தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’.
இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
“மாமன்னன்” படத்தின் First Look போஸ்டர் இன்று வெளியாகி பலரது பாராட்டைப் பெற்று வருகிறது.
முன்னதாக இப்படத்தின் First Look போஸ்டர் மே 1 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் சமூக வலைதளங்களில் போஸ்டர் கசிந்ததால் படக்குழுவினர் நேற்றே இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டனர்.
இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் “மாமன்னன்” திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று மே 1ம் தேதி மற்றொரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் உதயநிதி பகத்பாசில் வடிவேலு ஆகியோர் கெத்தாக போஸ் கொடுக்கின்றனர்.
நேற்று வெளியான போஸ்டரில் உதயநிதி கையில் வீச்சருவா வைத்திருக்க வடிவேலு துப்பாக்கி வைத்திருப்பதாக ஆக்சன் போஸ்டர் வெளியானது.
மாமன்னன் படத்தை ஜூன் மாதம் வெளியிட உதயநிதி முடிவெடுத்து அதை போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.. ஆனால் தேதியை குறிப்பிடவில்லை.
Udhayanidhi’s Maamannan movie first look poster release