‘தளபதி 67’ இன் மிகப்பெரிய அப்டேட்டுடன் தொடங்கிய புது வருஷம்

‘தளபதி 67’ இன் மிகப்பெரிய அப்டேட்டுடன் தொடங்கிய புது வருஷம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தளபதி 67 விஜய் கேரியரில் மிகப்பெரிய படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தளபதி 67 கடந்த மாதம் பூஜையுடன் ஆரம்பமானது. தற்போது, ​​இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பொங்கல் விடுமுறைக்கு முன் 10 நாட்கள் முதல் ஷெட்யூல் தொடரும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் இந்த மாத இறுதியில் விக்ரம் பட பாணியில் டீசர் வீடியோவுடன் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த திரைப்படம் LCU இன் ஒரு பகுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

The New Year begins with a massive update of ‘Thalapathy 67’

பவித்ரா லோகேஷ் உடனான திருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட வி.கே.நரேஷ்

பவித்ரா லோகேஷ் உடனான திருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட வி.கே.நரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மூத்த கலைஞர் வி.கே.நரேஷ் மற்றும் கன்னட கலைஞர் பவித்ரா லோகேஷ் இடையே காதல் இருந்தது தெரிந்ததே.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, நரேஷ் தனக்கும் பவித்ராவுக்கும் விரைவில் திருமணம் நடக்க போவதாக அறிவித்தார்.

பன்முக திறமைக்கு பெயர் பெற்ற நரேஷ், தனது வருங்கால மனைவியை முத்தமிடுவது போன்ற வீடியோ கிளிப்பை வெளியிட்டார்.

“புத்தாண்டு, புதிய தொடக்கங்கள். உங்கள் ஆசீர்வாதம் வேண்டும்,” என்று இரண்டு முறை திருமணம் செய்து கொண்ட நரேஷ், ட்வீட் செய்துள்ளார்.

வீடியோ கிளிப் திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்பிற்கான டீஸர் போல் உள்ளது.

VK Naresh announces marriage with Pavithra Lokesh

2023ல் ரஜினி கமல் அஜித் விஜய் ஆகியோருக்கு ரெண்டு ரெண்டு.; மற்றவர்களுக்கு எத்தனை.?

2023ல் ரஜினி கமல் அஜித் விஜய் ஆகியோருக்கு ரெண்டு ரெண்டு.; மற்றவர்களுக்கு எத்தனை.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று 2023 ஜனவரி 1.. புத்தாண்டு பிறந்து விட்டது.

இந்த ஆண்டில் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களின் நிறைய படங்கள் வெளியாக உள்ளது.

இதில் பெரிய நடிகர்களின் படங்கள் ஒன்று அல்ல இரண்டு படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினிக்கு ‘ஜெயிலர்’ மற்றும் ‘லால் சலாம்’ ஆகிய இரு படங்கள் வெளியாக உள்ளது.

கமல் நடிப்பில் ‘இந்தியன் 2’ மற்றும் மணிரத்னம் இயக்க உள்ள ஒரு படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய்க்கு ‘வாரிசு’ படமும் லோகேஷ் இயக்க உள்ள ‘தளபதி 67’ என்ற படமும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

நடிகர் அஜித்துக்கு ‘துணிவு’ படமும் விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித்தின் 62வது படமும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

நடிகர் விக்ரமுக்கு ‘பொன்னியின் செல்வன் 2’ மற்றும் ‘தங்கலான்’ ஆகிய இரண்டு படங்கள் வெளியாகும்.

நடிகர் தனுசுக்கு ‘வாத்தி’ மற்றும் ‘கேப்டன் மில்லர்’ ஆகிய இரண்டு படங்கள் வெளியாக உள்ளது.

நடிகர் கார்த்திக்கு ‘லண்டன்’ மற்றும் ‘பொன்னியின் செல்வன் 2’ வெளியாக உள்ளது.

நடிகர் ஜெயம் ரவிக்கு ‘அகிலன்’ – ‘சைரன்’ மற்றும் ‘பொன்னியின் செல்வன் 2’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.

நடிகர் சூர்யாவுக்கு ‘வணங்கான்’ படம் டிராப் ஆகிவிட்டதால் சிறுத்தை சிவா இயக்கும் ஒரு படம் வெளியாகும்.

இவை இல்லாமல் ‘வாடிவாசல்’ என்ற படமும் வெளியாக வாய்ப்பு உள்ளது.

நடிகர் சிம்புவுக்கு ‘பத்து தல’ என்ற படம் வெளியாக உள்ளது. நடிகர் விஷாலுக்கு ‘மார்க் ஆண்டனி’ என்ற படம் வெளியாக உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனை பொருத்தவரை ‘அயலான்’ மற்றும் ‘மாவீரன்’ ஆகிய படங்கள் வெளியாகும் எதிர்பார்க்கலாம்.

நடிகர் விஜய் சேதுபதிக்கு Merry Christmas காந்தி டாக்‌ஸ் என்ற படங்கள் வெளியாக உள்ளது

ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகர் மைக் மோகனுக்கு ‘ஹரா’ என்ற படம் ரிலீஸ் ஆக உள்ளது.

Rajini Kamal and Ajith Vijay in 2023; How many others?

‘துணிவு’ வெற்றி பற்றி பேசிய வாரிசு நடிகரின் தந்தை எஸ்ஏ. சந்திரசேகர்

‘துணிவு’ வெற்றி பற்றி பேசிய வாரிசு நடிகரின் தந்தை எஸ்ஏ. சந்திரசேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று ஜனவரி 1 புத்தாண்டை முன்னிட்டு சினிமா பத்திரிகையாளர் சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஏஸ்ஏ. சந்திரசேகர்.

இந்த விழா சென்னை வடபழனியில் உள்ள விஜய்க்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் பேசும்போது..

“அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. இங்கு கலந்து கொண்டவர்களில் அனைவரும் என் இளமையின் ரகசியம் பற்றி கேட்டார்கள்.. நான் என்னுடைய இளமை காலத்தில் 30 40 வயதுகளில் இருக்கும் போது அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து விடுவேன்.

அது பிரம்ம முகூர்த்த சமயம் என்பார்கள். அந்த நேரத்தில் எழுந்து சுவாச பயிற்சி மேற்கொள்வேன்.. மூச்சை நன்றாக இழுத்து நன்றாக விடுவேன்.. கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேலாக இதை செய்து வருவேன்.

மூச்சு இல்லை என்றால் உயிர் போச்சு.. எனவே மூச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

அன்று எனக்கு கிடைத்த உற்சாகம் எனர்ஜி தான் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது என நம்புகிறேன்.

எனக்கு 80 வயதாகி விட்டது.. ஒருவர் நம்மிடம் வயதை கேட்டால் 60 ஆகிவிட்டது 70 ஆகிவிட்டது என சோர்வாக சொல்லக் கூடாது.

எனக்கு இப்பதான் 40 ஆகிறது 50 ஆகுது 60 ஆகிறது என எண்ணின் மதிப்பை குறைத்து சொல்ல வேண்டும்.. நமக்கு வயதாகி விட்டது என்ற எண்ணம் நமக்கு முதலில் வரவே கூடாது. நமது எண்ணங்களை எப்போது இளமையாக வைத்திருக்க வேண்டும்.

பெரிய நடிகரின் படங்கள் வரும்போது அவர்கள் படத்தை விளம்பரம் செய்யாமலே பத்திரிக்கை நண்பர்கள் நீங்கள் செய்து விடுகிறீர்கள்.. ஒரு நடிகர் வந்தாலோ ஒரு நடிகை வந்தாலோ அவர் அங்கு சென்றார் இங்கு சென்றார் என செய்தி வெளியிடுகிறீர்கள்.

அதுவே படத்திற்கு பிரமோஷன் ஆகிவிடுகிறது.. ஆனால் சின்ன படங்களுக்கு நீங்கள் அதுபோல செய்வதில்லை. பிரஸ் மீட் நடந்தாலும் அந்தப் படத்தை பற்றி குறிப்பிடாமல் மற்ற விஷயங்களையே சொல்கிறீர்கள்.

அதை தவிர்த்து இனியாவது.. “ஒரு நடிகரைப் பற்றி பேசினால் அவர் எந்த படத்தின் விழாவில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.. அது எந்த படம்? என்பது போன்ற தகவல்களை நீங்கள் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதன் பிறகு இறுதியாக இந்த ஆண்டு பொங்கலுக்கு இரண்டு படங்கள் (வாரிசு & துணிவு) வெளியாகிறது.. இரண்டு படங்களும் வெற்றி பெற வேண்டும்” என வாழ்த்தி பேசினார் எஸ் ஏ சந்திரசேகர்.

SAC talks about Thunivu success

ஷோபா அம்மா ஆசையை நிறைவேற்றுவாரா ‘வாரிசு’ விஜய்.??

ஷோபா அம்மா ஆசையை நிறைவேற்றுவாரா ‘வாரிசு’ விஜய்.??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் அண்மையில் ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அந்த நிகழ்ச்சியில் விஜய் வேடமிட்ட சிறுவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

இதனை கைதட்டி ரசித்துக் கொண்டிருந்தார் ஷோபா சந்திரசேகர்.

அப்போது அந்த குழந்தைகளே.. ஷோபாவிடம் விஜய் குறித்து சில கேள்விகள் கேட்டனர்.

அப்போது ஒரு சிறுவன் கேட்கும் போது.. “முன்பு இருந்த விஜய்க்கும் இப்போது இருக்கும் விஜய்க்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டார்?

முன்பு விஜய் குழந்தையாக இருந்தார் இப்போது வளர்ந்து விட்டார் என்றார்.

அடுத்த சிறுவன் விஜய் படத்தில் அம்மா வேடம் வந்த நடிப்பீர்களா? என்று கேட்டார் அதற்கு தான் காத்துக் கொண்டிருக்கிறேன்.” என்றார் ஷோபா.

தாய் பாசத்தை விஜய் நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Will ‘Varisu’ Vijay fulfill his mother’s wish .??

கருணாநிதி வாழ்க்கை படத்தை உருவாக்க பிரபல இயக்குனரை அனுகும் உதயநிதி.!?

கருணாநிதி வாழ்க்கை படத்தை உருவாக்க பிரபல இயக்குனரை அனுகும் உதயநிதி.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கையை திரைப்படமாக்க திமுகவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனையடுத்து கருணாநிதி குடும்பத்தினர் இந்த படத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி பிரபல இயக்குனர் வெற்றிமாறனை உதயநிதி அணுகி பேச உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

வெற்றிமாறன் கைவசம் தற்போது சூரி நடிக்கும் ‘விடுதலை பார்ட்-1 பார்ட் 2’ மற்றும் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ ஆகிய படங்கள் உள்ளன. எனவே அவர் ஒப்புக் கொள்வாரா ? என்பது தெரியவில்லை.

ஆனாலும் தமிழின தலைவர் கலைஞரின் வாழ்க்கை படமாக்க அவர் ஒப்புக் கொள்வார் எனவும் மற்றொரு புறம் பேசப்படுகிறது.

இந்த படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்க உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Udhayanidhi wants famous director to make Karunanidhi biopic?

More Articles
Follows