‘அஜித்திடம் மீண்டும் கேட்க மாட்டேன். அவரே சொல்லட்டும்..’ உதயநிதி

ajith udhyanidhi stalinகமல் நடித்த மன்மதன் அம்பு, விஜய் நடித்த குருவி, சூர்யா நடித்த ஆதவன் மற்றும் ஏழாம் அறிவு உள்ளிட்ட படங்களை தன் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்தவர் உதயநிதி ஸ்டாலின்.

தமிழில் முன்னணி தயாரிப்பாளரான இவர் இதுவரை ரஜினி, அஜித், விக்ரம் படங்களை தயாரிக்கவில்லை.

அஜித் படத்தை தயாரிப்பது எப்போது? என்ற கேள்விக்கு இவர் சமீபத்திய பேட்டியில் பதில் அளித்துள்ளதாவது…

ஐந்து ஆண்டுகளுக்கு முன் அஜித்துடன் இதுபற்றி பேசியிருக்கிறேன். அவரும் பார்க்கலாம். என்றார். அதன்பின்னர் அது பற்றிய பேச்சு இல்லை.

ஒரு வருடத்திற்கு முன்பு கூட ஒரு புரொஜக்ட் வந்தது. அவருக்கு தெரியப்படுத்தினேன்.

அதற்காக அடிக்கடி போய் மீண்டும் மீண்டும் கேட்கமாட்டேன். படம் செய்யலாம் என்று அவர் அழைத்தால் நான் தயார்.” என்று தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் அஜித்-ஏஆர் முருகதாஸ்-உதயநிதி ஆகியோர் இணைய வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது.

I Wont ask Ajiths Call Sheet again and again says Udhayanidhi Stalin

Overall Rating : Not available

Latest Post