ஆன்டி ஹீரோவாக பிரசாந்த் நடிக்கனும்.. அப்போதான் அது நடக்கும்.. – ஆர்கே. செல்வமணி

ஆன்டி ஹீரோவாக பிரசாந்த் நடிக்கனும்.. அப்போதான் அது நடக்கும்.. – ஆர்கே. செல்வமணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆண்டுதோறும் தனது பிறந்த நாளை ஏதாவது ஓர் அடையாளத்துடன் கொண்டாடுவது பிரஷாந்தின் வழக்கம்.இந்த ஆண்டு
சென்னை தி.நகர் பிரஷாந்த் கோல்டு டவரில் நடந்த விழாவில் பத்திரிகையாளர்கள் மத்தியில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

இந்த விழாவில் பெப்ஸியின் தலைவரும் அண்மையில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் தலைவராக வெற்றி பெற்றவருமான இயக்குநர் ஆர். கே. செல்வமணி ,இயக்குநர் ஏ.வெங்கடேஷ்,
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் இசையமைப்பாளருமான தினா ஆகியோர் கலந்து கொண்டு பிரஷாந்தை வாழ்த்தினர்.

இவ்விழாவில் பிரஷாந்தின் தந்தையும் இயக்குநரும் நடிகருமான தியாகராஜன் பேசும்போது

” இது நமது குடும்ப விழா. வந்திருக்கும் அனைத்து பத்திரிகை நண்பர்களுக்கும் என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் அவர்கள் பிரஷாந்த்தின் பிறந்த நாள் விழாவிற்கு வந்து வாழ்த்துவார்கள்.
பல ஆண்டுகளாக அவர்களுடனேயே எங்கள் குடும்பமும் இருக்கிறது என்று உணர்கிறேன் .

சற்று இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

‘அந்தகன்’ வந்ததும் பிரசாந்துக்கு டும் டும் டும்..; பெண் பார்த்து வைத்துள்ள தியாகராஜன்

பிரஷாந்த் நடித்து அடுத்தடுத்து படங்கள் வர உள்ளன. இப்போது தயாராகிக் கொண்டிருக்கும் ‘அந்தகன் ‘திரைப்படம் பிரஷாந்த்துக்கு மறக்க முடியாத படமாக இருக்கும். இந்தப் படம் இந்தியில் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது .

தெலுங்கு, மலையாளத்திலும் பெரிய வெற்றி பெற்றது .சீனாவில் 4000 திரையரங்குகளில் வெளியாகி பெரிய வசூல் செய்த படம் அது.தமிழிலும் பிரம்மாண்டமாகவும் பெரும் பொருட்செலவிலும் எடுக்கப்பட்டு வருகிறது.

நிறைய நட்சத்திரங்கள் நிறைந்த ஒரு படமாக இப்படம் உருவாகிறது .பிரஷாந்துடன் அனுபவமிக்க பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். சிம்ரன், சமுத்திரக்கனி, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார் , மனோபாலா என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். ஒரு சிறு வேடத்திற்கு கூட பிரபலமானவர்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறோம்.

பிரஷாந்துக்கு அடுத்தடுத்து அழுத்தமான நல்ல கதைகளையும் நல்ல இயக்குநர்களையும் தேடிக்கொண்டிருக்கிறோம். அப்படி நல்ல படங்கள் அமையும் என்று நம்புகிறோம்.

இங்கே வந்திருக்கும் ஆர்.கே செல்வமணி அவர்கள் மீண்டும் மீண்டும் இயக்குநர் சங்கத் தேர்தலில் வெற்றி பெறுகிறார். அந்த அளவிற்கு அவர் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். அவர் ஒரு சிறந்த இயக்குநர் மட்டுமல்ல இயக்குநர்கள் சங்கத்துக்குப் பாடுபடக் கூடியவரும் கூட.

அவர் தனது வெற்றிப் படங்கள் போலவே இந்த சங்கப் பணிகளிலும் முத்திரை பதித்துள்ளவர்.

பிரசாந்தின் ‘அந்தகன்’ உடன் இணைந்த ‘அசுரன்’ தயாரிப்பாளர்; 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கூட்டணி

இன்று திரைப்படக்கல்லூரியில் படிக்காமலேயே பல இளைஞர்கள் இயக்குநர் கனவோடு வருகிறார்கள். அவர்கள் இன்றுள்ள நவீன தொழில்நுட்பங்கள் தெரியாமல் சிரமப்படுகிறார்கள்.

அவர்களுக்கு இன்றுள்ள நவீன தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுப்பதற்கு ஒரு பள்ளி ஆரம்பித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று செல்வமணி அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் .அதற்குப் பிரஷாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நான் ஐந்து லட்ச ரூபாய் அன்பளிப்பாக வழங்குகிறேன்.வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி, ”இவ்வாறு தியாகராஜன் கூறினார்.

இயக்குநர் ஏ வெங்கடேஷ் பேசும்போது,

“நான் பிரஷாந்த் சாருடன் ‘சாக்லெட் ‘என்ற ஒரு படத்தில் மட்டும்தான் பணி புரிந்தேன். ஆனால் பல படங்களில் பணிபுரிந்த அளவிற்கு எங்களிடம் நல்ல பழக்கமும் நல்ல புரிதலும் தொடர் நட்பும் உள்ளது.அன்று முதல் அவருடன் நான் தொடர்ந்து பயணம் செய்கிறேன்.

பிரஷாந்த் சாரை வெறும் நடிகராகவே மற்றவர்களுக்குத் தெரியும். ஆனால் அவர் ஒரு சிறந்த தொழில் நுட்பக் கலைஞர். அவருக்கு நல்ல கதை அறிவும் தொழிநுட்ப அறிவும் உள்ளது.

திரையுலகில் ஒரு பேச்சு உள்ளது பிரஷாந்தைக் கெடுப்பதே அவரது அப்பாதான் என்று .இதை என்னிடம் பலர் நேரிலேயே கூறியிருக்கிறார்கள்.

இது பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது தியாக ராஜன் சார் மௌனமான ஒரு சிரிப்பு சிரித்தார். ஆனால் பிரஷாந்த் கூறியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

” எந்த தந்தையாவது தன் மகன் வாழ்க்கையைக் கெடுப்பதற்கும் இடையூறு செய்வதற்கும் விரும்புவாரா? எனக்கு என் அப்பா தான் எல்லாம்” என்றார். அந்த நொடியிலேயே அவர் மீது எனக்கு மேலும் மதிப்பு அதிகரித்தது.”
இவ்வாறு ஏ.வெங்கடேஷ் கூறினார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது,

” பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ள ஒரு நடிகர் பிரஷாந்த்.அவரது பலம் வெளிநாடுகளில்தான் தெரியும். அந்த அளவிற்கு அவரை வெறித்தனமாக பின்பற்றும் ரசிகர்கள் வெளிநாடுகளில் உண்டு. மலேசியாவில் நட்சத்திரக் கலை விழா நடத்தி வெற்றி பெற்றவர் இவர் ஒருவராகத்தான் இருப்பார். அந்தளவுக்கு அவருக்கு அங்கே ரசிகர்கள் இருக்கிறார்கள்.

பிரஷாந்த் தன் தந்தை மீது வைத்திருக்கும் அன்பும் மரியாதையும் மற்றவர்களுக்கு உதாரணமாக உள்ளது. அப்படிப்பட்டவர் மேலும் பல உயரங்களைத் தொடுவார்” என்று கூறி வாழ்த்தினார்.

இசையமைப்பாளர் தினா பேசும்போது,

” பிரஷாந்தின் புகழ் எந்த அளவிற்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. அவருக்கு வெளிநாடுகளில் நல்ல புகழ் உள்ளது. வெளிநாடுகளில் நடக்கும் இசை விழாக்களுக்கும் நட்சத்திரக் கலை விழாக்களுக்கும் அவர் வந்தால் அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்துவிடும் .இதை நாங்கள் பலமுறை அவரை அழைத்துச் சென்றபோது உணர்ந்திருக்கிறோம். எங்கள் இசைக்கலைஞர்கள் சங்கத்திற்குப் பலமுறை விழாக்களுக்கு வந்து அவர் இப்படி ஒத்துழைப்பு கொடுத்து உதவியது பலருக்கும் தெரியாது.

இவர் மாதிரி ஒரு பன்முகத் திறன் வாய்ந்த நடிகரைப் பார்க்க முடியாது. மைக்கேல் ஜாக்சன் போலவே பல்வேறு திறமைகள் கொண்டவர். அவரைத் தமிழகத்தின் மைக்கேல் ஜாக்சன் என்று கூறலாம் “என்று கூறி வாழ்த்தினார்.

இயக்குநர் ஆர். கே. செல்வமணி பேசும்போது,

“தியாகராஜன் சாருக்கும் எனக்கும் உள்ள நட்பு முப்பதாண்டுகளாக அதே அளவு நீடிக்கிறது.அன்று பார்த்தது முதல் அப்படியே இருக்கிறார்.

எனது முதல் இரண்டு படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ஒரு காதல் கதை எடுப்பதாக முடிவு செய்தபோது பலரையும் நடிக்க வைத்தோம். நான் திருப்தியடையவில்லை. அப்போதுதான் பிரஷாந்த் அனுப்பிய புத்தாண்டு வாழ்த்தையும் அதிலிருந்த அவரது படத்தையும் பார்த்து அவரை எனக்குப் பிடித்து விட்டது. நடிக்க வைத்தேன்.

அப்போது பலரும் அவரது தந்தை பற்றி என் காதுபடப் பேசினார்கள்.சரியாக வராது என்றார்கள். அவர் என் படத்தில் நடிக்க வந்த பிறகும் கூட நம்பாத நிலை இருந்தது. முன்பணமும் அவர் வாங்கவில்லை.

அதனால் பலரும் சந்தேகிக்கிறார்கள் என்று அவருக்கு நான் 25 ஆயிரம் ரூபாய் வலுக்கட்டாயமாக முன்பணமாகக் கொடுத்தேன்.அவருக்கு கொடுத்த சம்பளமே அவ்வளவுதான். அவர் நடித்துக் கொடுத்து ஒத்துழைத்தார். படப்பிடிப்பின்போது நான் ரோஜாவை மட்டுமல்ல பிரஷாந்தையும் காதலித்தேன். அந்தளவுக்கு அவரை எனக்குப் பிடித்தது.

அவரது அறிவுக்கும் திறமைக்கும் அன்புக்கும் தொழில்நுட்ப ஆர்வத்திற்கும் அவர் தனக்கான சரியான உயரத்தை அடையவில்லை என்றுதான் நான் சொல்வேன். அவர் இந்த கால மாற்றத்திற்கேற்ப ஆன்டி ஹீரோவாக, நெகட்டிவ் ரோல்களில் கவனம் செலுத்தினால் பெரிய உயரத்தை அடையலாம்.
இப்போதெல்லாம் மக்கள் நடிகர்களை நடிகர்கள் என்றுதான் பார்க்கிறார்கள். ஹீரோ, வில்லன் என்று யாரும் பார்ப்பதில்லை .எனவே அவர் பல்வேறு திறமைகளை நடிப்பில் காட்டிக் கொள்ள வாய்ப்புள்ள நெகடிவ் ரோல்களில் நடித்தால் பெரிய உயரம் தொடுவார்” என்று கூறி வாழ்த்தினார்.

இறுதியாக அனைவருக்கும் பிரஷாந்த் நன்றி கூறினர்.

RK Selvamani talks about Prashanth at his birthday party

சிவகார்த்திகேயனின் ‘டான்’ பட உரிமையை வாங்கிய உதயநிதி

சிவகார்த்திகேயனின் ‘டான்’ பட உரிமையை வாங்கிய உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா புரொடக்‌ஷன்ஸ் – சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்க இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், SJ சூர்யா, சமுத்திரகனி, சூரி நடிப்பில் உருவான படம் “டான்”

இப்படம் மே 13 அன்று வெளியாக உள்ளதாக முன்னரே அறிவிப்பு வெளியானது.

தற்போது டான் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் ஜோடியாகும் சமந்தா.; தயாரிப்பாளர் & இயக்குனர் இவர்களா.?

இந்நிகழ்வின் போது நடிகரும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பாளருமான திரு.உதயநிதி ஸ்டாலின், லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை நிர்வாகி திரு.G.K.M.தமிழ் குமரன், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் திரு.M.செண்பகமூர்த்தி, சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணை தயாரிப்பாளர் திரு.கலையரசு, ரெட் ஜெயன்ட் மூவீஸ் விநியோக நிர்வாகி ராஜா.C ஆகியோர் இருந்தனர்.

பாடல்கள் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்து பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். K.M. பாஸ்கரன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

படத்தொகுப்பு – நாகூரான்
கலை – உதயா UA
சண்டைப் பயிற்சி – விக்கி
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, சதீஷ் (AIM)

Don theatrical rights bagged by Red Giant Movies

என்ன சத்தம் இந்த நேரம்? என்று கேட்கும் பரபரப்பான கதை ‘ரீ ‘

என்ன சத்தம் இந்த நேரம்? என்று கேட்கும் பரபரப்பான கதை ‘ரீ ‘

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முற்றிலும் வணிக மயமாகிப் போய்விட்ட இந்த வாழ்க்கைச் சூழலில் தொழில்நுட்பம் உலகத்தை உள்ளங்கைக்குள் இணைக்கிறது .உலகத் தொடர்புகள் மிக விரைவில் சாத்தியமாகிறது.ஆனால் அருகிலிருக்கும் வீடுகளில் இருப்பவர் யார்? அங்கு என்ன நடக்கிறது என்று தெரிவதில்லை.

ஆனால் ‘ரீ ‘ படத்தின் கதாநாயகி அப்படி இருப்பவள் அல்ல.அவளது பக்கத்து வீட்டிலிருந்து ஒரு சத்தம் வருகிறது .அது அவளை அலைக்கழிக்கிறது. அவளைச் சமநிலை இழக்கச் செய்கிறது.

என்ன சத்தம் இந்த நேரம்? பேயின் ஒலியா? மனிதனின் வலியா?என்று அறிய முற்படுகிறாள்.ஆனால் பக்கத்து வீட்டில் ஒரு நாகரிகமான டாக்டர் குடும்பம் தான் வசிக்கிறது. இந்நிலையில் எங்கிருந்து சத்தம் வருகிறது அதன் பின்னணி என்ன என்று ஆராய முற்படும் போது பல மர்மங்கள் விரிகின்றன. எதிர்பாராத திசையில் சம்பவங்கள் நடக்கின்றன. அவை என்ன ? அவற்றைப் பற்றிப் பேசும் படம் தான் ” ரீ’.

இப்படத்தை சுந்தரவடிவேல் எழுதி இயக்கியுள்ளார் .அவரே தனது ஸ்ரீஅங்கா புரொடக்ஷன்ஸ்
சார்பில் தயாரித்துள்ளார்.

கள்ளக்-காதல் மன்னன்..; மன்மத லீலை விமர்சனம் 3.5/5

சினிமாவின் மீது தீராத காதல் கொண்ட இயக்குநர் சுந்தரவடிவேல் மதுரையைச் சேர்ந்தவர். தனியார் திரைப்படக் கல்லூரிகளில் திரைப்படக்கலைப் படிப்பினை முடித்தவர், குடும்ப நிர்ப்பந்தத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் சில காலம் பணியாற்றினார்.

ஒரு கட்டத்தில் தன் கனவை நிறைவேற்ற, களத்தில் குதித்திருக்கிறார் .

திரையுலகின் கள அனுபவம் வேண்டி ‘சண்டி முனி’ படத்தில் பணியாற்றியிருக்கிறார். ‘வலியோர் சிலர்’ படத்தில் நடித்திருக்கிறார். இப்படி பரவலாகத் திரையுலக அனுபவம் பெற்றிருக்கிறார்.

அப்படிப்பட்ட அவர் உருவாக்கியிருக்கும் படம் தான் ரீ.

இது கதாநாயகியை மையப்படுத்திய கதை கொண்ட படம்.
இப்படத்தில் ‘ ஹர மகாதேவி ‘ படத்தில் நடித்த காயத்ரி ரமா நாயகியாக நடித்துள்ளார்.பாலச்சந்தரின் ஆஸ்தான எழுத்தாளர் அனந்துவின் தங்கையின் பேரன் பிரசாந்த் ஸ்ரீனிவாசன் நாயகனாக நடித்துள்ளார்.மேலும் பிரசாத் , சங்கீதா பால், மணி சங்கர் ,சுரேஷ் பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தின் இயக்குநரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்திற்கு ஒளிப்பதிவு தினேஷ்ஸ்ரீநிவாஸ், பின்னணி இசை ஸ்பர்ஜன் பால் , பாடல் இசை ஹரிஜி, எடிட்டிங் கே.ஸ்ரீனிவாஸ்.

தரங்கெட்ட தரகர்களின் குரூப் போட்டோ..; செல்ஃபி விமர்சனம் 3.75/5

மதுரையும் மதுரையைச் சுற்றியுள்ள இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கதையின பெரும்பகுதி இரண்டு வீட்டில் நடக்கும் படி உருவாகியுள்ளது.

”சிறு பட்ஜெட்டில் ஆரம்பித்த இந்தப் படம், கணிசமான நடுத்தர பட்ஜெட் நிலைக்குக் கொண்டு சென்று ஒரு முழுமையான தரமான படமாகவும் விறுவிறுப்பான படமாகவும் உருவாகியிருக்கிறது,” என்கிறார் இயக்குநர் சுந்தரவடிவேல்.

த்ரில்லர் பட ரசிகர்களின் நெஞ்சில் ரீங்காரம் செய்யும் வகையில் விரைவில்’ ரீ’ வெளிவர இருக்கிறது.

REE – A MYSTERIOUS THRILLER WITH THE RESONANCE OF A WEIRD AND SPOOKY SOUND

‘மாநாடு’ பட டயலாக் ‘வந்தான் சுட்டான் ரிப்பிட்டு’ டைட்டில் ஆச்சு

‘மாநாடு’ பட டயலாக் ‘வந்தான் சுட்டான் ரிப்பிட்டு’ டைட்டில் ஆச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தரமான கதைகளை தேர்ந்தெடுத்து தயாரிக்கும் தயாரிப்பாளர் “2 MB” ரகுநாதன் P.S தற்போது தொடர் வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் “வந்தான் சுட்டான் ரிப்பிட்டு” எனும் புதிய படத்தை தயாரிக்கிறார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.

காமெடி கலந்த திகில் படமாக உருவாகும் “வந்தான் சுட்டான் ரிப்பிட்டு” படத்தில் சந்திரமௌலி நாயகனாக நடிக்கின்றார்.

மீனாக்‌ஷி கோவிந்தராஜன், ரெபா மோனிகா நாயகிகளாக நடிக்கின்றனர். மனோ பாலா, ஊர்வசி, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

‘மாநாடு’ 100 நாட்கள்.: ரசிகர்கள் முன்னிலையில் மாஸ் காட்டிய சிலம்பரசன்

செவிலோ ராஜா ஒளிப்பதிவை மேற்கொள்ள, சந்தோஷ் தயாநிதி மற்றும் K.C.பாலசாரங்கன் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர்.

கலை – கிருஷ்ணா
படத்தொகுப்பு – K.J.வெங்கட்ரமணன்
காஸ்ட்யூம் டிசைனர் – சோபியா ஜெனிபர்
மேக்கப் – ராஜா
சண்டைப்பயிற்சி – விக்கி
புரொடக்‌ஷன் எக்ஸிகியுடிவ் – சேகர்
எக்ஸிகியுடிவ் புரொடுயுசர் – G.பிரதீப் குமார், சன் செந்தில்
ஸ்டில்ஸ் – சக்தி
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

சிம்பு WIN டைம் லூப்..; மாநாடு விமர்சனம் 4/5

Maanaadu movie dialogue becomes Kayal Chandran’s film title

ஹாலிவுட்டில் நுழையும் பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ்

ஹாலிவுட்டில் நுழையும் பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகுபலி & பாகுபலி 2 படங்களுக்கும் அதன் பிறகும் உருவான பிரபாஸின் படங்களுக்கும் பான் இந்தியா படம் என அந்தஸ்து கிடைத்துள்ளது.

சாஹோ & ராதே ஷ்யாம் ஆகியவை 5 மொழிகளில் உருவாகி இந்தியளவில் ரிலீசானது. ஆனால் இவை இரண்டும் பிரபாசிக்கு தோல்வி படங்களாக அமைந்தன.

தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார், ஆதிபுரூஷ் படங்கள் உருவாகி வருகின்றன.

ராதே ஷ்யாம் படு தோல்வி.. பாதி சம்பளத்தை திருப்பிக் கொடுத்தாரா பிரபாஸ்.?

மேலும் அஸ்வின் நாக் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஹாலிவுட் படம் ஒன்றில் பிரபாஸ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை யுனிவர்சல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறாதாம்.

எனவே இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Prabhas all set to make hollywood debut

இளையராஜாவின் ‘உலகம்மை’ இசை விழாவில் பங்கேற்று வாழ்த்திய பாரதிராஜா

இளையராஜாவின் ‘உலகம்மை’ இசை விழாவில் பங்கேற்று வாழ்த்திய பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காதல் FM, குச்சி ஐஸ் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விஜய் பிரகாஷ்.

இவர் தற்போது SVM புரொடக்‌ஷ்ன்ஸ் சார்பாக V.மகேஷ்வரன் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பது இருப்பதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

1970ல் நடைபெற்ற சாதிய பிரச்சனையை மய்யமாக கொண்டு நெல்லையில் நடக்கும் கதை தான் இந்த ‘உலகம்மை’.

ஒரே இளையராஜா-தான்.. ஒரே பாரதிராஜா-தான்.; படம் பார்க்குறவங்க கஷ்டப்படக்கூடாது.. – இசைஞானி

பிரபல எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

“உலகம்மை” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் 96, மாஸ்டர் படங்களில் நடித்த கௌரி கிஷன் கதையின் நாயகியாக நடிக்கின்றார்.

வெற்றி மித்ரன் நாயகனாக நடிக்கிறார்.

இவர்களுடன் மாரிமுத்து, G.M.சுந்தர், பிரனவ், அருள்மணி, காந்தராஜ், ஜெயந்திமாலா, அனிதா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இன்று சென்னையில் இளையராஜா ஸ்டூடியோவில் இளையராஜா முன்னிலையில் இப்பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார் இயக்குனர் பாரதிராஜா.

ஆத்தா-வை கைவிட்ட பாரதிராஜா..; இளையராஜா கூட்டணி முறிவு..

இயக்கம் – விஜய் பிரகாஷ், தயாரிப்பு – V.மகேஷ்வரன் (SVM புரொடக்‌ஷ்ன்ஸ்), இசை – இசைஞானி இளையராஜா,
கதை (நாவல்) – சு.சமுத்திரம்,
ஒளிப்பதிவு – K.V.மணி, வசனம் – குபேந்திரன்

திரைக்கதை – சரவணன், கலை – வீரசிங்கம், படத்தொகுப்பு – ஜான் அப்ரஹம், உடைகள் – ஜெயபாலன்
ஒப்பனை – பாரதி

Bharathi Raja praises Ilaiyaraja at Ulagammai audio release

More Articles
Follows