தளபதி 63-க்காக விளையாட்டு மைதான செட் அமைக்கும் அட்லி

thalapathy 63தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு விஜய்யை மீண்டும் இயக்கவுள்ளார் அட்லி.

இப்படத்தை 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளார் கல்பாத்தி அகோரம்.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, யோகி பாபு, விவேக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இப்படம் ஒரு விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் சூட்டிங்கை 2019 ஜனவரி மாதத்தில் தொடங்கவுள்ள நிலையில், சென்னை புறநகர் பகுதியில் ஒரு விளையாட்டு மைதான செட்டை அமைத்து வருகிறாராம் அட்லி.

Overall Rating : Not available

Latest Post