தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘வாரிசு’ படத்திற்குப் பிறகு ‘தளபதி 67’ படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
‘வாரிசு’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்ற செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
தற்போது இன்று ஜனவரி 30 ஆம் தேதி இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதுபற்றி செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ள அறிக்கையில்…
இந்த படம் தற்போது தளபதி 67 என அழைக்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். படப்பிடிப்பு ஜனவரி 2, 2023 அன்று தொடங்கியது. கத்தி, மாஸ்டர், பீஸ்ட் படங்களுக்கு அடுத்ததாக விஜய்யுடன் இணைந்து 4-வது முறையாகப் பணிபுரிகிறார் அனிருத். இதர விவரங்கள்:
ஒளிப்பதிவு – மனோஜ் பரஹம்சா
ஆக்ஷன் – அன்பறிவ்
படத்தொகுப்பு – பிலோமின் ராஜ்
கலை – சதீஷ் குமார்
நடனம் – தினேஷ்
வசனம் – லோகேஷ் கனகராஜ், ரத்ன குமார், தீரஜ் வைத்தி
‘தளபதி 67’ படத்தின் இதர நடிகர் நடிகைகள் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் அண்ணாவுடன் இணைகிறேன் என லோகேஷ் தன் ட்விட்டரில் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
OFFICIAL UPDATE : Artists working with Vijay in Thalapathy 67 is here