்ட போது..

நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக அளவில் கருப்பு பிலிம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார் ஒன்றை போலீஸ் சோதனை செய்தனர்.

அது பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு சொந்தமான கார் என்பது தெரியவந்தது.

ஆனால், ஜூனியர் என்.டி.ஆர். அந்த காரில் இல்லை. அவர் மகனுடன் சிலர் காரில் இருந்துள்ளனர்.

விதிகளை மீறி கருப்பு நிற டின்ட் ஒட்டியதாகக் கூறி அபராதம் விதித்தனர்.

மேலும் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை நீக்கிவிட்டு அனுப்பி வைத்தனர்.

இதே ஸ்டிக்கர் பிரச்சினைக்காக, ஜூனியர் என்.டி.ஆருக்கு ஏற்கெனவே அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

RRR actor Junior NTR fined by Andhra Police

ஒரே இளையராஜா-தான்.. ஒரே பாரதிராஜா-தான்.; படம் பார்க்குறவங்க கஷ்டப்படக்கூடாது.. – இசைஞானி

ஒரே இளையராஜா-தான்.. ஒரே பாரதிராஜா-தான்.; படம் பார்க்குறவங்க கஷ்டப்படக்கூடாது.. – இசைஞானி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே. கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காதல் செய்’.

சுபாஷ் சந்திரபோஸ், நேகா, மனோபாலா, சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைக்க மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கானா வினோதன், குப்பன் கணேசன் தயாரித்துள்ளனர்.

இதன் பாடல் & டீசர் வெளியீட்டு விழா, சென்னையிலுள்ள இளையராஜா ஸ்டூடியோவில் நேற்று நடந்தது.

படக்குழுவினருடன் இயக்குநர் பாரதிராஜா, பி.வாசு உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் பாரதிராஜா, இளையராஜா இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்டார்கள்.

இளையராஜா பேசும்போது…

“`எதிர்கால இளையராஜாக்களே, வருங்கால பாரதிராஜாக்களே என்று பேசுகிறார்கள். ஆனால் ஒரே ஒரு பாரதிராஜா, ஒரே இளையராஜாதான்.

எல்லா காலத்துக்கும் பாரதிராஜா ஒருவர் தான். பி.வாசு, இளையராஜா ஒருவர் தான்.

எப்படி சூரியன் மாதிரி இன்னொன்று வருவதில்லையோ. அதுபோல ஒருத்தர போல இன்னொருத்தன் வருவதில்லை.

இந்தப் படத்தை எடுக்கக் கஷ்டப்பட்டோம் என்றார்கள். படத்தை எடுக்க கஷ்டப்படலாம். படத்தை பார்ப்பவர்கள்தான் கஷ்டப்படக் கூடாது.

இந்தப் படத்துக்கு ‘காதல் செய்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். நான் ஏற்கனவே காதலித்துக் கொண்டிருக்கிறேன். எதை காதலிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கேன்”

இந்த படத்தோட விழாவுக்கு இவளோ பேர் வந்து ஆதரவு கொடுத்திருக்கீங்க. 16 வயதினிலே பண்ணும்போது இவ்ளோ கேமரா கிடையாது. இவ்ளோ மீடியா கிடையாது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்.” என்றார் இளையராஜா.

பாரதிராஜா பேசும்போது,

“கலைஞர்கள், எழுத்தாளர்களுக்கு கண்டிப்பாகக் காதல் இருந்திருக்கும். இளையராஜாவுக்கும் இருந்திருக்கும். அது இல்லாவிட்டால் உலகம் இயங்காது.

காதல்தான் எல்லாருடைய மனதை வளப்படுத்துகிறது.

இந்தியாவில், தமிழகத்தின் பெரிய சொத்துகளில் ஒன்று இளையராஜா”

என்று பேசினார் பாரதிராஜா.

Ilaiyaraaja speech at Kadhal Sei audio launch

‘அஜித் 62’ ஆரம்பம்.; நயன்தாரா விக்னேஷ் சிவனை கைது செய்ய போலீசில் புகார்

‘அஜித் 62’ ஆரம்பம்.; நயன்தாரா விக்னேஷ் சிவனை கைது செய்ய போலீசில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையில் உள்ள சாலிகிராமம் என்ற பகுதியைச் சேர்ந்தவ சமூக ஆர்வலர் கண்ணன்.

இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நயன்தாராவின் தயாரிப்பு கம்பெனி குறித்து புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில்…

அஜித் நடிப்பில், விக்னேஷ் சிவன், ‘AK62’ என்ற படத்தை இயக்க உள்ளார்.

இந்த அறிவிப்பால் விக்னேஷ் சிவன் வீட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளார். இதில் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களும் பங்கேற்றுள்ளனர்.

விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் காதலித்து வருகின்றனர்.

இவர்கள் ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளனர்.

தமிழக போலீஸ் அதிகாரிகள் ரவுடிகளை ஒழிக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ஆனால், சமூக பொறுப்பின்றி, இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும், ரவுடிகளை ஊக்கப்படுத்தும் விதமாக, ரவுடி பிக்சர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருப்பது, பொது மக்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

எனவே ரவுடி பிக்சர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தை தடை செய்ய வேண்டும்.

இருவர் மீதும், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவை கைது செய்ய வேண்டும்.”

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

‘AK62’ என்ற படத்தை லைகா தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்க நயன்தாரா நாயகியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Case filed against Nayanthara and Vignesh Shivan

More Articles
Follows