தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘வலிமை’ படத்தை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணி ‘AK61’ படத்திற்காக இணைந்துள்ளது.
வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தனது 61வது படத்தில் நடித்து வருகிறார் அஜித்.
இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.
பின்னர் சிறிய இடைவெளி விடப்பட்டது. அப்போதுதான் சில வெளிநாடுகளுக்கும் சென்று வந்தார். இத்துடன் திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியிலும் கலந்துக் கொண்டு விருதுகளை வென்றார் நடிகர் அஜித்.
தற்போது மீண்டும் AK61 சூட்டிங் தொடங்கியுள்ளது. எனவே தற்போது விசாகப்பட்டினம் சென்றுள்ளார்.
அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் அஜித்தின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அதில்… பேருந்தில் கம்பியை பிடித்துக் கொண்டு நின்று கொண்டே அஜித் பயணம் செய்கிறார்.
அவர் சூட்டிங் தளத்திற்கு செல்லும்போது பயணம் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
அஜித்தின் பயணத்தை ரசிகர் ஒருவர் படம் எடுத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் எளிமையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
https://www.youtube.com/shorts/UnK8zReKZ9c
Ajith traveled by bus to Visakhapatnam