ஹிந்தியை தமிழாக்கும் போனி கபூர்; அஜித்தை அடுத்து கை கொடுக்கும் உதயநிதி

boney kapoor udhayanidhiவினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்திருந்தார் போனி கபூர்.

இந்தியில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தை தான் தமிழில் ரீமேக் செய்திருந்தனர்.

தற்போது அஜித் நடிப்பில் வலிமை படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது மற்றொரு சூப்பர் ஹிட்டான ஹிந்தி படத்தையும் தமிழுக்கு கொண்டு வருகிறார் போனி கபூர்.

இந்தியில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஆர்ட்டிகிள் 15. அயுஷ்மன் குரானா நடித்திருந்த இந்த படத்தில் ஏழைச்சிறுமிகள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக கதை இருக்கும.

அந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிக்கு சாதி தடங்கல்கள் வருவதும், அதனை அவர் முறியடிப்பதுமே படமாக உருவாக்கப்பட்டிருக்கும்.

இந்த ஆர்ட்டிகிள் 15 பட தமிழ் ரீமேக்கில் உதயநிதி நடிக்க போனி கபூர் தயாரிக்க அருண் ராஜா காமராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படம் ரீமேக் தொடர்பான செய்தியை நாம் 2 மாதங்களுக்கு முன்பே வெளியிட்டு இருந்தோம்.

அதற்கான லிங்க் இதோ…

https://www.filmistreet.com/cinema-news/ajith-movie-producer-team-up-with-arunraja-kamaraj-and-udhayanidhi/

Overall Rating : Not available

Latest Post