*சாதனாவுக்கு விருது கிடைக்கலேன்னா சினிமாவே பொய்…* – பாரதிராஜா

sadhanaராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி, தங்க மீன்கள் சாதனா ஆகியோர் நடித்துள்ள படம் பேரன்பு.

யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை பி. எல். தேனப்பன் தயாரித்துள்ளார்.

உலகத்தின் பல திரைப்பட விழாக்களில் கலந்துக் கொண்டு இப்படம் பல விருதுகளை வென்றுள்ளது.

விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் பாரதிராஜா, மிஷ்கின், கரு பழனியப்பன், கே. எஸ். ரவிக்குமார், நடிகர் சித்தார்த் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

விழாவில் இயக்குனர் பாரதிராஜா பேசியதாவது…

இன்றைய தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர்களை கண்டு வியக்கிறேன். மிஷ்கின், கரு பழனியப்பன் ஆகியோரை நான் அண்ணாந்து பார்க்கிறேன்.

அவர்களை என்னால் பார்க்க முடிகிறது. ஆனால் இயக்குனர் ராமை என்னால் பார்க்க முடியவில்லை.

ஏனென்றால் அவர் அந்த இயக்குனர்களை விட மேலே இருக்கிறார்.

இப்படத்தில் அஞ்சலி நடித்துள்ளார். மிகவும் திறமையான நடிகை.

அதுபோல் நடிகை சாதனா. தங்க மீன்கள் படத்தில் சிறுமியாக நடித்தார். இதில் வளர்ந்துவிட்டார்.

நிச்சயம் இந்தப் படத்தில் நடித்தமைக்கு அவருக்கு விருது கிடைக்கும். விருது கிடைக்கவில்லை என்றால் இந்த சினிமாவே திரையுலகமே பொய்யாகும். ” என்று பேசினார்.

பேரன்பு படத்தில் மாற்றுத் திறனாளியாக சாதனா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thanga Meengal Sadhana must get award for Peranbu says Bharathiraja

Overall Rating : Not available

Latest Post