தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் மம்மூட்டி தற்போது இயக்குனர் ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ள மலையாளத் திரைப்படம் ‘பிரமயுகம்’ நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் மற்றும் அமல்டா லிஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியரிடர் இசையமைத்துள்ளார்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள ‘பிரமயுகம்’ திரைப்படம் 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், ‘பிரமயுகம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த படப்பிடிப்பு ஒட்டப்பாலம், கொச்சி, அதிரப்பள்ளி போன்ற இடங்களில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘பிரமயுகம்’ படத்தின் படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.
Mammootty starrer ‘Bramayugam’ shoot wraps up