தமிழ் ஹீரோஸ் நல்லா நடிச்சா நாங்க ஏன் நடிக்க வர்றோம்? – கரு.பழனியப்பன்

If Tamil heros act in good manner directors wont be actors says Karu Pazhaniappanதரமணி படத்தை தொடர்ந்து ராம், யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைந்துள்ள படம் பேரன்பு.

பி.எல். தேனப்பன் தயாரித்துள்ள இப்படத்தில் மம்மூட்டி, அஞ்சலி, தங்க மீன்கள் சாதனா ஆகியோர் நடித்துள்ளனர்.

பல திரைப்பட விழாக்களில் கலந்துக் கொண்டு இப்படம் பல விருதுகளை வென்றுள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் பாரதிராஜா, மிஷ்கின், கரு பழனியப்பன், கே. எஸ். ரவிக்குமார், நடிகர் சித்தார்த் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

நடிகர் சித்தார்த் பேசும்போது..

தமிழ் சினிமாவில் உள்ள நல்ல இயக்குனர்கள் அனைவரும் நடிக்க வந்துவிட்டார்கள். ஏன்யா இப்படி நடிச்சு கொல்றீங்க? என்றார்.

அதன்பின்னர் கரு. பழனியப்பன் பேச வந்தார். அவர் சித்தார்த்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசினார்.

இந்த பேரன்பு படத்தில் மம்முட்டி அருமையான நடிப்பை கொடுத்துள்ளார். நாங்கள் படத்தை பார்த்து விட்டோம்.
நல்ல நல்ல இயக்குனர்கள் எல்லாம் நடிக்க வந்துவிட்டார்கள் என்றார் சித்தார்த்.

மம்மூட்டி போல நம்ம ஹீரோஸ் எல்லாம் நடிச்சிட்டிங்கன்னா நாங்க ஏன்யா? நடிக்க வர்றோம்.” என்று பேசினார்.

If Tamil heros act in good manner directors wont be actors says Karu Pazhaniappan

Overall Rating : Not available

Latest Post