தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அட்லி இயக்கும் தளபதி 63 படத்தில் விஜய்யுடன், நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, சவுந்தரராஜா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
வருகிற ஜீன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட உள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 21ம் தேதி மாலை 6 மணிக்கும், 2வது லுக் போஸ்டர் 21ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கும் வெளியாகவுள்ளது.
இத்தகவலை இப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார்.
ஆக.. விஜய் பிறந்தநாளில் அவரது ரசிகர்களுக்கு மெகா ட்ரீட் காத்திருக்கிறது எனலாம்.