பேட்ட & விஸ்வாசத்தை விட பேரன்பு பெருசா ஓடனும்.. ; மிஷ்கின் ஆசை

director mysskinசீயோன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பொது நலன் கருதி’.

இதில் கருணாகரன், யோக் ஜபீ, இமான் அண்ணாச்சி, சந்தோஷ் பிரதாப், ஆதித், அனு சித்தரா, சுபிக்ஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதன் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சற்றுமுன் சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

இவ்விழாவில் மிஷ்கின் பேசியதாவது…

பொது நலன் கருதி படத் தலைப்பிலேயே இயக்குனரின் நல்ல எண்ணம் தெரிகிறது.

பத்திரிகையாளர்கள் நல்ல படத்திற்கு எப்போதும் ஆதரவு தருவார்கள்.

அண்மையில் பேரன்பு படம் பார்த்தேன்.

இதுபோன்ற நல்ல படங்களை பார்த்து விட்டு அது போன்ற வாதம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் சிறிது நேரம் நம் குழந்தைகளை விளையாட சொல்ல வேண்டும்.

பேட்ட & விஸ்வாசம் படங்கள் ஓடனும். அதே வேளையில் பேரன்பு படம் பெருசா ஓடனும்..” என்று பேசினார் மிஷ்கின்.

Overall Rating : Not available

Latest Post