தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நாளை ஜனவரி 11ஆம் தேதி அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகின்றன.
ஜனவரி 11ஆம் தேதி மற்றும் 12ஆம் தேதி ஆகிய இரு நாட்களுக்கும் அதிகாலை காட்சிகளுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் துணிவு படத்திற்கு நாளை ஜனவரி 11ல் நள்ளிரவு 1 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாரிசு படத்தை பொறுத்தவரை அதிகாலை 4 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கப்பட உள்ளது.
மேற்கண்ட இந்த தகவல்கள் தமிழ்நாட்டுக்கும் புதுச்சேரிக்கும் பொருந்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்த நிலையில் புதுச்சேரியில் துணிவு படத்திற்கு நள்ளிரவு 1.30am மணிக்கு காட்சிக்கு அரசு அனுமதி கொடுக்கவில்லை.
அதிகாலை 5 30 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கப்பட வேண்டும் என அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
எனவே புதுச்சேரியை பொறுத்தவரை துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் தான் தொடங்கப்படும். முதல் காட்சி திரையிடப்படும்.” என தெரிகிறது.
Thunivu 1am Special Show Canceled in pondicherry