தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயி த்ரிஷா ஆடும் *பரமபதம் விளையாட்டு*

தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயி த்ரிஷா ஆடும் *பரமபதம் விளையாட்டு*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Trishas Action Thriller Paramapadham Vilaiyattu Nears Wrap Up Momentத்ரிஷாவின் பரமபதம் விளையாட்டு திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. படத்தின் முதல் பார்வை போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயி என்று பெயர் சூட்டப்பட்ட த்ரிஷா நாயகியாக நடிக்கும் திரைப்படம் ”பரமபதம் விளையாட்டு“.

இப்படத்தை திருஞானம் இயக்குகிறார். த்ரிஷா மருத்துவராகவும், மருத்துவரின் தாயாகவும் நடிக்கிறார்.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஏற்காட்டில் உள்ள ராபர்ட் கிளைவ் மேன்சனில் வைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தை பற்றி இயக்குனர் திருஞானம் கூறும் போது…

இதை போன்ற ஒரு கதையில் த்ரிஷா முதன்முதலாக நடிக்கிறார். இதை நான் மிகைப்படுத்தி கூறவில்லை அதான் உண்மை. த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படங்களில் இது புதுமையான, முக்கியமான படமாக இருக்கும்.
த்ரிஷா இப்படத்தில் நடிப்பது தனக்கு சிறப்பாக இருக்கும் என்று நினைத்தார்.

இந்த கதாபாத்திரத்தை மிகவும் விரும்பினார். படப்பிடிப்பில் கடினமான காட்சியில் த்ரிஷா ஒரே டேக்கில் நடித்தார். படத்தில் நிறைய ட்விஸ்ட் மற்றும் திருப்பங்கள் இருக்கும் ரசிகர்களுக்கு அது மிகவும் பிடிக்கும் என்றார் இயக்குனர் திருஞானம்.

படத்தில் நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பிரமாண்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் ஒளிப்பதிவாளர் R D ராஜசேகர் இப்படத்தின் கதையை கேட்டு இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்வதற்காக மற்ற படங்களின் தேதியை மாற்றிவிட்டு வந்துள்ளார்.

இப்படத்தை 24 Hrs நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் முதல் பார்வை இம்மாதத்தில் வெளியாகும்.

Trishas Action Thriller Paramapadham Vilaiyattu Nears Wrap Up Moment

சிம்புக்கு ஜோடியாகி தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் டயானா எரப்பா

சிம்புக்கு ஜோடியாகி தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் டயானா எரப்பா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

International Model Dayana Erappa is setting her foot in Indian Cinemaஇயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் “செக்க சிவந்த வானம்” படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருப்பவர் நடிகை டயானா எரப்பா.

கர்நாடகத்திலுள்ள கூர்க்கில் பிறந்த இவர் 2011ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் முதல் 10 போட்டியாளர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

பின்பு 2012 இல், உலகின் மிகவும் மதிப்புமிக்க சர்வதேச மாடலிங் போட்டியான ஷாங்காய் எலைட் மாடல் லுக் போட்டியில் இந்திய நாட்டின் சார்பாக பங்கேற்றார்.

பின்பு கிங்ஃபிஷர் காலெண்டர் 2015 மற்றும் 2017, லாக்மே பேஷன் வீக், அமேசான் பேஷன் வீக், கௌச்சர் வீக் போன்ற பிரசதிபெற்ற பேஷன் பத்திரிக்கைகளில் இடம்பெற்றார் நடிகை டயானா எரப்பா. இவரது எளிமையான அழகு, நளினம் மற்றும் நடையழகு ஆகியவை அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி பேஷன் பத்திரிக்கைகள் இவரை ஒரு இளவரசியாக கொண்டாடின.

மேலும் சர்வதேச பேஷன் பத்திரிக்கைகளான வோக், எல்லி, ஹார்ப்பர்ஸ் பஜார், காஸ்மோபொலிட்டன் மற்றும் ஜி.கியூ போன்றவைகளில் இவரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

தருண் தஹிலியானி, மனிஷ் மல்ஹோத்ரா, அஞ்சு மோடி, சாந்தனு நிக்கில், கவுராவ் குப்தா, சுனீத் வர்மா, அனிதா டோங்ரே, பாயல் சிங்கல், மோனிஷா ஜெய்சிங், லைப் ஸ்டைல், பீமா ஜூவல்லரி மற்றும் ஆஸ்வா ஜூவல்லரி உள்ளிட்ட பல முன்னனி டிசைனர்களின் விளம்பர மாடலாக நடித்துள்ளார்.

பிரபல மாடலான டயானா எரப்பா, பிரபல இயக்குனரான மணிரத்னத்தின் படத்தில் நடித்திருப்பது, சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

International Model Dayana Erappa is setting her foot in Indian Cinema

ரஜினி-ஷங்கர் கூட்டணியின் *2.0* டீசர் 3 கோடி பார்வையாளர்களுடன் சாதனை..!

ரஜினி-ஷங்கர் கூட்டணியின் *2.0* டீசர் 3 கோடி பார்வையாளர்களுடன் சாதனை..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2 point 0 teaserரஜினி, ஷங்கர் கூட்டணியில் உருவாகி இந்தியாவின் கவனத்தை திருப்பியுள்ள படம் ‘2.0’.

வருகிற நவம்பர் 29-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது.

இப்படத்தின் டீஸர் செப்டம்பர் 13ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியானது.

2D தவிர 3D தொழில்நுட்பத்திலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியது.

இந்த டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இது வெளியான 24 மணிநேரத்தில் 1 கோடிக்கும் மேற்பட்டவர்களின் பார்வையிடல்கள் கிடைத்து பெரும் சாதனை படைத்துள்ளது.

ஹிந்தியில் வெளியாகிய டீஸரும் 24 மணிநேரத்தில் 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் ‘2.0’ டீஸரை பார்வையிட்டுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளும் சேர்த்து ‘2.0’ டீஸருக்கு 30 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையிடல்கள் கிடைத்திருப்பதால் இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

அதாவது 3 கோடிக்கும் அதிகமான மக்கள் இதை பார்த்துள்ளனர்.

இதுவரை ரஜினி நடிப்பில் வெளியான கபாலி, காலா படங்களின் டீஸர் படைத்த சாதனைகளை இப்போது ‘2.0’ டீஸர் முறியடித்துள்ளது.

இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படத்தின் டீஸருக்கு 24 மணிநேரத்தில் 1 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்தனர்.

ராஜமௌலியின் ‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ ஆகிய படங்களின் டீஸர்களும் உலக அளவில் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வின்னர் ஆரவ் *ராஜபீமா* படத்தில் ஹீரோவாகிறார்.!

பிக்பாஸ் வின்னர் ஆரவ் *ராஜபீமா* படத்தில் ஹீரோவாகிறார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raja Bheemaகமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் வின்னர் பட்டம் பெற்றவர் ஆரவ்.

இவர் ‘சைத்தான்’ படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்நிலையில், ஆரவ் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

சுரபி ஃபிலிம்ஸ் எஸ்.மோகன் தயாரிப்பில் நரேஷ் சம்பத் இயக்கவுள்ள இப்படத்திற்கு ‘ராஜபீமா’ என்று பெயரிட்டுள்ளனர்.

‘கருந்தேள் ராஜேஷ்’ என்பவர் இப்படத்திற்கு திரைக்கதை அமைத்து வசனம் எழுதியுள்ளார்.

இப்படத்திற்கு எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்ய, ‘ சைமன் கிஷ் இசையமைக்கிறார். எடிட்டிங் கோபி கிருஷ்ணா.

கும்கி பட வரிசையில் யானையை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது.

அக்டோபர் 5ல் ஆங்கிலம் & தமிழிலும் ரிலீஸாகிறது *வெனம் – Venom*

அக்டோபர் 5ல் ஆங்கிலம் & தமிழிலும் ரிலீஸாகிறது *வெனம் – Venom*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Venom movie releasing on both Tamil and English languages on 5th Octoberசூப்பர் ஹீரோக்களைப் போல அம்மாதிரியான விஞ்ஞான நவீனங்களில் உலா வரும் anti-சூப்பர் ஹீரோக்களும் (எதிர்மறையான வில்லன் வேடம்!) இணையான மவுசு உண்டு.

மார்வெல் (Marvel) காமிக்ஸ் கதாபாத்திரமொன்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பது தான், எடி ப்ரோக் என்கிற இப்படத்தின் பிரதான கதாபாத்திரம். சோனி மார்வெல் யூனிவர்சின் முதல் (Sony Marvel Universe) படைப்பிது!

ஸ்பைடர்மேன் படத்தொடரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முக்கிய கதாபாத்திரம்தான், இந்த எடி ப்ரோக்/வெனம் கதாபாத்திரம்!

அட்லாண்டா, நியூ யார்க், லாஸ் ஏஞ்சிலஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய ஊர்களில் இதன் படப்பிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்பைடர்மேன்-3 திரைப்படத்தில்தான், முதன் முதலாக எடி ப்ரோக் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

லைஃப் பெளண்டேஷன் நிறுவனத்தின் தலைமை பீடத்தில் வீற்றிருக்கும் சார்ல்டன் ட்ரேக் (ரிஸ் அஹமத்), உயிரினங்களின் மீது விசித்திரமான ஆராய்ச்சி ரீதியிலான சோதனைகளைச் (experiments) செய்து பார்ப்பதில் சமர்த்தர்!

எதிர்காலத்தில் மனித இனமே அழிந்துவிடும் ஒரு நிலை உருவாகுவதற்கான சாத்தியகூறுகள் தென்பட, சிம்பியாட்ஸ் (Symbiotes) என்கிற ஒரு வகை இனம் துளிர் விடத் தயாராகிவிட்டதையும் உணர்கிறார்! பத்திரிகையாளரான எடி ப்ரோக் (டாம் ஹார்டி), இவ்வாராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.

சிம்பியாட் ஒன்றோடு அவரது நெருக்கம், அவருக்குப் புதியதொரு சக்தியையும் அந்தஸ்தையும் தந்தருள்கிறது!

நன்மைகளை விட, தீமைகள் அதிகமாக நடக்கவல்ல சூழ்நிலையும் உருவாகிறது! ஆனி வியாங் (மிஷல் வில்லியம்ஸ்) எடியின் காதலியாகத் தோன்றுகிறார். லட்விக் கோரன்சன் இசையமைக்க, மாத்யூ லிபாடிக்யூ ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஆலம் பெளம்கார்டன் படத்தைத் தொகுத்துள்ளார். இதைத் தொடர்ந்து ‘வெனம்’ சங்கிலித் தொடர் படங்கள் உருவாக்கப்பட வாய்ப்புள்ளது.

Venom movie releasing on both Tamil and English languages on 5th October

சில்க் ஸ்மிதா நடித்த *ராக தாளங்கள்* முதன்முறையாக ரிலீஸாகிறது!

சில்க் ஸ்மிதா நடித்த *ராக தாளங்கள்* முதன்முறையாக ரிலீஸாகிறது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

silk smithaதன் கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களை மயங்க வைத்தவர் சில்க் சுமிதா.

இவரது வருகைக்கு பிறகு இவர் இடம் பெறாத படங்களே இல்லை எனலாம். அவரது அகால மரணம் திரை உலகில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

அவர் நடித்த படம் ஒன்று நீண்ட இடைவேளைக்கு பிறகு இதுவரை வெளிவராத படம் ராக தாளங்கள் வெளி வர உள்ளது.

மாறுபட்ட வேடத்தில் சில்க் சுமிதா நடித்து உள்ளார். ராக தாளங்கள் படத்தின் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இயக்கி தயாரித்துள்ளார் திருப்பதி ராஜன். பொருளாதாரப் பிரச்சனை காரணமாக இப்படம் இதுவரை வெளிவரவில்லை.

இதோ அதோ என்று தள்ளி போன சில்க் சுமிதா நடித்துள்ள ராக தாளங்கள் படம் செப்டம்பரில் வெளி வர உள்ளது.

இப்படத்தில் சில்க் சுமிதா நடிப்பைப் பார்த்து ரசிகர்கள் வியப்பின் உச்சிக்கே செல்வார்கள் என்பது உறுதி.

இப்படத்தில் சில்க் சுமிதா அபிராமி கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். படத்தின் முடிவு பார்ப்போரின் மனதை வருத்தி எடுக்கும் என்பது நிச்சயம்.

ஸ்ரீ தண்டாயுதபாணி மூவிஸ் சார்பில் தாத்தா கலை மூவிஸ் தயாரித்துள்ளது.

More Articles
Follows