Varisu Vs Thunivu FDFS : அஜித் படத்திற்கே முன்னுரிமை; டென்ஷனில் விஜய் ரசிகர்கள்!

Varisu Vs Thunivu FDFS : அஜித் படத்திற்கே முன்னுரிமை; டென்ஷனில் விஜய் ரசிகர்கள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படமும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படமும் அடுத்த ஆண்டு 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.

இந்த இரு படங்களும் ஒரே நாளில் மோத உள்ளதால் தமிழ் திரையுலகில் பலத்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

‘துணிவு’ படத்தின் தமிழக வெளியீடு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் பைப்பற்றியுள்ளது. ‘வாரிசு’ பட தமிழக வெளியீட்டு உரிமையை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் ‘துணிவு’ படத்திற்கு நள்ளிரவு 1 மணி காட்சிக்கு கேடிஎம் அனுமதி வழங்கப்பட உள்ளதாகவும் ‘வாரிசு’ படத்திற்கு அதிகாலை 4 மணிக்கு தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டால் ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதால் இந்த ஏற்பாடுகளை சிலர் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இது உறுதியாகும் பட்சத்தில் அஜித் படத்திற்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாகவும் அந்த படத்தை ஆளுங்கட்சி தரப்பு வெளியிட உள்ளதால் இந்த அனுமதியை அவர்கள் அளிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் விஜய் ரசிகர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

Thunivu gets more importance than Varisu FDFS

பிரபல தமிழ் இயக்குனருடன் இணையும் பிரபாஸ் ?

பிரபல தமிழ் இயக்குனருடன் இணையும் பிரபாஸ் ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தளபதி 67 படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கும் படம் குறித்து பல தகவல்கள் வந்துள்ளன.

அவர் ‘RRR’ மற்றும் ‘KGF’ நட்சத்திரங்களான ராம் சரண், ஜூனியர் என்டிஆர் மற்றும் யாஷ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது .

சமீபத்திய தகவலின் படி , லோகேஷ் கனகராஜ் பாகுபலி நடிகர் பிரபாஸுடன் ஒரு புதிய படத்தில் இணைவதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே பிரபாஸ் நடிக்கும் ‘ஆதிபுருஷ்’ ஜூன் 16 ஆம் தேதி வெளியாகிறது.

வடிவேலுவின் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்..!

வடிவேலுவின் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வடிவேலு இப்போது ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சுராஜ் இயக்கி, நடிகர்கள் ராவ் ரமேஷ், ஆனந்த் ராஜ், முனிஷ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி கிருஷ்ணகுமார் மற்றும் ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

படத்தின் சிறிய ப்ரோமோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள லைக்கா நிறுவனம் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.

இந்நிலையில், ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளது.

Vadivelu’s ‘Naai Sekar Returns’ release date update

நயன்தாரா செய்த நெகிழ்ச்சியான காரியம்.; மருமகளை பாராட்டும் மாமியார்

நயன்தாரா செய்த நெகிழ்ச்சியான காரியம்.; மருமகளை பாராட்டும் மாமியார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏழு வருடங்களாக காதலித்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

அக்டோபர் மாதத்தில் இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.

வாடகைதாய் மூலம் நயன்தாரா குழந்தை பெற்றது அப்போது சர்ச்சையானதால் இது தொடர்பான ஆவணங்களை அவர்கள் சமர்ப்பித்த பிறகு சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் தன் மருமகள் நயன்தாரா பற்றி விக்னேஷ் சிவனின் தாயார் சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பதாவது..

“நயன் வீட்டில் சமையல், அயர்னிங், டிரைவர், செக்யூரிட்டி, கிளீனிங், தோட்ட வேலை போன்ற வேலை செய்ய 8-10 பேர் உள்ளனர்.

அதில் வேலை செய்யும் ஒரு அம்மாவுக்கு 4 லட்சம் ரூபாய் கடன் இருந்துள்ளது.

இதனையறிந்து உடனே அவருக்கு கொடுத்து உதவினார் நயன்தாரா.

இதை நான் நேரிலேயே பார்த்தேன். அந்த அம்மா அவர்கள் வீட்டில் பல காலமாக வேலை செய்தவர்.” என நெகிழ்ந்து மருமகள் நயன்தாராவை பாராட்டி இருக்கிறார் மாமியார்.

சர்வதேச தரத்தில் பாடகர் சித்ஸ்ரீராமின் இன்னிசை.: நீங்களும் ஆடி பாடலாம்.; மக்களே ரெடியா.?

சர்வதேச தரத்தில் பாடகர் சித்ஸ்ரீராமின் இன்னிசை.: நீங்களும் ஆடி பாடலாம்.; மக்களே ரெடியா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி பாடகர் சித் ஸ்ரீராம்.

இவரின் இன்னிசை நிகழ்ச்சி நாளை நவம்பர் 27 கோவை மாநகரில் நடைபெற உள்ளது.

கோவை கொடிசியா மைதானத்தில் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

சித்ஸ்ரீராமின் இசை குழுவினர் பங்கேற்க உள்ளனர்.

இது சர்வதேச நிகழ்ச்சிக்கு நிகராக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒலி & ஒளியமைப்புகளும் மேடை அலங்காரங்களும்பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ரசிகர்கள் நின்று பாடி ஆடும் ‘பேன் பிட்’ மேடையும் இடம்பெறுகிறதாம்.

10,000 முதல் 12,000 பேர் வரை இந்த நிகழ்ச்சியை கண்டு களிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

நிகில் சித்தார்த்தா படத்தில் இணைந்த சிம்பு .. முழு விவரம் உள்ளே !

நிகில் சித்தார்த்தா படத்தில் இணைந்த சிம்பு .. முழு விவரம் உள்ளே !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நிகில் சித்தார்த்தாவின் ’18 பேஜஸ்’ டிசம்பர் 23 அன்று திரைக்கு வருகிறது.

அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள இப்படத்தை சூர்யா பிரதாப் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் நடிகர் சிம்பு ஒரு பெப்பி பாடலை பாடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

‘டைம் இவ்வு பில்லா’ என்ற தலைப்பில் பாடல் “இது ஒரு எனர்ஜி மிக்க பாடலாக இருக்கும்” என்று ஒரு ஆதாரம் கூறுகிறது.

இசையமைப்பாளர் கோபி சுந்தரின் டியூன் ஹைலைட்டாக இருக்கும்.

டைம் இவ்வு பில்லா பாடல் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.

More Articles
Follows