ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் மம்மூட்டியின் *பேரன்பு*

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் மம்மூட்டியின் *பேரன்பு*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Peranbu Tamil movie will be screened in Shanghai International Film Festivalஸ்ரீ ராஜலக்ஷ்மி பிலிம்ஸ் PL. தேனப்பன் தயாரிப்பில் மெகாஸ்டார் மம்மூட்டி நடிக்கும் இயக்குநர் ராமின் பேரன்பு திரைப்படம் 21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சி (Asian Premiere) நாளை (ஜூன் 16-ம் தேதி) திரையிடப்பட இருக்கிறது.

ஜனவரி மாதத்தில் நடைபெற்ற 47-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு திரைப்படத்திற்கு கிடைத்த அங்கிகாரமும் வரவேற்ப்பும் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்திரைப்பட விழாவில் பேரன்பு திரைப்படம் மூன்று காட்சிகள் திரையிடப்படவுள்ளது.

தயாரிப்பாளர் P L தேனப்பன், இயக்குநர் ராம் மற்றும் தங்கமீன்கள் சாதனா இத்திரைப்பட விழாவில் கலந்துக் கொள்வதற்காக ஷாங்காய் சென்றுள்ளனர்.

இதில் நாயகியாக அஞ்சலி நடித்துள்ளார்.

Peranbu Tamil movie will be screened in Shanghai International Film Festival

காட்சிகள் விபரம் பின்வருமாறு:

காட்சி 1
ஜூன் 16-ம் தேதி 03:45 p.m.
ஹால் 1, ஷாங்காய் ஹாங்கௌ ஜின்யி சினிமா

காட்சி 2
ஜூன் 17-ம் தேதி 03:45 p.m.
ஹால் 7, அரோரா இன்டர்நேஷனல் சினிமா

காட்சி 3
ஜூன் 19-ம் தேதி 08:45 p.m.
ஹால் 6, தி கிராண்ட் நியூ இன்டர்நேஷனல் சினிமா

காலா தந்த வாய்ப்பு; பாலிவுட்டுக்கு செல்லும் பா.ரஞ்சித்.?

காலா தந்த வாய்ப்பு; பாலிவுட்டுக்கு செல்லும் பா.ரஞ்சித்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala director Ranjith going to Bollywood soonஅட்டக்கத்தி, மெட்ராஸ் என சிறிய பட்ஜெட் படங்களை இயக்கி கொண்டிருந்த ரஞ்சித்துக்கு ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது.

அதுவும் கலைப்புலி தாணுவின் தயாரிப்பு என்பதால் கபாலி படம் மூலம் உலகளவில் பிரபலமானார் ரஞ்சித்.
இதனையடுத்து ரஜினியின் காலா படத்தை இயக்கினார் ரஞ்சித்.

இப்படத்தில் ரஜினியுடன் நானா படேகர், ஹீமா குரேஷி, அஞ்சலி பாட்டீல் என பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இதனால் ஹிந்தி திரையுலகினரிடம் பரிச்சயமானார் ரஞ்சித்.

இந்நிலையில், பாலிவுட்டின் பல முன்னணி நிறுவனங்கள் ரஞ்சித்திடம் தங்களுக்கு ஒரு படம் செய்ய சொல்லி கேட்கிறார்களாம்.

இதுகுறித்து ரஞ்சித் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது… இதுவரை எதுவும் முடிவாகவில்லை. முடிவானவுடன் விரைவில் அறிவிப்போம்” என தெரிவித்துள்ளனர்.

Kaala director Ranjith going to Bollywood soon

மாறா படத்திற்காக மீண்டும் மாதவனுடன் இணையும் ஸ்ரத்தா ஸ்ரீநாத்

மாறா படத்திற்காக மீண்டும் மாதவனுடன் இணையும் ஸ்ரத்தா ஸ்ரீநாத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

madhavan and shraddha srinath‘இறுதிச்சுற்று’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து விட்டார் மாதவன்.

இதனயைடுத்து அவரது நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படமும் சூப்பர் ஹிட்டானது.

இதில் மாதவனுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார்.

இந்நிலையில் இந்த ஜோடி மீண்டும் புதிய படம் மூலம் இணையவுள்ளது.

அறிமுக இயக்குனர் திலிப் குமார் இயக்கவுள்ள ‘மாறா’ படத்தில்தான் இந்த ஜோடி இணைகிறது.

ஜிப்ரான் இசையமைக்க, விரைவில் இப்பட சூட்டிங் தொடங்கவுள்ளதாம்.

விஜயகாந்துக்கு நன்றி கடன் செலுத்த படம் தயாரிக்கும் விஜய்

விஜயகாந்துக்கு நன்றி கடன் செலுத்த படம் தயாரிக்கும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and vijayakanthஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது விஜய் தன் 62வது படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் சினிமாவில் அறிமுகமாகும் போது அவருடைய படங்கள் சரியாக ஓடவில்லை.

அப்போது அவருக்கு பக்கபலமாக விஜயகாந்த் இருந்தார்.

தற்போது அந்த நன்றிக்கடனை செலுத்தும் விதகமா விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ஒரு படத்தை விஜய் தயாரிக்கவுள்ளாராம்.

இதற்காக விஜய் புதிதாக ஒரு பட நிறுவனத்தை ஆரம்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம் இளைய தளபதி.

விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

ரஜினிகாந்துடன் இணையும் காமெடியன் முனீஷ்காந்த்

ரஜினிகாந்துடன் இணையும் காமெடியன் முனீஷ்காந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and munishkanthகாலா படம் வெளியான அன்றே கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள டேராடூன் சென்றுவிட்டார் ரஜினிகாந்த்.

இப்படத்தின் சூட்டிங் அங்கு 30 நாட்கள் நடைபெறவுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

தற்போதே இந்த பாடல்கள் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது காமெடி நடிகர் முனிஷ்காந்தும் இணைந்துள்ளார்.

இவர் நடித்த முண்டாசுபட்டி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த படத்தில் இவர் ரஜினிகாந்த் ரசிகராக சினிமா வாய்ப்புக்காக முனீஷ்காந்த் என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

அன்று முதல் இவருடைய ஒரிஜினல் பெயரான ‘ராமதாஸ்’ என்ற பெயரில் யாரும் இவரை அழைப்பது இல்லையாம்.

கமலின் பிக்பாஸ் வீட்டில் மும்தாஜும் முரட்டு குத்து நடிகையும்

கமலின் பிக்பாஸ் வீட்டில் மும்தாஜும் முரட்டு குத்து நடிகையும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mumtaj and yashika anandகடந்தாண்டு தமிழகத்தில் எத்தனையோ நிகழ்வுகள் பிரபலமானாலும், கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி சிட்டி முதல் பட்டி வரை படு பிரபலமானது.

இந்த முதல் சீசனில் ஆரவ் டைட்டில் வின்னர் ஆனார்.

இந்த சீசனில் பங்கேற்ற பலருக்கும் தற்போது சினிமா வாய்ப்புகள் வந்து குவிந்துள்ளன.

தற்போது இதன் இரண்டாவது சீசன் வருகிற ஜீன் 17-ம் தேதி முதல் ஆரம்பமாகிறது.

இந்த சீசனையும் கமலே தொகுத்து வழங்குகிறார்.

இது தொடர்பான புரோமோக்கள் தற்போது விஜய் டிவியில் கலக்கி வருகிறது.

இந்நிலையில் இந்த பிக்பாஸ் 2 போட்டியில் கவர்ச்சி நடிகை மும்தாஜ் மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து பட புகழ் யாஷிகா ஆனந்தும் இணைந்திருக்கிறார்களாம்.

More Articles
Follows