மம்மூட்டியை பிடிக்க முடியல.. அதனால் பசுபதி கிடைச்சிட்டார் – ராம் சங்கையா

மம்மூட்டியை பிடிக்க முடியல.. அதனால் பசுபதி கிடைச்சிட்டார் – ராம் சங்கையா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம் சங்கையா இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘தண்டட்டி’. பசுபதி ரோகினி விவேக் பிரசன்னா அம்மு அபிராமி நடித்துள்ள இந்த படம் ஜூன் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர் ராம் சங்கையா பேசும்போது…

“தண்டட்டி படத்தின் ஆரம்ப புள்ளி எங்கே ஆரம்பித்தது என்று தெரியாது. ஆனால் இது ஒரு மிகப்பெரிய பயணம். பொதுவாக விநாயகரை வணங்கி வேலையை தூங்குவார்கள். ஆனால் எனக்கு விநாயகருக்கு பதிலாக வெங்கடாஜலபதியே கிடைத்தார் என்பது போல பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

இதற்கு முழு காரணமாக இருந்தவர் இணை தயாரிப்பாளர் ஏ.வெங்கடேஷ் தான். இந்த கதையை கேட்டதுமே தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் உடனே ஓகே செய்தார். எந்த பிரச்சினை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என ஊக்கம் கொடுத்தார். எனக்கு இது ஒரே ஒரு படம் தான்.. ஆனாலும் அந்த சமயத்தில் அவர் பல படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வந்தாலும் கூட ஒவ்வொரு படத்திற்கும் என தனித்தனி கவனம் ஒதுக்கி அனைத்தையும் நினைவில் வைத்து அதுகுறித்து பேசும்போது ஆச்சரியமாக இருக்கும்.

நான் நேசிக்கும் நடிகர்களில் பசுபதியும் ஒருவர். இந்த படத்திற்கு நான் மம்முட்டி அல்லது பசுபதி என இரண்டு பேரை மட்டுமே மனதில் வைத்திருந்தேன். மம்முட்டியை பிடிக்க முடியவில்லை. ஆனால் எனக்கு பசுபதி கிடைத்து விட்டார்.

ஒவ்வொரு நடிகரும் ஒவ்வொரு விஷயத்திற்காக நடிக்க கூடியவர்கள். ஆனால் பசுபதி திரைக்கதைக்காக நடிப்பவர். கலைத்துப் போடப்பட்ட இந்த படத்தின் திரைக்கதையில் நேர்கோடான நடிப்பை அவர் வழங்கியுள்ளார். அவர் நடித்த படங்களில் மிகச்சிறந்ததாக இந்த தண்டட்டி இருக்கும்.

ஒரு படத்தில் வடிவேலு சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என காமெடி செய்திருப்பார். அதுபோல இந்த படத்தில் நடிகை ரோகிணி பிணமாக அமர்ந்தபடி மிக அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். அவரை சுற்றி இருப்பவர்கள் வெவ்வேறு விதமான நடிப்பு, கூச்சல் என்று இருந்தாலும் சில இடங்களில் நான் கட் சொல்ல மறந்து விட்டாலும் கூட அவர் மூச்சை பிடித்துக்கொண்டு அந்த கதாபாத்திரமாகவே கவனம் கொண்டிருந்தார்.

அம்மு அபிராமி இந்த படத்திற்கு ஐந்து நாட்கள் கால்ஷீட் கொடுத்தார். ஆனால் இரவு பகலாக நடித்து இரண்டே நாட்களில் அவரது வேலையை முடித்து விட்டார். இந்த படத்தில் நடித்துள்ள தண்டட்டி அப்பத்தாக்கள் படப்பிடிப்பிலும் சரி டப்பிங்கிலும் சரி.. என்னை வச்சு செஞ்சுட்டாங்க.. நான் படப்பிடிப்பில் அவர்களை திட்டுவேன்.

ஒரு குழந்தை போல என்னிடம் கோபித்துக்கொண்டு ஓரமாக அமர்ந்து விடுவார்கள். பின்னர் அவர்களை சமாதானம் செய்து நடிக்க வைப்பேன். எல்லா முதல் பட இயக்குநர்களுக்கும் மகேஷ் முத்துசாமி போல ஒரு ஒளிப்பதிவாளர் கிடைத்துவிட்டால் போதும். சுந்தரமூர்த்தி நகரத்து பின்னணியில் வளர்ந்தவர் என்றாலும் கிராமத்து இசையை எளிதாக உள்வாங்கி அற்புதமாக இசையமைத்துள்ளார்.

இந்த படத்திற்காக கிராமங்களில் சில வீடுகள் தேவைப்பட்டபோது சம்பந்தப்பட்டவர்களின் கதை சொல்லி வீடு கேட்போம். அவர்கள் வீடு கொடுப்பதற்கு முன்பே ஒப்பாரி வைக்கும் காட்சிகள் ஏதும் இருக்கிறதா என்று விசாரித்து விட்டுதான் அனுமதி கொடுத்தார்கள். அப்படி ஒரு வீட்டில் படப்பிடிப்பு நடத்திய சமயத்தில் அந்த வீட்டில் இருந்த பெண்ணுக்கு திடீரென திருமணம் ஏற்பாடு ஆகிவிட்டது.

அதற்கடுத்து படப்பிடிப்பிற்கு போனபோது கல்யாண வீட்டில் வந்து ஒப்பாரி வைக்கிறீர்கள் என வீடு கொடுக்க மறுத்து விட்டார்கள். இதுபோன்ற பல சுவாரஸ்ய நிகழ்வுகள் இந்த படத்தின்போது நடந்துள்ளது” என்றார்.

Pasupathy replaced Mammootty place says Ram Sangaiya

நான் சினிமாவில் இருப்பதற்குக் காரணமே தர்புகா சிவா தான் – கிஷன் தாஸ்

நான் சினிமாவில் இருப்பதற்குக் காரணமே தர்புகா சிவா தான் – கிஷன் தாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் படம் ‘தருணம்’.

இன்று படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள பூஜையுடன் இனிதே துவங்கியது.

இந்த நிகழ்வில் நடிகர் கிஷன் தாஸ் பேசியதாவது..

நான் இன்னும் புதுமுகம் தான். இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் கதை சொல்லும்போதே முதலிலிருந்தே இந்தப்படத்தைப் பெரிய படமாக ட்ரீட் செய்யலாம் என்றார்.

இப்போதே மோஷன் போஸ்டர், புரமோ வீடியோவுடன் ஆரம்பித்துள்ளோம். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

நான் திரைத்துறையில் இருப்பதற்குக் காரணமே தர்புகா சிவாதான், அவருக்கு என் நன்றி. அவர் இந்தப்படத்திற்கு இசையமைப்பது மகிழ்ச்சி. கண்டிப்பாக இந்தப்படம் பெரிய வெற்றிப்படமாக அமையும் நன்றி.

தயாரிப்பாளர் புகழ் பேசியதாவது…

அரவிந்த் ஶ்ரீநிவாசனுடன் என் நட்பு 18 வருடங்களுக்கு மேலானது. ஒரு நல்ல படைப்பைத் தரவே நாங்கள் உழைக்கிறோம். அரவிந்த் ஶ்ரீநிவாசன் என் நண்பர் என்பதால் எனக்காக இன்னும் கடினமாக உழைக்கிறார்.

அவர் மணிரத்னம், கௌதம் மாதிரி படம் பண்ண வேண்டும் என்று சொல்வார். இந்தப்படம் அந்த கனவை நனவாக்கும். மிக நல்ல படக்குழு எங்களுக்கு அமைந்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

I’m here in Cinema because of Darbuka Siva says Kishandas

சம்பளம் பத்தி பேசவே இல்ல..; என் மனைவி கிஷன் ரசிகை – அருள் சித்தார்த்

சம்பளம் பத்தி பேசவே இல்ல..; என் மனைவி கிஷன் ரசிகை – அருள் சித்தார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் படம் ‘தருணம்’.

இன்று படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள பூஜையுடன் இனிதே துவங்கியது.

இப்படத்தினை ஆர்கா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் இணை தயாரிப்பு செய்கிறது.

இந்த நிகழ்வில் எடிட்டர் அருள் இ சித்தார்த் பேசியதாவது…

என்னைப் புதுமுகம் என்ற தயக்கமும் இல்லாமல் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் எனக்கு ‘தேஜாவு’ படத்தில் வாய்ப்பு தந்தார். இந்தப்படம் பற்றிச் சொன்னபோது சம்பளமே பேச வேண்டாம் நான் செய்கிறேன் என்றேன்.

கிஷனுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என் மனைவி அவரின் ரசிகை. இந்தப் படம் செய்வது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜி பேசியதாவது…

இந்தப்படம் படப்பிடிப்பிற்காக ஆவலுடன் உள்ளேன். இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசனுடன் ரொம்ப காலமாக வேலை செய்வதற்காகப் பேசிக்கொண்டிருந்தோம். கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் உடன் பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வாய்ப்பிற்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன் நன்றி

நடிகை ஸ்மிருதி வெங்கட் பேசியதாவது..,

எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசனுக்கு நன்றி. இந்தப்படத்தில் இதுவரை செய்யாத கதாப்பாத்திரம். முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இந்தப்படம் பெரிய வெற்றிபெறும் என நம்புகிறேன் அனைவருக்கும் நன்றி.

Editor Arul Siddharth talks about Dejavu and Tharunam

டைரக்டர் என் லிங்குசாமி – கனிமொழி எம்.பி திடீர் சந்திப்பு.; ஏன் தெரியுமா.?

டைரக்டர் என் லிங்குசாமி – கனிமொழி எம்.பி திடீர் சந்திப்பு.; ஏன் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் லிங்குசாமி தலைமையில், கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவாக கடந்த 2022ல் முதல் ஹைக்கூ கவிதை போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் வென்றவர்களுக்கு சன்மானம் வழங்கப்பட்டதுடன் இதில் வென்ற 50 ஹைக்கூ கவிதைகளும் புத்தகமாக தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

முதல் வருட துவக்க விழாவில் நாடாளுமன்ற உறுப்பினரும் கவிஞருமான கனிமொழி எம்.பி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை இரண்டாவது வருட நிகழ்வும் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த நிலையில் இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி அவர்களை நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து இயக்குனர் லிங்குசாமி கூறும்போது…

“கவிஞர் கனிமொழி கடந்த வருடம் துவங்கி வைத்த முதல் வருடத்திய ஹைக்கூ போட்டியில் வெற்றி பெற்ற ஹைக்கூ கவிதைகள் தொகுக்கப்பட்ட புத்தகத்தை அவரிடம் வழங்கினேன்.

இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக முதல் வருடம் நிறைவடைந்து உள்ளது என்கிற மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு நன்றியையும் தெரிவித்தேன்.

மேலும் கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவதால் எனது வாழ்த்துக்களையும் கனிமொழி எம்.பியிடம் தெரிவித்தேன். இந்த சந்திப்பின்போது கவிஞர் அறிவுமதியும் உடன் இருந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி” என்று கூறினார்.

Director Lingusamy met DMK MP Kanimozhi

உலகத்தின் பிரபலமான இடத்தில் பிரபாஸ் நடித்த ‘ஆதி புருஷ்’ முன்னோட்டம்

உலகத்தின் பிரபலமான இடத்தில் பிரபாஸ் நடித்த ‘ஆதி புருஷ்’ முன்னோட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான திருப்பதியில், நடிகர் பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

உலகம் முழுவதும் பிரபலமான திருப்பதியில், பிரம்மாண்டமான முறையில் ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது.

ஆதி புருஷ்

லட்சக்கணக்கில் திரண்டிருந்த பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நடிகர்கள் பிரபாஸ், கிருத்தி சனோன், சன்னி சிங், தேவதத்தா நாகே, தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், இயக்குநர் ஓம் ராவத், பாடலாசிரியர் மனோஜ் முண்டாஷீர், இசையமைப்பாளர்கள் அஜய்- அதுல் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்துகொண்டு, முன்னோட்டத்தை வெளியிட்டனர்.

ஆதி புருஷ்

சீதையை மீட்டெடுக்க ராமன், வானர சேனையுடன் அசாதாரணமான பயணத்தை மேற்கொள்வதையும், தீமையின் மீது நன்மையின் வீரம், சக்தி மற்றும் வெற்றியின் ஒரு பார்வையையும் முன்னிறுத்தும் இந்த முன்னோட்டம், இம்மாதம் பதினாறாம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது.

‘ஆதி புருஷ்’ படத்தினைக் காண்பதற்கான ஆவலை பார்வையாளர்களிடத்தில் மேலும் தூண்டி இருக்கிறது.

ஆதி புருஷ்

இந்த முன்னோட்ட வெளியீட்டு விழாவில் திரண்டிருந்த பிரபாஸின் ரசிகர்களின் கரவொலி மற்றும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற வாசகத்தின் குரலொலி, விண்ணை பிளந்தது. இவ்விழாவின் போது நடைபெற்ற வானவேடிக்கை, ரசிகர்களின் கொண்டாட்ட உணர்வை பிரதிபலித்தது.

இந்நிகழ்வு, வரலாற்றில் பொன்னான அத்தியாயத்தை உண்டாக்கியது. குறிப்பாக இளைஞர்களின் உற்சாகத்தை உத்வேகப்படுத்தியது.

ஆதி புருஷ்

மேலும் ரசிகர்கள் தங்கள் மனம் கவர்ந்த நடிகரான பிரபாஸை, ராமனாக திரையில் காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

‘ஆதி புருஷ்’ திரை

ப்படம், காவிய கதை என்பதாலும், இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நட்சத்திர கலைஞர்களின் கூட்டு முயற்சி, பரவசமான சினிமா அனுபவத்தை வழங்கும் என்பதனை உறுதிப்படுத்துகிறது.

ஆதி புருஷ்

மேலும் இந்த திரைப்

படம், பார்வையாளர்களின் இதயங்களிலும், மனதிலும் அழியாத அடையாளத்தை உண்டாக்கும்.

ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தை டி சீரிஸ் பூஷன் குமார் & கிரிஷன்குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார், ரெட்ரோ ஃபைல்ஸின் ராஜேஷ் நாயர், யுவி கிரியேஷன்ஸின் பிரமோத் மற்றும் வம்சி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படம் ஜூன் 16ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

ஆதி புருஷ்

Adipurush Final Trailer unveiled at Tirupati in one of the grandest manner ever

நாடகத்திற்கும் படப்பிடிப்பு : இராஜேந்திர சோழனாக ஆச்சர்யப்படுத்தும் ஆதேஷ்பாலா.; ஆர் யூ ரெடி.?

நாடகத்திற்கும் படப்பிடிப்பு : இராஜேந்திர சோழனாக ஆச்சர்யப்படுத்தும் ஆதேஷ்பாலா.; ஆர் யூ ரெடி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் நாடு அரசு இயல் இசை நாடக மன்றம் மற்றும் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து அதன் ஆதரவுடன்
மாபெரும் மேடை நாடகமாக வருகிறது மன்னர் ராஜராஜ சோழன் வாழ்க்கை வரலாறு.

சென்னை யோகஸ்ரம் டிரஸ்டியின் சார்பாக அதன் நிறுவனர் டாக்டர் ஏ பி வைத்தீஸ்வரன் புதிதாக துவங்கி உள்ள நாடக தயாரிப்பு நிறுவனம் தான் சென்னை ட்ராமாஸ், இதில் முதல் படைப்பாக வருகிறது மும்முடி சோழன் வரலாற்று நாடகம்.

“உன்னோடு கா’ திரைப்பட இயக்குனர் தஞ்சை RK இந்த வரலாற்று நாடகத்தை மேடையில் ஒரு சினிமாவை காட்ட வேண்டும் என்ற முயற்சியில் நாடக ஆக்கம் மற்றும் வசனம் எழுதி உள்ளார்.

நாம் கேட்ட வரை இதன் கதை என்பது, மன்னராக பதவியில் தொடங்கி அரசியல், ஆன்மிகம், தற்சார்பு முறை என தலைமுறைகள் வாழ, பாதை வகுத்து தந்த இராஜராஜன் தன் வாழ்விலே எப்படி சிவனடியாராக நிலை கொண்டார், என்பதை மிக பிரமாண்ட முறையில் அதிக பொருட் செலவில் மேடையில் அரங்கேற்றப்படும் நாடகம் தான் இந்த மும்முடி சோழன்.

ஆதேஷ் பாலா

இதை பற்றி நடிகர் ஆதேஷ் பாலா நம்மிடம் சொல்லும் போது..

“சமூக நாடகம் சினிமாவில் நடிப்பதை விட இந்த வரலாற்று நாடகத்தில் நடிப்பது மாபெரும் சவால் என கூறினார்.

இதில் தான் நடிக்கும் முக்கிய கதாபாத்திரமான இராஜேந்திர சோழன் மக்களின் மனதை விட்டு நீங்காத வரலாற்று மன்னன். அப்படி ஒரு கதாபாத்திரம் தான் ஏற்று நடிப்பதில் தனக்கு பெருமை என உணர்வு பொங்க பேசினார்.

மேலும் நாடகத்தின் முன்னோட்டமாக எடுக்கப்பட்ட படப்பிடிப்பில் இராஜேந்திர சோழன் குதிரையில் வரும் சிறப்பு காட்சிக்காக குதிரை ஏற்றம், வாள் பயிற்சியை முறையாக கற்று நடிப்பதாக மகிழ்வுடன் கூறினார்.

இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் திரைப்பட நடிகர் வாகை சந்திரசேகர் அவர்களின் பார்வையில் இந்த நாடகம் தொடர்பாக இதன் கலைஞர்களை அழைத்து பாராட்டியது கூடுதல் சிறப்பு என நாடக குழுவினர்கள் மகிழ்ந்தனர்.

இந்த நாடகத்தில் வரும் சிறப்பு பாடலை திரைப்பட இசையமைப்பாளர்
தாஜ்நூர் இசை அமைத்துள்ளார்.

நாமும் ஜூன் 10 வரும் சனி கிழமை இராஜாஅண்ணாமலை மன்றத்தில் மாலை 6 மணிக்கு இந்த நாடகத்தை கண்டு மகிழ்வோம், தமிழனின் நாடக கலை வளர்ச்சி கண்டு பெருமை கொள்வோம்.

நடிகர்கள்

இராஜ ராஜசோழன் – ‘முத்துக்குமார்’

பஞ்சவன் மாதேவி – ‘சுஜாதா பாபு’

கருவூரார் சித்தர் – ‘ஏ. பி. வைத்தீஸ்வரன்’

குந்தவை நாச்சியார் – ‘ரேவதி’

இராஜேந்திர சோழன் – ஆதேஷ் பாலா

முதன்மை அமைச்சர் – விவேக்சின்ராசு
சேனாதிபதி – மு.அருண் குமார்
மந்திரி – தினேஷ்
ரவிதாசன் – சிங்கராஜா
பரமேஸ்வரன் – கணேசன்
சோமன் – ரமனன்
பாஸ்கர ரவி வர்மன் – பிரபாகரன்
மேலை சாளுக்கிய மன்னன் – விஜயகுரு

ஆதேஷ் பாலா

Aadesh Bala starring First time shoot for stage play

More Articles
Follows