புரோமோசனுக்கு வரலேன்னா பணத்தை திருப்பி கொடுங்க..; த்ரிஷாவுக்கு சிவா எச்சரிக்கை

புரோமோசனுக்கு வரலேன்னா பணத்தை திருப்பி கொடுங்க..; த்ரிஷாவுக்கு சிவா எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer T Siva warning Trisha at Paramapadham Vilayattu event 24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் திருஞானம் இயக்க த்ரிஷா நடித்துள்ள படம் ‘பரமபதம் விளையாட்டு’.

இப்படத்தின் பிரி புரமோஷன் விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினர்களும் கலந்துக் கொண்டனர். ஆனால் த்ரிஷா விழாவுக்கு வரவில்லை.

இதில் தயாரிப்பாளரும் நடிகருமான டி.சிவா பேசும்போது, ‘நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால், படம் பார்த்த என் நண்பர்கள் சிறப்பாக இருக்கிறது என்று கூறினார்கள்.

பெரிய நாயகன் இல்லாமல், விளம்பர நோக்கோடும் இல்லாமல், ஆனால், நட்சத்திர அந்தஸ்த்தோடு இப்படத்தை இயக்கியிருக்கிறார் திருஞானம்.

இப்படிப்பட்ட படத்தின் விளம்பரத்திற்கு திரிஷா வரவில்லையென்பது வருத்தத்திற்குரிய விஷயம். தொடர்ந்து அவர் விளம்பரத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பித்தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக எச்சரிக்கை விடுக்கிறேன்’ என பேசினார்.

Producer T Siva warning Trisha at Paramapadham Vilayattu event

இந்தியன் 2 விபத்து; பணம்-வார்த்தை உயிரிழப்பை ஈடு செய்யாது என சிம்பு அறிக்கை

இந்தியன் 2 விபத்து; பணம்-வார்த்தை உயிரிழப்பை ஈடு செய்யாது என சிம்பு அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

STR aka Simbu emotional statement about Indian 2 accidentகடந்த பிப்ரவரி 19ஆம் தேதி இரவு 10 மணியளவில் ‛இந்தியன் 2′ படப்பிடிப்பில் நேர்ந்த விபத்தில் 3 பேர் பலியாகினர்.

9 பேர் காயமடைந்தனர். இது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கமல், ஷங்கர், தனுஷ், ஜிவி. பிரகாஷ் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாநாடு படத்தில் நடித்து வரும் சிம்பு விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது :

எமது சினிமா தொழிலாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் குறிப்பா சண்டைக் காட்சி நடிகர்களும் மயிரிழையில் உயிர் தப்பியே தினம் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு தொழிலாளர்களையும் நான் எங்களை ஏற்றி வைக்கும் ஏணியாகப் பார்க்கிறேன்.

அவர்களின் வியர்வையில்தான் எங்கள் உயரம் தீர்மானிக்கப் படுகிறது. அவர்கள் ஒவ்வொருவரையும் என் குடும்பமாகவே பார்க்கிறேன். இந்தியன் -2 படப்பிடிப்பில் நேர்ந்த விபத்தை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.

எத்தனை கனவுகளோடு விபத்தில் சிக்கியவர்களின் சினிமா பயணம் ஆரம்பித்திருக்கும்? அவர்களின் குடும்பத்தின் கனவுகளும் சேர்ந்தே தொலைந்து போய்விட்டதே என்பதை நினைக்க நினைக்க கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது.

இறந்துபோன தொழிலாளர்கள், உதவி இயக்குநர்களின் குடும்பத்திற்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பைத் தாங்கும் பலத்தை இறைவன் தர வேண்டிக் கொள்கிறேன். இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் நலமுடன் வீடு திரும்ப அந்த ஆண்டவன் துணை நிற்கட்டும்.

இனியொரு போதும் இப்படியொரு இழப்பு வேண்டாம். தொழிலாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்குமான பாதுகாப்பை இன்னும் கவனமாக கையாள வேண்டும் என்பதை அமைப்புகள் உறுதிசெய்ய வேண்டும்.

பணமோ, வார்த்தைகளோ உயிரிழப்பை ஈடுசெய்துவிட முடியாது. அதனால் பணியின் போது ஒவ்வொருவரும் தங்கள் உயிரின் மீது கவனம் வைத்து பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு சிம்பு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

STR aka Simbu emotional statement about Indian 2 accident

இந்தியன் 2 சூட்டிங் விபத்து… 3 பேர் மரணம்; மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

இந்தியன் 2 சூட்டிங் விபத்து… 3 பேர் மரணம்; மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Indian 2 Accident case and latest news ஓரிரு தினங்களுக்கு முன் இந்தியன் 2 சூட்டிங்கில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் கிரு‌‌ஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் கமல் தரப்பில் தலா ரூ.1 கோடி நிதியுதவியும், லைகா நிறுவனம் சார்பில் 2 கோடி நிதியுதவியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்து இருக்கிறார்.

Indian 2 Accident case and latest news

ரசிகர்கள் கூடிடுவாங்க. பிரச்னை வரும்.; ஆஜராக விலக்கு அளிக்க ரஜினி மனு

ரசிகர்கள் கூடிடுவாங்க. பிரச்னை வரும்.; ஆஜராக விலக்கு அளிக்க ரஜினி மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini petition to Aruna Jagadeesan Commission in Sterlite Issue2018ல் தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது போலீசார் நடத்தியா துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அந்த சம்பவத்தின்போது, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் காயமடைந்தோருக்கும் நடிகர் ரஜினி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது வன்முறைக்கு சில சமூக விரோதிகளே காரணம். போலீசை மட்டும் குறை கூறுவது தவறு எனவும் ரஜினி பேசியிருந்தார்.

இது அப்போது முதல் இன்று வரை பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.

போராளிகளை சமூக விரோதிகளை என ரஜினி கூறிவிட்டார் என அடிக்கடி பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வருகிற பிப்ரவரி 25-ந் தேதி ரஜினிகாந்த் ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் ரஜினிக்கு சம்மன் அனுப்பியது.

இந்த நிலையில் 25-ந்தேதி நேரில் ஆஜராவதில் இருந்து ரஜினி விலக்கு கேட்டுள்ளார்.

இது தொடர்பாக தூத்துக்குடியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராக விலக்கு கேட்டு அருணா ஜெகதீசன் ஆணையத்தில் ரஜினி மனு தாக்கல் செய்துள்ளார்.

என் ரசிகர்கள் அதிகளவில் கூடினால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். எனவே நான் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என அவர், மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கான கேள்விகளை எழுத்து மூலம் தந்தால் அதற்கு பதில் தர தயாராக இருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Rajini petition to Aruna Jagadeesan Commission in Sterlite Issue

நான் தான்ப்பா பைக் திருடன்..; ரஜினியை கிண்டல் செய்தவன் கைது..!

நான் தான்ப்பா பைக் திருடன்..; ரஜினியை கிண்டல் செய்தவன் கைது..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nanthanpa bike thirudan Santhosh arrested in bike theft caseஇந்தியாவில் நடிகர் ரஜினிகாந்தை தெரியாவதவர்களே இல்லை எனலாம். ஏன் உலகளவிலும் கூட சொல்லலாம்.

அப்படியிருக்கையில் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்ற போது அவரை பார்த்து ஒரு வாலிபர் நீங்க யார்? என கேட்டிருந்தார்.

அப்போது நான்தான்ப்பா ரஜினிகாந்த் என ரஜினி சொன்னார்.

இதுபற்றிய ஒரு சின்ன ப்ளாஷ்பேக்..

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது 13 பேர் கொல்லப்பட்டனர்.

எனவே படுகாயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடி சென்றார்.

அப்போது, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ்ராஜ் என்பவர் “நீங்கள் யார்? இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள்?” என ரஜினியைப் பார்த்துக் கேட்டார்.

அப்போது இதனை ரஜினி ஹேட்டர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

இந்த நிலையில் இன்று அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு…

துாத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சாம்குமார் என்ற இளைஞரின் வீட்டின் முன்பு இருந்த பைக் திருடி போயுள்ளது. இதுகுறித்து வடபாகம் போலீசார் விசாரணையில், சந்தோஷ்ராஜ் கைதாகியுள்ளார். அவருடன் மணி, சரவணன் என இருவர் பைக்கை திருடியது தெரியவந்துள்ளது.

அவர்களையும் கைது செய்த போலீசார் பைக்கை பறிமுதல் செய்தனர்.

இப்போது நான்தான்ப்பா பைக் திருடன் என ரஜினி ரசிகர்கள் டிரெண்ட்டிங் செய்து வருகின்றனர்.

மேலும் இவர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வாலிபர் என கூறப்படுகிறது.

Nanthanpa bike thirudan Santhosh arrested in bike theft case

மருத்துவமனை, சிசிடிவி கேமரா, இட்லி சாப்பிட்டார் என்ற காட்சிகள் தணிக்கைக் குழுவைத் தாண்டி எப்படி வந்தது.. K.பாக்கியராஜ் பேச்சு.

மருத்துவமனை, சிசிடிவி கேமரா, இட்லி சாப்பிட்டார் என்ற காட்சிகள் தணிக்கைக் குழுவைத் தாண்டி எப்படி வந்தது.. K.பாக்கியராஜ் பேச்சு.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Bhagyaraj24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் திருஞானம் இயக்க திரிஷா நாயகியாக நடிக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ப்ரி-புரோபோஷன் விழா சத்தியம் தியேட்டரில் நடந்தது. அப்படக்குழுவினர்களும், சிறப்பு விருந்தினர்களும் பேசியதாவது:-

பாடலாசிரியர் தரண் பேசியதாவது,

இப்படத்தில் ஒரு பாடல் மட்டும் தான் இருக்கிறது. ஆனால், ஜாலியான பாடல். முதன்முறையாக அம்ரீஷ்-க்கு எழுதுகிறேன். வித்தியாசமாக எழுத வேண்டும் என்று அப்பாடலைப் பற்றி விளக்கம் கேட்டேன். ‘ஓ கலா’ என்று தொடங்கும்படி பாடலை இயற்றினேன். ஆனால், இப்பாடல் பதிவு முடிந்து கேட்டபோது, தரம்குறைந்த பாடல் என்ற பெயர் பெற்றுவிடும் என்று அதிர்ச்சியடைந்தேன். இயக்குநரிடமும், இசையமைப்பாளரிடமும் தெரிவித்தபோது, அவர்களும் அதைப்புரிந்து கொண்டு மறுமுறை படப்பிடிப்பு செய்தார்கள் என்றார்.

நடிகை சங்கீதா பேசும்போது,

இப்படத்தில் திரிஷாவின் தோழியாக நடித்திருக்கிறேன். இப்படம் மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகிறேன். சில காட்சிகளே வந்தாலும் என்னுடை கதாபாத்திரம் பிடித்ததால் நடித்திருக்கிறேன் என்றார்.

ஒளிப்பதிவாளர் ஜேடி பேசும்போது,

இப்படத்திற்காக வாய்ப்பு கொடுத்த இயக்குநர் திருஞானத்திற்கு நன்றி என்றார்.

சிறுமி மானஸ்வி பேசும்போது,

இப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்திருக்கிறேன். காது கேட்காத வாய் பேசமுடியாத குழந்தையாக நடித்திருக்கிறேன். திரிஷா எனக்கு பல உடற்பயிற்சிகளைக் கற்றுக் கொடுத்தார். ஒருமுறை எனக்கு குளிரெடுத்தது. அப்போது திரிஷா தனது போர்வைக் கொடுத்தார் என்றார்.

இசையமைப்பாளர் அம்ரீஷ் பேசும்போது,

என்னுடைய 8-வது படம் திரிஷாவின் 60-வது படமாக அமைந்ததில் மகிழ்ச்சி. திருஞானம் என்னிடம் பேசும்போது, இப்படத்தில் ஒரே ஒரு பாடல் தான் இருக்கிறது. ‘மொட்ட ஷிவா கெட்ட ஷிவா’ படத்தில் வந்த ‘ஹர ஹர மஹாதேவ’ பாடல் போல வர வேண்டும் என்று கேட்டார். அதுபோல இதில் ஒரு பாடல் ஹிட் அடித்திருக்கிறது.

நடிகர் விஜய் வர்மா பேசும்போது,

இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி. இப்படத்தை அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.

இயக்குநர் சுரேஷ் காமாட்சி பேசும்போது,

15 நாட்களுக்கு முன்பு இப்படத்தை பார்க்கும்படி என்னை இயக்குநர் திருஞானம் அழைத்திருந்தார். படம் பார்க்கும் போது 20 படங்கள் இயக்கிய அனுபவம் தெரிந்தது. அவரிடம் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. புது முகம் விஜய்வர்மாவிற்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. சிறுமி மானஸ்வி நன்றாக நடித்திருக்கிறார். அவர் நகைச்சுவை நடிகர் கொட்டச்சியின் மகள் என்று பிறகுதான் தெரிந்தது. அம்ரீஷின் இசை சிறப்பாக இருக்கிறது.

தான் நடிக்கும் படத்தின் விளம்பரத்திற்கு ஏன் நடிகர், நடிகைகள் வரமால் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. பெரிய நாயகர்கள் ரஜினிகாந்த், விஜய், கமலஹாசன் போன்றோர்களே தாங்கள் நடிக்கும் படங்களின் விழாக்களுக்கு வரும்போது இவர்கள் ஏன் வராமல் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. மேலும், உங்களைப் போன்றோர்களை வைத்து படம் எடுத்தால் தான் விளம்பரமாகும் என்று எடுக்கிறோம். இல்லையென்றால், புதுமுகங்களை வைத்தே எடுத்து
விடுவோமே என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது,

படம் பார்த்தேன். ஆச்சிரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் திருஞானம். திரிஷாவின் நடிப்பு பிரமாதமாக இருக்கிறது. முக்கியமாக கூறவேண்டுமானால் இசையை கூறலாம். அம்ரீஷின் இசை அற்புதமாக இருக்கிறது. புதுமுகம் விஜய் வர்மாவின் நடிப்பு முதல் படம் போல தெரியவில்லை. இயக்குநர் நன்றாக வேலை வாங்கியிருக்கிறார். எதிர்காலத்தில் மிகப் பெரிய நடிகராக வருவார் விஜய் வர்மா. இயக்குநருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது.

சிறுமி மானஸ்வி பேசமுடியாமல் நடித்து அனைவரும் அவரைப் பற்றி பேசும்படி வைத்துவிட்டார். தமிழ் பண்பாட்டை குலைக்கும் வகையில் பாடல் இயற்றக் கூடாது என்றார்.

இப்படம் பார்த்ததும் சென்னை ஏரியாவை அபிராமி ராமனாதனும், NSC ஏரியாவை டிரைடண்ட் ரவியும், ஒரு ஏரியாவை நானும் வாங்கிக்கொண்டோம். மதுரை மற்றும் கோயம்புத்தூர் விநியோக உரிமை மட்டும் தான் இன்னும் யாரும் இருக்கு. அந்த குறையை சுரேஷ் காமாட்சியும், டி.சிவாவும் தீர்த்து விடுவார்கள் என்றார்.

கவிஞர் சொற்கோ பேசும்போது,

10 நிமிடங்களில் 40 ஆயிரம் பேர் ரசிக்கக் கூடிய பாடலை எழுத வைத்தவர் இசையமைப்பாளர் அம்ரீஷ். ‘ஹர ஹர மஹாதேவகி’ பாடலை 10 நிமிடங்களில் எழுதினேன். கவிஞர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும் இருக்கும் திறமையை குறைந்த நேரத்தில் வெளிவாங்கி விடுவார் இசையமைப்பாளர் அம்ரீஷ் என்றார்.

ஹெச்.முரளி பேசும்போது,

பொதுவாக நான் இரவு காட்சிகள் பார்க்க விரும்ப மாட்டேன். திருஞானம் கட்டாயப்படுத்தி அழைத்ததால் சென்றேன். திருஞானத்தை தயாரிப்பாளராகத்தான் தெரியும். ஆனால், இந்தளவு சிறந்த படமாக இயக்கியிருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. இப்படத்தின் கதாநாயகன் அம்ரீஷ் தான். இவரின் இசை படத்திற்கு நாயகன் போல இருக்கிறது.

இப்படம் தயாரிப்பாளருக்கும், விநியோகதஸ்தர்களுக்கும் பெரிய லாபத்தை ஈட்டி தரும் என்றார்.

டி.ஷிவா பேசும்போது,

நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால், படம் பார்த்த என் நண்பர்கள் சிறப்பாக இருக்கிறது என்று கூறினார்கள். பெரிய நாயகன் இல்லாமல், விளம்பர நோக்கோடும் இல்லாமல், ஆனால், நட்சத்திர அந்தஸ்த்தோடு இப்படத்தை இயக்கியிருக்கிறார் திருஞானம்.

இப்படிப்பட்ட படத்தின் விளம்பரத்திற்கு திரிஷா வரவில்லையென்பது வருத்தத்திற்குரிய விஷயம். தொடர்ந்து அவர் விளம்பரத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பித்தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக எச்சரிக்கை விடுக்கிறேன் என்றார்.

இயக்குநர் திருஞானம் பேசும்போது,

திரிஷாவின் 60-வது திரைப்படம். அதை நான் இயக்குவதற்கு வாய்ப்புக் கொடுத்த திரிஷாவிற்கு நன்றி. கடின உழைப்பு கொடுத்து இப்படத்தை எடுத்திருக்கிறோம். இதற்கு அனைவரின் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன் என்றேன்.

இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது,

இப்படத்தின் தலைப்பு ‘பரமபதம் விளையாட்டு’ அருமையான தலைப்பு. இத்தனை காலம் அதை மற்றவர்கள் உபயோகப்படுத்தாமல் தவறவிட்டுவிட்டார்கள் என்று தோன்றுகிறது. ஏனென்றால், பரமபதம் என்ற வார்த்தை வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமானது. அந்த தலைப்பை வைத்த இயக்குநர் திருஞானத்திற்கு பாராட்டுக்கள். டிரெய்லரைப் பார்க்கும்போது படத்தைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. மருத்துவமனை, சிசிடிவி கேமரா, இட்லி சாப்பிட்டார் என்ற காட்சிகள் தணிக்கைக் குழுவைத் தாண்டி எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால், இப்படத்திற்கு எதற்காக யுஏ சான்றிதழ் கொடுத்தார்கள் என்பதும் தெரியவில்லை.

சிறுமி மானஸ்வி நன்றாக நடித்திருக்கிறார்.

நான் இன்னும் இப்படத்தைப் பார்க்கவில்லை. நேற்றுதான் என்னை அழைத்தார்கள். நடிகை ஜெயசித்ராவிற்காகத்தான் வந்தேன். ஏனென்றால், ஒரு விழாவிற்கு அழைத்தால், அப்படத்தைப் பார்த்தால் தான் அப்படத்தைப் பற்றி நல்ல விஷயங்களைக் கூறி வியாபாரத்திற்கு நன்மை செய்ய முடியும்.

தயாரிப்பாளர் கே.ராஜன் எப்போதும் மற்றவர்கள் பிரச்னைகளுக்கு முதல் ஆளாக குரல் கொடுப்பவர். அதுமட்டுமல்லாமல், மற்றவர்கள் செய்த நற்செயல்களுக்கும் முதல் ஆளாகப் பாராட்டக்கூடியவரும் அவர்தான் என்றார்.

More Articles
Follows