தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்தை இதுவரை ஆண்ட திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள் தமிழகத்தை சீரழித்துவிட்டதாக குற்றம்சாட்டி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார் கமல்ஹாசன்.
தற்போது அதே திமுக உடன் மநீம கட்சி கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
டிசம்பர் 13 ஆம் தேதி தன் தேர்தல் பிரச்சாரத்தை கமல் மதுரையில் தொடங்கினார்.
அவர் மதுரை செல்வதற்கு முன்பே உதயநிதியை சந்தித்து பேசியதாக தற்போது தெரியவந்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஓர் தனியார் இடத்தில் சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைவது குறித்த பேச்சுவார்த்தைக்கான தொடக்கம் இது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2011ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான ‘மன்மதன் அம்பு’ படத்தை தயாரித்தவர் உதயநிதி என்பது குறிப்பிடத்தக்கது.
Udhayanidhi stalin met Kamal Haasan recently?