சிம்பு-தனுஷ் படங்களின் ரிலீஸ் தேதி உறுதியானது

சிம்பு-தனுஷ் படங்களின் ரிலீஸ் தேதி உறுதியானது

simbu dhanushபிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்த தொடரி படத்தின் ரிலீஸ் தேதி பல்வேறு காரணங்களால் தள்ளிக் கொண்டே போனது.

இறுதியாக செப்டம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்துடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படம் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதாவது 09/09/2016 அன்று வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கௌதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

புன்னகை இளவரசி ஸ்நேகாவின் நெக்ஸ்ட் மூவ்

புன்னகை இளவரசி ஸ்நேகாவின் நெக்ஸ்ட் மூவ்

sneha stillsதென்னிந்திய ரசிகர்களை த(தே)ன் அழகான சிரிப்பால் கவர்ந்தவர் புன்னகை இளவரசி ஸ்னேகா.

நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். இவர்களுக்கு ஓர் அழகான குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் தற்போது தன் அடுத்த இலக்கை சின்னத்திரையை நோக்கி நகர்த்தியிருக்கிறார்.

விரைவில் இந்த அழகு புயல் ஒரு பிரபலமான டிவி சேனல் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக வரப்போகிறாராம்.

வாழ்த்துக்கள் ஸ்னேகா…

பஞ்சு அருணாச்சலம் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்

பஞ்சு அருணாச்சலம் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்

Writer panchu arunachalamஅன்னக்கிளி படத்தில் இளையராஜாவை அறிமுகப்படுத்தியவர் பஞ்சு அருணாச்சலம்.

மேலும் பல படங்களுக்கு கதை எழுதியும் உள்ளார்.

இவையில்லாமல் பட படங்களை இயக்கியும் தயாரித்தும் இருக்கிறார்.

முரட்டுக் காளை, சகலகலா வல்லவன், அபூர்வ சகோதரர்கள் போன்ற சூப்பர் ஹிட் படங்களுக்கு இவர் கதை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு தற்போது 75 வயதாகிறது.

இந்நிலையில் இன்று திடீரென வயது மூதிர்வு காரணமாக மரணமடைந்தார்.

அவரது உடல் தி.நகரில் உள்ள அவரது வீட்டில் பிரபலங்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பஞ்சு அருணாச்சலத்தின் மகன் தற்போது அமெரிக்காவில் இருப்பதால், அவர் வரும் வரை உடலை மருத்துவமனையில் வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

முன்னாள் கனவுக்கன்னி நடிகை ஜோதிலட்சுமி காலமானார்

முன்னாள் கனவுக்கன்னி நடிகை ஜோதிலட்சுமி காலமானார்

jothi lakshmiநடிப்பாலும் கவர்ச்சியாலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் பழம் பெரும் நடிகை ஜோதிலட்சுமி.

இவர் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.

எம்.ஜி.ஆரின் ரிக்க்ஷாகாரன் படத்தில் ‘பம்பை உடுக்கை கட்டி…’ என்ற பாடலுக்கும், அடிமைப்பெண் படத்தில் ‘காலத்தை வென்றவன் நீ, காவியம் ஆனவன் நீ…’ என்ற பாடலுக்கும் நடனம் ஆடியவர்தான் இந்த ஜோதி லட்சுமி.

மேலும் ரஜினியுடன் முத்து படத்திலும் விக்ரமுடன் சேது படத்திலும் இவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

தற்பொழுது சன் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் “வள்ளி” என்ற தொடரில் நடித்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக ரத்த புற்றுநோயால் அவதிப்பட்ட இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இந்நிலையில் நள்ளிரவு திடீரென மரணம் அடைந்தார். இவருக்கு வயது 68.

இவரது தங்கை ஜெயமாலினியும் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு ஜோதிமீனா என்ற மகள் உள்ளார். இவரும் சினிமாவில் நடித்து வருவது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

சென்னை தியாகராயநகர் ராமராவ் தெருவில் உள்ள ஜோதிலட்சுமியின் வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

இறுதி சடங்கு இன்று மாலை சென்னை கண்ணம்மா பேட்டை மயானத்தில் நடைபெறவுள்ளது.

ஜிவி. பிரகாஷின் ‘கிக்’கை வாங்கிய பிரபலம்

ஜிவி. பிரகாஷின் ‘கிக்’கை வாங்கிய பிரபலம்

gv prakash director rajeshஹீரோவாக நடித்த முதல் படமே சூப்பர் ஹிட்டடித்த ராசியால், முழுநேர நடிகராக பிஸியாக இருக்கிறார் ஜி.வி. பிரகாஷ்.

எனவே இவரது படங்களுக்கும் நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜேஷ் இயக்கத்தில் கடவுள் இருக்கான் குமாரு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை சேலம் சிவா என்பவர் பெரும் தொகை கொடுத்து மினிமம் கியாரண்டிக்கு வாங்கியிருக்கிறாராம்.

இப்படத்தில் ஜி.வி.யுடன் நிக்கி கல்ராணி, ஆனந்தி, பிரகாஷ்ராஜ், ஆர் ஜே பாலாஜி, ரோபா சங்கர், ராஜேந்திரன், மனோபாலா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஓங்கி அடிச்சா 100 கோடி… கர்ஜிக்கும் ‘சிங்கம்’ சூர்யா

ஓங்கி அடிச்சா 100 கோடி… கர்ஜிக்கும் ‘சிங்கம்’ சூர்யா

singam 3 stillsதமிழ் நாட்டு ரசிகர்களைப் போலவே சூர்யாவிற்கு ஆந்திராவிலும் நல்ல மாஸ் உருவாகியுள்ளது.

எனவே இவரது நடிப்பில் உருவாகும் படங்கள் இரு மாநிலத்தை மையப்படுத்தியே உருவாகி வருகிறது.

சிங்கம் 3 படத்தின் தெலுங்கு உரிமையை தயாரிப்பாளர் மல்காபுரம் சிவகுமார் என்பவர் ரூ. 18 கோடிக்கு வாங்கியுள்ளார் என்பதை முன்பே பார்த்தோம்.

இந்நிலையில் கேரளாவிலும் சூர்யாவுக்கு ரசிகர்கள் அதிகளவில் கூடி வருவதால், அங்கும் சிங்கம் 3 படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இப்படத்தின் கேரள உரிமையை சொப்னம் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் ரூ. 5.3 கோடி கொடுத்து பெற்றுள்ளதாம்.

மேலும் தற்போதே தென்னிந்தியா மற்றும் ஓவர்சீஸ் வியாபாரம் ரூ. 100 கோடி அளவுக்கு பேசப்பட்டு வருவதாக செய்திகள் வந்துள்ளன.

More Articles
Follows