பூஜை போட்டாச்சு.; அட்லி இயக்கும் “தளபதி 63” பட முக்கிய அறிவிப்பு

Thalapathy 63 movie pooja happened Official announcement today eveningஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் கடந்த 6ஆம் தேதி வெளியானது.

தமிழக அரசியலில் பல சர்ச்சைகளை கிளப்பிய இப்படம் இன்றும் வெற்றிக்கரமாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து தனது 63ஆவது படத்திற்காக மீண்டும் அட்லியுடன் இணைகிறார் விஜய்.

ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் வெளியான தெறி மற்றும் மெர்சல் ஆகிய இரு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இப்படத்தின் பணிகள் இன்று மைலாப்பூரில் உள்ள ஒரு கோயிலில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாக உள்ளது.

இப்படத்திற்கு ஆளப்போறான் தமிழன் என பெயரிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாயகியாக சமந்தா அல்லது நயன்தாரா அல்லது கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thalapathy 63 movie pooja happened Official announcement today evening

Overall Rating : Not available

Related News

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 63…
...Read More
சென்னையில் கிரிக்கெட் விளையாட்டு நடைபெற்ற போது…
...Read More

Latest Post